Header Ads



முஹம்மது நபி பிரச்­சி­னை­களை தூண்டும், விதத்தில் வழி­காட்­ட­வில்லை - தம்பர அமில தேரர்

-SNM.Suhail-

நாட்டில் திட்­ட­மிட்டு இன­வாத சூழ­லொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்ள நிலையில் இன்­றைய முஸ்லிம் அர­சியல் தலை­மைகள், இலங்கை தேசத்தின் மீது பற்றும் நாட்டின் நலன் மற்றும் இன ஐக்­கி­யத்­திற்­காக உழைத்த ரி.பி.ஜாயாவின் வழி­மு­றை­களை பின்­பற்ற வேண்டும் என ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் தம்பர அமிலதேரர் தெரி­வித்தார்.

அத்­துடன் சிங்­கள அர­சியல் தலை­மைகள் தேசபிதா டி.எஸ்.சேனநா­யக்­க­விடம் இன நல்­லி­ணக்கம் குறித்து அதி­க­ மாக கற்­க­வேண்­டி­யுள்­ள­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

புர­வெசி பலய அமைப்பினர் கொழும்பில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே தம்­பர அமில தேரர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், 

அர­சி­யலில் ஐம்­ப­துக்கு ஐம்­பது என சம அந்­தஸ்த்து கேட்டு ஆரம்­பிக்­கப்­பட்ட ஈழப்போர் இறு­தியில் முள்ளிவாய்க்­காலில் முடிந்த சோகத்தை நினை­வு­கொள்ள வேண்டும். 

இவற்­றுக்கு பிர­தான காரணம் நாட்டின் டி.எஸ்.சேனா­நா­யக்க மற்றும் ரி.பி.ஜாயா போன்றோர் நாட்­டிற்கு சுதந்­திரம் பெற்­றுக்­கொ­டுக்­கும்­போது பொறுப்­புடன் இன ஐக்­கி­யத்­திற்­கான இட்ட அடித்­தளம் ஆட்டம் கண்­ட­மை­யே­யாகும்.

நாட்டின் நலனை காக்கும் பொறுப்பு முஸ்லிம் தலை­மை­க­ளுக்கும் இருக்­கி­றது. அதே­போன்று சிங்­கள தலை­மை­க­ளுக்கும் இருக்­கி­றது. அவர்கள் அந்த பொறுப்பை சரி­வரச் செய்ய வேண்டும்.

சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் தேசிய ஒரு­மைப்­பாட்டை ஏற்­ப­டுத்த முடி­யாமல் போனமை எமது பெரும் தோல்­வி­யாகும்.

2015 ஜன­வ­ரியில் தேசிய ஒரு­மைப்­பாடை ஏற்­ப­டுத்தும் முக­மாக இரு தேசிய கட்­சி­களும் இணைந்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. நாட்டில் இன ஒற்­று­மையை ஒரு­வாக்கி தேசிய ஒரு­மைப்­பாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தாக உறு­தி­ய­ளித்தே மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் ஆட்­சியை கைப்­பற்­றினர்.

எனினும் பொது­ப­ல­சேனா, சிங்­கள ராவய உள்­ளிட்ட அமைப்­புக்கள் அதனை சீர்­கு­லையச் செய்­கின்­றன.

நாட்டில் சிங்­கள பெளத்­தர்­களே முதன்­மை­யா­ன­வர்கள் அவர்கள் எப்­போதும் மேல் மட்­டத்தில் இருக்க வேண்டும் ஏனைய சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அந்­தஸ்த்து வழங்க முடி­யாது என அவர்கள் நினைக்­கின்­றனர். இது முற்­றிலும் தவ­றாகும். புத்­தரின் போத­னை­க­ளுக்கு எதி­ரா­ன­தாகும்.

அதே­போன்று முஹம்மத் நபி அவர்­களும் சமூ­கத்தில் பிரச்­சி­னை­களை தூண்டும் விதத்தில் வழி­காட்­ட­வில்லை. அவர் பெரும் கஷ்­டங்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே இஸ்­லாத்தை போதித்தார்.

நாட்டில் இன, மதவாதத்தை தோற்­று­விப்­ப­வர்கள் உண்­மை­யான யேசுவை வணக்­கு­ப­வ­னாக இருக்க முடி­யாது. இப்­படி உலகில் சிறந்த வழி­காட்­டல்­களை தந்­தி­ருக்கும் மதங்­களை பின்­பற்றும் நாட்டில் நாம் வாழ்­கின்றோம். இந்த அழ­கிய கலா­சா­ரத்தை நாம் பாது­காக்க வேண்டும்.

தீவி­ர­வாதம் வேறு இஸ்லாம் வேறு. எல்லா சமூ­கத்­திலும் தீவி­ர­வா­திகள் இருக்­கத்தான் செய்­கின்­றனர். ஆனால் இலங்கை முஸ்­லிம்கள் தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பில்­லா­த­வர்கள். 

இந்த விட­யத்தை சமூ­கத்­திற்கு கொண்டு செல்லும் பொறுப்பு மதத் தலை­வர்­க­ளுக்கும் அர­சியல் தலை­வர்­க­ளுக்­குமே இருக்­கி­றது.  மஹிந்த ராஜ­பக் ஷ நாட்டில் பயங்­க­ர­வா­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்தார். ஆனால் அவரால் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­ய­வில்லை. நாட்டில் பல­வேறு அபி­வி­ருத்­தி­களை மேற்­கொண்­டாலும் இன­வா­தி­க­ளுக்கு துணை­போ­ன­மையால் அவரின் ஆட்­சியை மக்கள் வீழ்த்­தினர்.

இந்த வீழ்ச்சி 2014 இல் அளுத்­க­மயில் அன­வா­திகள் கட்­ட­விழ்த்­து­விட்ட வன்­மு­றை­களில் இருந்து ஆரம்­ப­மா­னது. இந்த அர­சாங்­கமும் இன­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்­தா­விடின் இவர்­களும் வீட்­டுக்கு செல்ல நேரிடும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரியும் பிர­தமர் ரணிலும் இன­வாத்தை வைத்து அர­சியல் நடத்­தி­ய­வர்கள் அல்லர். அவர்கள் இன, மதவாதத்­திற்கு துணை போக மாட்­டார்கள் என்ற நம்­பிக்கை இருக்­கி­றது. எனினும் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வதில் தாமதம் ஏற்­ப­டு­வது பெரும் சிக்­கல்­களை தோற்­று­வித்­துள்­ளது.

பிக்­கு­க­ளுக்கும் முஸ்லிம் மத தலை­வர்­க­ளுக்கும் பொறுப்பு இருக்­கி­றது. அவர்­களின் பேச்சில் நளினம் இருக்க வேண்டும். பொது­ப­ல­சேனா போன்ற அமைப்­பி­லி­ருக்கும் பிக்­கு­களின் பேச்சு மிகவும் மோச­மா­ன­தாக இருக்­கி­றது. கொன்­று­வி­டுவேன், வெட்­டுவேன், குத்­துவேன், அடிப்பேன் என்றெல்லாம் பேசுகின்றனர்.

இது நல்லிணக்கத்தைப் பெரிதும் பாதிக்கும். எனவே இந்நாட்டில் அனைவரும் இலங்கையன் என்ற ரீதியில் தேச ஒருமைப்பாட்டிற்காக பாடுபடவேண்டும் என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய சூறாசபை பிரதித் தலைவர் ஜாவிட் யூசுப், நவசமசமாஜகட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன, கொழும்பு பெரிய பள்ளிவாசலின் செயலாளர் தஸ்லிம் மெளலவி மற்றும் பேராசிரியர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

4 comments:

  1. Sri Lanka need these kind of knowledgeable religiou leaders in all community... then only people will be guided on correct path.... what a valuable statement...

    ReplyDelete
  2. காவி உடையை தாண்டி நாளும் கற்ற அறிவும் இருக்கிறது...வாழக்...

    ReplyDelete
  3. Well said ven.amila thera. A real schollar.

    ReplyDelete

Powered by Blogger.