Header Ads



"அளுத்­கம" 3 வரு­டங்கள் கடந்தும்...?


எமது நாட்டு முஸ்­லிம்­களின் வர­லாற்றில் இன்­றைய நாள் மறக்க முடி­யாத நாளாகும். தீயினால் முஸ்லிம் சமூ­கத்தின் வர்த்­த­கத்தை சுட்­டெ­ரித்து இரத்தக் கறை படிந்த அந்த நாள் இன்று மூன்­றா­வது வரு­டத்தில் காலடி வைத்­தி­ருக்­கி­றது. 2014 ஜூன் 15 ஆம் திகதி அளுத்­க­மயில் இன­வா­தி­களால் அரங்­கேற்­றப்பட்ட அந்தச் சம்­ப­வத்தின் சூத்­தி­ர­தா­ரிகள் இன்­று­வரை சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வில்லை.

இன்­றைய நல்­லாட்சி அர­சாங்கம் அளுத்­கமயில் முஸ்­லிம்கள் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­செ­யல்­களை மைய­மாக வைத்தே முஸ்­லிம்­களின் ஆத­ர­வினைப் பெற்று ஆட்­சி­பீ­ட­மே­றி­யது. முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு சமாதி கட்­டப்­படும் என்று உறுதி மொழி வழங்­கி­யது என்­றாலும், எது­வுமே நடை­பெற்­ற­தாகத் தெரி­ய­வில்லை.

முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை அழித்­த­வர்கள் இரண்டு முஸ­்­லிம்கள் உட்­பட, மூவரின் உயிர்­களைக் காவு கொள்­வ­தற்கு கார­ண­மாக இருந்­த­வர்கள் இன்று சட்­டத்தின் பிடி­யி­லி­ருந்தும் தப்­பித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அளுத்­கம சம்­ப­வத்­துக்கு ஆணைக்­கு­ழு­வொன்று அமைக்­கப்­பட்டு நீதி­நி­லை­நாட்­டப்­ப­டு­மென்று உறு­தி­ய­ளித்த நல்­லாட்சி அர­சாங்கம் இன்று மௌனம் காக்­கின்­றது. இதே­வேளை முன்னாள் மஹிந்த அர­சாங்­கத்தின் போது நிய­மிக்­கப்­பட்ட குழுவும் காத்­தி­ர­மான எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­க­வில்லை. 

இந்த வன்­செ­யல்­களால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் குறைகள் இன்றுவரை நிவர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. நஷ்­ட­ஈ­டு­களும் வழங்­கப்­ப­ட­வில்லை. 

இந்­நி­லையில் அண்­மைக்­கா­ல­மாக மீண்டும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்கள் தலை­தூக்­கி­யுள்­ளன. வர்த்­தக நிலை­யங்கள் இர­வோ­டி­ர­வாக தீயிட்டு கொளுத்­தப்­ப­டு­கின்­றன, பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­ப­டு­கின்­றன. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சட்டம், நீதி நிலை­நாட்­டப்­படும், குற்­ற­வா­ளிகள் கைது செய்­யப்­ப­டு­வார்கள் என்று தொட­ராக உறு­தி­களை வழங்கிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். 

2014 ஆம் ஆண்டில் அளுத்­க­மயில் அரங்­கேற்­றப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­செ­யல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் மற்றும் அதன் பின்­ன­ணியில் உள்­ள­வர்கள் யார் என்­பது பொது­மக்­களால் இனங்­கா­ணப்­பட்டும் அவர்­க­ளுக்­கெ­தி­ராக இது­வரை நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் சம­கால சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் இருப்­ப­வர்­களை அர­சாங்கம் இனங்­காணும், சட்­டத்தின் முன் நிறுத்தும் என்­பதில் முஸ்லிம் சமூகம் நம்­பிக்­கை­யற்­றி­ருக்­கி­றது என்­பதை சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறோம்.

இந்தச் சம்­ப­வங்­களின் இலக்கு மீண்டும் ஓர் அளுத்­கம போன்ற வன்­செ­யல்­க­ளுக்கு தூப­மி­டு­வ­தாக அமைந்து விடுமோ? என்று முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மல்ல நல்­லாட்­சி­யையும் சமா­தா­னத்­தையும் விரும்பும் மக்கள் அச்சமுற்று கவலையில் மூழ்கியிருக்கிறார்கள்.

எனவே, நல்லாட்சி அரசாங்கம் அளுத்கம வன்செயல்களின் சூத்திரதாரிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடுகளை வழங்க வேண்டும், மீண்டும் ஓர் அளுத்கம கரிநாள் உருவாகாது தடுக்க வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறோம்.

(விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)

1 comment:


  1. Minister Rauf Hakeem, Minister Rishad Bathiudeen, Minister Faizer Musthapa, Hilmy Ahamed, N.M..Ameen, ACJU – Moulavi Rizvi, Shoora Council of Sri Lanka, Azad Sally, MP Mujeebu Rahuman all know about the TRUE story behind who was behind the Aluthgama/Beruwela riots and violence. UP TO TODAY THEY HAVE NOT CALLED FOR THE PRESIDENTIALCOMMISSION PROMISED BY THE “HANSAYA” and the “YAHAPALANA GOVERNMENT” when they come to power. It is indeed 3 years since this atrocity to the Muslims in Aluthgama and Beruwela has happened. THEY ARE EVEN NOT TALKING ABOUT THE 200 Million collected by the “ALUTHGAMA DEVELOPMENT FOUNDATION” and NO accountability of this fund has been made public. The Muslim voters have to be VIGILANT about our own people and should not be carried away because of their “PRESS and MEDIA DRAMAS”.

    "THE MUSLIM VOICE" STATES THAT IF THE MUSLIM PARLIAMENTARIANS (MPs & MINISTERS, DEPUTY MINISTERS ETC.,) HAVE THE REAL FEELING TO HELP THE MUSLIMS FROM THE ATTACKS OF THE BBS, GANASAARA THERO AND THE YAHAPALANA NATIONALIST BUDDHIST MINISTERS CHAMPIKA RANAWAKA, THEY SHOULD RESIGN FROM THE POST OF MINISTER AND OTHER OFFICIAL POSITIONS IN THE GOVERNMENT AND SIT IN THE OPPOSITION AS A PROTEST.
    “THE MUSLIM VOICE” WILL CONTINUE TO DEMAND THIS IN THE INTEREST OF THE COMMUNITY AT LARGE, IN SHA ALLAH.
    Muslim politicians, Muslim Civil Society groups, MCSL, Shroora Council, ACJU, Muslim Media Forum who supported the "Hansaya" and the "Yahapalana group" for their personal gains and benefits and not the community should take full responsibility of this situation. You all are now answerable (Insha Allah) to God AllMighty Allah and the Muslim voters/community at large for putting us in this plight. YOU WERE PART OF THEM. You cannot run away from this anymore. Islamic religious scholars say: "Betrayal is the worst form of hypocrisy", "Betrayal is the worst sin," and "Betrayal is an indication on the lack of piety and religiousness".
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.