Header Ads



எகிப்தில் ஒரு சட்டத்தரணி கொலை, 31 பேருக்கு மரணதண்டனை


எகிப்து நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு மூத்த அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்த ஹிஷாம் பராகத் என்பவரின் கார் மீது வெடிகுண்டுகள் நிறைந்த காரை மோதி வெடிக்கவிட்டு அவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக முஸ்லிம் சகோதரத்துவ கட்சி மற்றும் ஹமாஸ் குழுவைச் சார்ந்த பல பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தாக்குதலில் தொடர்புடைய 31 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இவர்களுக்கான தண்டனை அடுத்த மாதம் 22-ம் தேதி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

எகிப்து நாட்டின் சட்டத்தின்படி, அரசாணைகளை வெளியிடும் தலைமை முப்திக்கு இந்த தண்டனை விவரம் அனுப்பப்பட்டது.  இந்த தீர்ப்பை தலைமை முப்தி உறுதி செய்யும் பட்சத்தில் 31 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி.

1 comment:

  1. ஜனநாயகரீதியாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி முர்ஷியை அமெரிக்க இஸ்ரேலிய கூட்டு சதி மூலம் அதிகாரத்தை கைப்பற்றிய சீசியின் அராஜகத்தினதும் முஸ்லிம்கள் தொடர்பில் அமெரிக்காவின் இரட்டை முகத்தினதும் அடையாளச் சின்னமே இத்தகைய நடவடிக்கையாகும். சாதாரண பார்வையில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பாக புலப்பட்டாலும் இஹ்வான்களுக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலை என்பதைக் கூட ஊடக மாபியா மறைத்து செய்தி வெளியிட்டுள்ளதையே இது காட்டுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.