Header Ads



ஞானசாரருக்கு ஒன்றல்ல, 2 பிடியாணைகள் - சிராஸ் நூர்தீனின் வாதமும்..!

MFM.Fazeer

அல்­குர்­ஆனை அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டமை, ஜாதிக பல சேனாவின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பினுள் அத்­து­மீறி கலகம் விளை­வித்­தமை தொடர்பில் கோட்டை நீதி­மன்றில் இடம்­பெற்று வரும் வழக்கில் ஆஜ­ரா­காத பொது பல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்­யு­மாறு  கோட்டை நீதி­மன்றம் நேற்று உத்­த­ரவு பிறப்­பித்­தது. 

770/14, 758/14 ஆகிய வழக்­கெண்­களைக் கொண்ட  இரு வழக்­குகள் தொடர்­பி­லேயே கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன  இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்தார். அதன்­படி ஞான­சார தேரரைக் கைது செய்ய இரு வழக்­குகள் தொடர்­பிலும் தலா ஒவ்­வொரு பிடி­யாணை வீதம் இரு பிடி­யா­ணைகள் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

2014.04.09 ஆம் திகதி கொம்­பனி வீதி நிப்பொன் ஹோட்­டலில் நடை­பெற்ற ஜாதிக பல­சே­னாவின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பினுள் அத்­து­மீறி, அதனை குழப்­பி­யமை, திட்­ட­மிட்ட அத்து மீறல் மற்றும் தாக்­குதல் உள்­ளிட்ட 8 குற்­றச்­சாட்­டுகள் ஞான­சார தேர­ருக்கும் மேலும் 6 சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ராக சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இதனை விட 2014.04.12 அன்று கொம்­பனி வீதி பொலிஸ் நிலை­யத்­துக்கு முன்­பாக ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இஸ்­லாத்­தையும் குர் ஆனையும் அவ­ம­திக்கும் வித­மா­கவும் நிந்­திக்கும் வித­மா­கவும் கருத்­து­களை வெளி­யிட்­டமை தொடர்பில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மட்டும் பிறி­தொரு வழக்கும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இவ்­விரு வழக்­கு­களும் நேற்று மீள விசா­ர­ணைக்கு வந்­தன. இதன்­போது குர்­ஆனை அவ­ம­தித்­தமை மற்றும் நிப்பொன் ஹோட்டால் விவ­கா­ரங்­களில் சந்­தேக நப­ரான தற்­போது பிணையில் உள்ள ஞான­சார தேரர் மன்றில் ஆஜ­ரா­க­வில்லை. அவ­ருடன் நிப்பொன் ஹோட்டல் விவ­கா­ரத்தில் சந்­தேக நப­ரான ஆரி­ய­வங்ஷ சமித்­த­கம தேரரும் மன்றில் ஆஜ­ரா­க­வில்லை.

வழக்­கா­னது விசா­ர­ணைக்கு வந்த போது விச­ர­ணை­யா­ளர்கள் சார்பில் மன்றில் பிர­சன்­ன­மான கொம்­பனி வீதி பொலிஸார், இந்த இரு விவ­கா­ரங்­களின் விசா­ர­ணைகள் பூர்த்தி செய்­யப்­பட்டு அடுத்த கட்ட நட­வ­டிக்கை தொடர்பில் சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னைக்­காக ஆவ­ணங்கள் அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக நீதி­வானின் கவ­னத்­துக்கு கொண்டு வந்தார்.

இத­னை­ய­டுத்து சந்­தேக நபர்கள் சார்பில் மன்றில் கருத்­துகள் முன் வைக்­கப்­பட்­டன. குறிப்­பாக நேற்று மன்றில் ஆஜ­ரா­காத கல­கொட அத்தே ஞான­சார தேரர் சார்பில் மன்றில் சட்­டத்­த­ர­ணிகள் குழு­வொன்றே பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தது. 

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி டிரந்த வர­லி­யத்த தலை­மையில் ஒரு குழுவும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சுதர்­ஷனி குண­ரத்ன தலை­மையில் மற்­றொரு குழுவும் இதன்­போது ஞான­சார தேரர் சார்பில் மன்றில் பிர­சன்­ன­மா­கினர்.

இதன்­போது ஞான­சார தேரர் மன்றில் ஆஜ­ரா­காமை தொடர்பில் கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி டிரந்த வர­லி­யத்த, 'ஞான­சார தேர­ருக்கு உயிர் அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில் பொலிஸ் மா அதி­பரின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு விசா­ர­ணை­களும் இடம்­பெ­று­வ­தா­கவும் தெரி­வித்­த­துடன் உயிர் அச்­சு­றுத்தல் கார­ண­மா­கவே அவரால் மன்றில் பிர­சன்­ன­மாக முடி­ய­வில்லை எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

இதன்­போது கருத்து தெரி­வித்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சுதர்­ஷனி குண­ரத்ன, ஞான­சார தேரரைக் கைது செய்ய பொலிஸ் மா அதி­பரே 4 குழுக்­களை நிய­மித்­துள்ள நிலையில் அவரால் வெளியில் நட­மாட முடி­யாது என்று அவ்­வாறு வந்தால் பொலிஸார் அவரைக் கைது செய்வர் எனவும் தெரி­வித்தார்.

இதனை கருத்தில் கொண்ட நீதிவான் லங்க அஜ­ய­ரத்ன விடயம் தொடர்பில் பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் சார்பில் தொடர்ச்­சி­யாக மன்றில் ஆஜ­ரா­கி­வரும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்­தீ­னிடம் கருத்­து­களை முன்­வைக்­கு­மாறு கோரினார்.

இதன்­போது மன்றில் கருத்­து­களை முன்­வைத்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஷ் நூர்தீன், நாம் யாருக்கும் பிணை வழங்­கு­மாறோ, அல்­லது பிணையை ரத்து செய்­யு­மாறோ, பிடி­யாணை பிறப்­பிக்­கு­மாறோ விஷே­ட­மாக கோர­வில்லை. அர­சி­ய­ல­மைப்பின் 10 மற்றும் 12 ஆவது உறுப்­பு­ரை­க­ளுக்கு அமைய சட்­டத்தின் மீதான ஆட்­சி­யையும் நியா­யா­திக்­கத்­தையும் அமுல் செய்­யவே கோரு­கின்றோம் என அவர் நீதி­வானின் கவ­னத்­துக்கு கொண்டு வந்தார்.

இந்­நி­லையில் விட­யங்­களை ஆராய்ந்த நீதிவான் லங்க அஜ­ய­ரத்ன ஞான­சார தேர­ருக்கு பிடி­வி­றாந்து பிறப்­பித்­த­துடன் இரு வழக்குகள் தொடர்பிலும் அவரை உடன் கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய உத்தரவிட்டார்.

அத்துடன் ஆரியவங்ஷ சமித்தகம தேரரை நிப்போன் ஹோட்டல் ஊடகவியலாளர் சந்திப்பில் கலகம் விளைவித்தமை தொடர்பில் மன்றில் ஆஜராகாததால் கைது செய்யுமாறும் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

2 comments:

  1. இரு வரிகளால் சார வெறிநாயை கூட்டில் அடைக்க சட்டத் தரணி ஷிராசினால் முடியும் என்றால், 04 விஷேட போலீஸ் குழுக்களால் முடியாமல் போனது ஏன் ? இனவாதத்தை மிஞ்சிய விவேகம் கொண்ட சட்டத் தரணி ஷிராசை வாழ்த்துவோம், பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  2. Thank you brother Ziraz Nooriddin

    ReplyDelete

Powered by Blogger.