Header Ads



2 பேரப் பிள்ளைகளை கொள்ளுப்பிட்டியில், செல்பிக்கு பலி கொடுத்தவரின் துயரம்

(ரசிக்க சத்துரங்க)

“எனது இளைய பேரப்பிள்ளை புகைப்படம் எடுக்க வேண்டுமென்று வாகனத்திலிருந்து இறங்கிய போது நாம் அதற்கு விருப்பப்படவில்லை. இருப்பினும் அவர் வாகனத்திலிருந்து இறங்கி கடல் மார்க்கமாகவுள்ள ரயில்வே தண்டவாளத்துக்கு தனது சகோதரருடன் சென்று செல்பி எடுத்தார்.

இதன்போது நேரம் 5. 45 மணி இருக்கும். அப்போது குறித்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயில் எனது பேரப் பிள்ளைகள் நின்ற இடத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. ஆனால், அந்த ரயில் அவர்களை நெருங்கும் வரை அதன் சப்தம் கேட்கவில்லை.

இதன் போது நான் ரயில் வருவதாக மகனின் கூறி விட்டு தூரமாகச் சென்ற அடுத்த நிமிடமே அவர்கள் இரு வரையும் அந்த ரயில் மோதியது” இவ்வாறு கொள்ளுப்பிட்டி ரயில் பாதையில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த போது ரயிலால் மோதப்பட்டு தனது இரு பேரப் பிள்ளைகளைப் பலி கொடுத்த 68 வயது தாயான பிரேமா குணவர்தன தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, எனது மூத்த பேரப்பிள்ளை அநுராதபுரம் செயின்ற் ஜோஸப் வித்தியாலயத்தில் கல்வி பயின்று ஹோட்டல் முகாமைத்துவ கல்வியைத் தொடர்வதற்காக சிங்கப்பூர் சென்றிருந்தார்.

இந்த நிலையில் சுமார் 3 வருடங்களின் பின்னர் அவர் கடந்த 11 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் மூலம் இலங்கை திரும்பியிருந்தார். இதன் போது அவரை அழைத்து வருவதற்காக நானும் எனது பேரப்பிள்ளைகளின் தாய், தந்தை, கணவர்,  உட்பட குடும்ப முக்கியஸ்தர்கள் கட்டுநாயக்கா சென்றிருந்தோம். பின்னர் அவரை அழைத்துக் கொண்டு கொழும்புக்கு வந்தோம்.

கட்டுநாயக்கவிலிருந்த கொழும்புக்கு வந்து கொள்ளுப்பிட்டியிலுள்ள எமது உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்று விட்டு திரும்பி வரும்போதே இந்தச் சம்பவத்துக்கு முகங்கொடுத்தோம் என தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில்  அநுராதபுரம், அனுலா தேவி மாவத்தையைச் சேர்ந்த  மதுஷான்  ரணவிரு (24), ஷக் ஷான் ரணவிரு (12) ஆகியோரே உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற இராணுவ வீரரதும் வீராங்கனையினதும் பிள்ளைகளாவர்.


No comments

Powered by Blogger.