Header Ads



அடுத்து எந்த கடைக்குத் தீ, என்ற தேடலும் - 2 நம்பிக்கைத் துரேகிகளும்..!!

அடுத்து எந்த கடைக்குத் தீ எனும் தேடலோடு விடிகிறது இலங்கை முஸ்லிம்களது விடியல்கள். அன்றாடம் ஒரு முஸ்லிம் கடையை தீ வைத்து எரிக்க இனவாதம் திட்டம் தீட்டி செயலாற்றுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் ஒவ்வோர் கடை வீதிகளாக அழிக்கலாம் எனும் இனவாதிகளது திட்டம் மிகுந்த பரபரப்பையும், சர்வதேச பார்வையையும் இனவாதிகளின் பக்கம் திருப்பியதால்! சத்தமில்லாத பொருளாதார கொரில்லா தாக்குதலை இலங்கை இனவாதிகள் கச்சிதமாக செய்து வருகிறார்கள்.

இனவாதத்தால் தீக்கிரயாகிக் கொண்டிருக்கின்ற இலங்கை முஸ்லிம் வர்தகர்களது செல்வமும் இலங்கையின் பொருளாதாரம்தான் என்பதைக் கூட உணரத் தெரியாத "யஹ பாலன" வின் அசமந்தப் போக்கானது, தன்னை ஆட்சிக்கு அமர்த்திய  நாட்டு முஸ்லிம்களுக்கு *தான் நம்பிக்கை துரோகிதான்* என்பதை படம் பிடித்து காட்டுகிறது. "யஹ பாலன" அவசரிமாகவும் அவசியமாகவும் வேண்டி நிற்பது இனவாத ஒழிப்பு அல்லது கட்டுப் படுத்தலாக இருக்க! குறித்த அதி அவசிய விடயத்தில் கவனம் செலுத்தாது வேறு சில விடயங்கள் பக்கம் மக்களை திசை திருப்புவதும் கவனமெடுப்பதும் *ஏன் என்பதை முஸ்லிம்கள் நிதானமாக சிந்தித்துணர்வது காலத்தின் அவசியமாகும்*. எம் சமூகத்தின் அதிமேதகு அறிவாளிகள் சிலர் இச்சந்தர்பத்தையும் தம் அரசியலுக்காக பயண் படுத்திக் கொள்கின்றமையும், மார்க்கம் பேசும் புணிதர்கள் பலர் தானும் எதுவும் செய்யாது அடுத்த இயக்கங்கங்கள் மீது விரல் நீட்டி விமர்சிப்பதும் காணச் சகிக்க முடியாத வெறுப்பாகவும் வேதனையாகவும் உள்ளது.

தம்மைத் தாமே இலங்கை முஸ்லிம்களது தலைமையாக நிர்ணயித்துக் கொண்ட  சமூகத்தில் உளவும் பல  ஜமாஅத்துக்கள் உள்ளன. பொது சேவை அமைப்புக்கள் உள்ளன. அரசியல் கட்சிகள் உள்ளன. இவர்களெல்லாம் முஸ்லிம்களுக்காகவே எம்மை நாம் அர்பணித்துள்ளதாகச் சொல்லி வருகிறார்கள். ஆதலால் இவர்கள் அனைவரும் ஒன்று பட்டு எம்மை வழி நடாத்துவார்கள் என்று நம்பியிருந்தால்! "பஞ்சு மரத்தில் அமர்ந்து காய் கனியாகும் வரை காத்திருந்த கிளிக்கு ஈடான செயலாகி விடும்" என்பதை புறிந்து கொள்ளுங்கள்.

ஆம்.... இதுவே கசப்பான உண்மையும், இதுவே எமது பலவீனமும் என்பதை இனவாதியும் அறிந்து வைத்துள்ளார்கள். இதன் தீய விளைவுகளையே இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். சுய நலனும், அறிவீனமும் இயக்கங்களதும் கட்சிகளதும் உணர்வுப் பார்வைக்கு திரையிட்டுள்ளன. இந்நிலையில் இச்சமூகத்துக்கு ஒரு தலைமை உருவாகும் என்பது பகல் கனவே. முஸ்லிம் அரசியல் வாதிகளில் இருந்து ஒருவரை தலைமையாகக் கொண்டு செயலாற்ற முனைந்தால்! கட்சிகள் மேலும் குட்டி போட்டு பிளவுகளையே உண்டு பன்னும்.

ஜமாத்துக்களில் இருந்து ஒரு தலைவரை தேர்வு செய்து பயணிக்க நாடினால்! தனிமனித தவறுகளும், காழ் புணர்ச்சியும், மடமை மிக்க பத்வாக்களும் மேடைகளில் கர்சனையாகும். கீ போர்ட் படை போராளிகளின் அநாகரீக எழுத்துக்களால் முகநூலும், வட்ஸ்ஆப் குழுமங்களும் நாற்றமெடுக்கும்.

நாம் ஒவ்வொருவரும் தனித்து நின்று எவ்வாறு தற்காப்புக்காக செயற்பட முடியும் என்பதை நிதானமாக சிந்திக்க வேண்டும். "தனித்து நின்று" என்பதன் பொருளானது! தனியொருவரை குறிப்பதல்ல. மாறாக! நாம் எமக்கு மிக நெறுக்கமான உறவுகளையும், அயலவர்களையும், நண்பர்களையும் இணைத்து எம் தற்காப்பு குறித்து ஆலோசிக்க வேண்டும். *அதனூடாக எம் சூழலை இரும்புத் திரையிடப் பட்ட பாதுகாப்பான சூழலாக மாற்ற வேண்டும்*.
இவ்வாறான செயல் பாடுகள் மிகச் சாத்தியமானதும், இலகுவானதும், பாதுகாப்பானதுமாகும் என்பதோடு உருதியானதும் கூட. அல்லாஹ் அருள் செய்ய நாடினால்! சிறுதுளி பெரு வெள்ளமாக நாளை இக்கட்டமைப்பு தேசிய கட்டமைப்பாக உருப்பெறலாம். நானறிந்த வரை இதுவொன்றே எம்மையும் எம் உடமைகளையும் நாம் தற்காத்துக் கொள்ள எஞ்சியிருக்கும் ஒரே உபாயமாகும். *அல்லாஹ் மிக அறிந்தவன்*.

இந்நாட்டு முஸ்லிம்கள்  ஓர் ஆளுமை மிக்க அரசியல் தலைவரின் கீழ் ஒன்றுபட அழைக்கப் பட்டால்!  அவரவர் ஆதரவாளர்கள் அவர்களது அபிமானத்துக்குறிய கட்சித் தலைவரையே தலைமையாக வேண்டி நிற்பார்கள். சமூக ஒற்றுமையும் ஈருலக வெற்றியான வாழ்வு குறித்தும் பேசும் ஜமாஅத்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இஸ்லாமிய இயக்கங்களில் இருந்தும் ஒரு தலைவரை உருவாக்க நாடினால் அதனதன் ஆதரவாளர்கள் அவர்களுக்கு அபிமானத்துக்குறியவரையே தலைமையாக வேண்டி நிற்பார்கள். இது இன்னும் பல் வகையான பின்னடைவுகளையே சமூகத்துக்கு வழங்கும். எனவே சாத்தியமான வழியில் ஒன்றினைவோம்.

தன் உடமைகளை பாதுகாக்கும் தற்காப்புக்காக போராடும் போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:- புகாரி1129
இது போன்ற பொருப்புணர்ச்சி மிக்க எழுத்துக்களை படிப்பதுடனும், பகிர்வதுடனும் நம் கடமைகள் நிறைவு பெறுவதில்லை. இக்கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்கின்ற போது! அவற்றை நடைமுறை படுத்துவதன் ஊடாகவே சமூகம் பலன் பெறுகிறது என்பதை உணர்ந்து, எமது தற்காப்பை உருதி செய்வோமாக. முடிந்தவரை நாட்டின் இறைமைக்கும், எஞ்சியிறுக்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படாதவாறு சமயோசிதத்துடனும், சாத்வீகமான முறையிலும் செயாற்றுவோமாக. யா அல்லாஹ் பலவீனப் பட்டுள்ள உன் அடியார்களது பாதங்களை பலப் படுத்தி, எமது எதிர்காலத்தின் அடித்தளத்தை ஈருலகிற்கும் ஆரோக்கியமானதாக ஆக்கி வைப்பாயாக.

இறையடிமை:- அபூ ஸுமையா - 10-06-2017

3 comments:

  1. Dont blame government
    BLAME OUR SELF
    WE ARE NOT GOOD FOLLOWERS IN ISLAM
    WE HAVE TO DO THAWBA AND TURN OUR FACE TO ALMIGHTY ALLAH.ALLAH KNOWS EVERYTHING
    ALLAH HIS WATHING EVERY THING
    WITHOUT HIS ORDER NOTHINGS HAPPAND ANYTHING.WE HAVE DOING SO MANY SINS OUR DAILY LIFE.SINS BRING THE ANGRY OF ALMIGHTY.MAY ALLAH FORGIVE
    MAY ALLAH PROTECT OUR HALAL MEANS AND OUR IMAAN

    ReplyDelete
  2. சரியான ஒரு கருத்து

    ReplyDelete
  3. two gays....

    ReplyDelete

Powered by Blogger.