Header Ads



முஸ்லிம்முக்குச் சொந்­த­மான, தேயிலைத் தொழிற்­சாலை தீ - 13 கோடி நஷ்டம்


நாவ­லப்­பிட்டி, ஹபு­கஸ்­த­லாவை பிர­தான வீதியில் இயங்­கி­வந்த  முஸ்லிம்  ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான தேயிலைத் தொழிற்­சாலை வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை 12.30 மணி­ய­ளவில் தீயினால் முற்­றாக எரிந்து நாச­மா­கி­யுள்­ளது.

தீ ஏற்­பட்­ட­மைக்­கான காரணம் இது­வரை கண்­ட­றி­யப்­ப­டாத நிலையில் தொழிற்­சா­லையின் மின் அடுப்பில் ஏற்­பட்ட மின் ஒழுக்­கி­னாலே பெரும்­பாலும்  தீ  ஏற்­பட்­டி­ருக்­கலாம் என  தேயிலைத் தொழிற்­சா­லையின்  உரி­மை­யா­ளரின் சகோ­தரர்  தாஹா உடையார் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

இதனால்  தொழிற்­சாலை இயந்­தி­ரங்கள்  முற்­றாக சேத­முற்­றுள்­ள­தா­கவும்  சுமார் 13 கோடி ரூபா  நஷ்­ட­மேற்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

தொழிற்­சா­லையில் சி.சி.ரி.வி. கமெரா  பொருத்­தப்­பட்­டி­ருந்­தாலும் அதன்  தரவுக் களஞ்­சியம்  தொழிற்­சா­லைக்கு உட்­பு­ற­மாக இருந்­ததால் கமெரா  பதி­வு­களும் தீயில் எரிந்­துள்­ள­தா­கவும்  அவர் கூறினார்.

இச்­சம்­ப­வத்தைப் பற்றி தொழிற்­சா­லையின் உரி­மை­யா­ளரின்  சகோ­தரர்  தாஹா உடையார் மேலும் தெரி­விக்­கையில், வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை தீ பர­வு­வதை பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தரே முதலில் கண்­டுள்ளார்.

வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை 12.45 மணி­ய­ளவில்  தொழிற்­சா­லைக்­குள்­ளி­ருந்து தீ பர­வு­வதைக் கண்­டதும்  எங்­க­ளுக்கும் தொழிற்­சாலை முகா­மை­யா­ள­ருக்கும் அறி­வித்தார். தீய­ணைப்புப் பிரி­வுக்கும் உட­ன­டி­யாக அறி­விக்­கப்­பட்­டது.

நாவ­லப்­பிட்­டியில் தீய­ணைப்புப் பிரிவு  இன்­மையால் கண்டி நகரில்  இயங்­கி­வரும் தீய­ணைப்புப் பிரி­வி­னரே கட­மைக்கு வந்­தனர். அவர்கள் வரு­வ­தற்கு முன்பே தொழிற்­சா­லையின் பெரும் பகுதி தீயினால் எரிந்து விட்­டது.

மின் அடுப்­பி­லி­ருந்து  ஏற்­பட்ட மின் ஒழுக்கு  கார­ண­மா­கவே இவ்­வி­பத்து  ஏற்பட்டிருக்கலாம் என்று  90 வீதம்  நம்புகிறோம். பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து  மேற்கொண்டுள்ளனர். அவர்களது அறிக்கையின் பின்பே இதற்கான காரணத்தை அறிய முடியும் என்றார்.

ARA.Fareel

1 comment:

  1. நம்பிட்டோடோம்ம்டாடா!!??!!

    ReplyDelete

Powered by Blogger.