June 15, 2017

அமெரிக்காவிடமிருந்து 12 பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை வாங்கும் கத்தார்

அமெரிக்காவிடமிருந்து எஃப் - 15 ஜெட் ரக போர் விமானங்களை வாங்க சுமார் 12 பில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றில் கத்தார் கையெழுத்திட்டுள்ளது.

வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைவர் ஜிம் மேட்டிஸ் மற்றும் கத்தார் பாதுகாப்புத்துறை தலைவர் இடையே நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவின் பெரிய நட்பு நாடான கத்தார் மீது சில தினங்களுக்குமுன் அதிபர் டொனால்ட் டிரம்ப், பயங்கரவாதத்திற்கு மிகப்பெரிய அளவில் கத்தார் நிதியுதவி அளிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு சில தினங்களுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது.

தீவிரவாத குழுக்களுக்கு கத்தார் ஆதரவாக இருப்பதாகவும் மற்றும் இரானுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவை பிராந்தியத்தை சீர்குலைப்பதாகவும் கூறி கத்தாருடனான ராஜிய உறவுகளை பிற வளைகுடா நாடுகள் சமீபத்தில் துண்டித்துக் கொண்டன.

மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே மிகப்பெரிய அமெரிக்க விமான தளம் கத்தாரில் உள்ள அல்-உடெய்டில் அமைந்துள்ளது. சுமார், பத்தாயிரம் படையினரை கொண்டுள்ள அந்த தளம் சிரியா மற்றும் இராக்கில் உள்ள இஸ்லாமிய அரசு என அழைத்துக் கொள்ளும் தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கைக்கு முக்கிய அங்கம் வகிக்கிறது.

அதிபர் டிரம்பின் கருத்துடன் முரண்படும் வகையில், பிராந்திய பாதுகாப்பிற்கு நீடித்த அர்ப்பணிப்புடன் கத்தார் செயல்படுவதாக சில தினங்களுக்குமுன் அமெரிக்க பாதுகாப்புத்துறை பாராட்டியிருந்தது

''போர் விமானங்களை வாங்கும் இந்த ஒப்பந்தம் அமெரிக்க அரசாங்கம் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ஆனால் இந்த உறவை நாங்கள் சந்தேகிக்கவில்லை,'' என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கத்தார் நாட்டை சேர்ந்த அதிகாரி ஒருவர் பேட்டியளித்துள்ளார்.

36 எஃப் - 15 ஜெட் ரக போர் விமானங்களை கத்தார் வாங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் ராய்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்புடைய ஆயுதங்களை செளதிக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக் கொண்டதற்கு சில வாரங்களுக்குப் பிறகு அமெரிக்கா - கத்தார் இடையே இந்த ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது.

அமெரிக்கா - கத்தார் இடையிலான இந்த ஒப்பந்தம், வளைகுடா நாடுகள் கத்தாருக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் புறக்கணிப்பு நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.

15 கருத்துரைகள்:

யார் யாரோ நண்பரென்று ஏமாந்த நெஞ்சம் உண்டு.பால்போல கள்ளும் உண்டு நிறத்தாலே இரண்டும் ஒன்று.

இந்த குள்ளநரி அமெரி்கர்கள் எவ்வாறு அரபு ஆட்டுமந்தைகளை ஏமாற்றி தங்களின் இரும்புகளில் நஞ்சை பூசி விற்று வாழ்கின்றார்கள் அனியாயகாரர்களின் முடிவை அல்லாஹுமட்டும்தான் அறிவான் புத்திஜீவிகளே இன்று மேற்குலகமும் அதன் அல்லக்கைகளும் கூறும் பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் விளங்கனீர்களா?அவர்களின் கட்டளைகளுக்கு அடிபனிந்து அவர்களுக்கு நேசக்கரம் நீட்டாதவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள்!

இந்த டரம்ப சவுதிக்கு 100 பில்லியனுக்கு ஆயிதம் தருவதாக கட்டாரை பயங்கரவாத நாடு என்று சொல்லவேண்டுமென்று திட்டம்தீட்டி அதில் வெற்றிகண்டான் தற்போது அவன் பார்வையில் பயங்கரவாதிகளுக்கு உதவும் அதேகட்டாருக்கு ஆயுதம் விற்கின்றான் இதன் விளக்கமென்ன? ஆனால் ஒன்றுமட்டும் உருதி இஸ்லாமி அறிவில்லாத இந்த அரபுலக ஆட்சியாளர்கள் மங்காத மடையர்களாக இருக்கின்றார்கள் !!

மொத்தமாக 112 பில்லியன் டாலர் (சுமார் 17,025 கோடி ரூபாய்கள்) ஒற்றுமை இன்மைக்காக அவர்கள் கொடுக்க வேண்டிய விலை!

முப்பதாண்டுகள் யுத்தம் செய்து நஷ்டம் கொடுத்தும் பாடம் படிக்காத இலங்கை மக்கள்!

சதி செய்து சாப்பிடும் சியோனிசம்!

அவர்களை மடியில் வைத்து அரவணைத்து அடுத்த ஆயிரம் கோடிகளை அள்ளி வழங்கத் தயாராக இருக்கும் நம் அரசியல்வாதிகள்!

மொத்தத்தில் வெற்றிடமாக இருக்குமோ என்று கருத வேண்டிய  இலங்கையின் நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி!சிங்களவர்கள் கடை எரிந்தால் அமேரிக்க தூதுவரிடம் தான் ஓடிப்போய் முறையிடுகிறீர்கள்,
பின்னர் எல்லாம்திற்கும் அமேரிக்காவை திட்டுகிறீர்கள்.

அவர்கள் பாவம். பழைய out of dated ஆயுதங்களை வைத்து என்ன செய்வதாம், யாரின் தலையில் கட்டவேண்டும் தானே.

கட்டார் பின்னர் தங்களின் பழைய ஆயுதங்களை தீவிரவாதிகளுக்கு விற்று பணத்தை மீட்டுகொள்வார்கள்.

சகோதர்ர அஜன் அவர்களே உங்களுக்கு பொது அறிவுகள் இருக்குமென்று கருதுகின்றேன்: இஸ்லாம் (கட்டுப்பாடு,சாந்தம்,சமாதானம்,)என்ற அருத்தமுள்ள வாழ்நெரி இதை எத்தனை முஸ்லிம்கள் விளங்கியுள்ளார்கள் என்பதை அல்லாஹுமட்டும்தான் அறிவான் மேலும் இஸ்லாம் முதல்மனிதர் ஆதமுக்கு அல்லாஹுவால் அருளப்பட்டது பின் தூதர்களை தொடர்ந்து அனுப்பி முஹம்மது நபி ஸல் அவர்களை இருதி தூதராக அனுப்பி இம்மார்க்க அழகிய பண்பாட்டு கட்டளைகளை மனிதர்களின் வாழ்கைநெரியாக ஏவியுள்ளான்.இதன் அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் என்நேரமும் மனிதநேயத்தை பாதுகாக்க கூடியது மனிதர்களை பாதுகாக்கவந்த்து.முஸ்லிம் பெரை வைத்துக்கொண்டு இஸ்லாமிய போதனைகளை தெரியாத மடையர்களாலும்,மேலும் அதை தவறாக விளங்கிய சில கசுமாளிகளும தவறுகள் நடக்கின்றன ஆனால் அவைகள் அனைத்தும் இஸ்லிமாய பண்பாடன போதனைகளிலிருந்து வெகுதூரமாகும்.

மேலும் இங்கே நீங்கள் இலங்கை முஸ்லிம்கள அமெரிக்காவிடம் உதவி கோருவதாக தவராக விளங்க வேண்டாம் தூதரகம் சென்றவர்கள் அப்படி கூறியிருந்தால் அது அவர்களின் மடைமை இதை நீங்கள் இவ்வாறு விளங்கவேண்டும் முஸ்லிம்கள் அதிகம் பொருமையுள்ளவர்கள் வன்முறையை வெறுப்பவர்கள் அதனால் உண்டாகும் அனியாங்களை நன்று உணர்ந்தவர்கள் மேலும் பிறர் உடைமைகளை அழிக்காமல் அதை உருமைகார்ர்களுக்கு பாதுகாத்து கொடுப்பவர்கள் மேலும் இஸ்லாமிய வெறுப்பாளர்களால் கூறுவது போன்று அது வாலின் முனையில் பலவந்தமாக எடுத்துச்சொல்லப்பட்ட மார்க்கம்ல்ல என்பதை விளங்கவும்...

மடமண்ட அந்தோணி; 30 வருடம் யுத்தம் செய்த உனது புலிப்படை முள்ளிவாய்க்காலில் சுற்றி வளைக்கப்பட்ட போது எந்த நாடுகளின் காலில் நீங்கள் விழவில்லை. துரோகி உன்போன்ற kp களால் வஞ்சிக்கப்பட்ட தமிழ் சமூகத்தையும் நிர்க்கதியாக்கிவிட்டு இப்போது முஸ்லிம்களின் விவகாரங்களில் சியோனிச பணத்துக்காக சிண்டுமூட்டி விளையாட்டுக்காட்டப்பார்க்கிறாய். உனது பருப்பு இங்கு வேகாது.

மேலும் அமெரிக்காவிடம் உதவி கேட்கவில்லை மாற்றமாக எங்கள் உடைமைகளை அழித்து எங்கள் உரிர்களுக்கு அபாயம் ஏட்பட்டால் நாங்கள் எங்கள் தற்பாதுகாப்புக்காகாக நடவடிக்கை எப்போம் அப்போது எங்களை பயங்கரவாதி என்று சொல்லக்கூடாதென்று உணர்த்தியுள்ளோம்

Kaatu pulikku than out of dated vikkalam...veru muttalhal illai azai vanga 😜

Now he will not allow to sleep these two countries until he reached the amount

வாலின் முனையில் பலவந்தமாக எடுத்துச்சொல்லப்பட்ட மார்க்கம்ல்ல என்பதை விளங்கவும்...
😂😂😂😂

நிறைவேற்றும் அதிகாரத்தை நிறைவேற்ற தகுதியானதோர் ஜனாதிபதியின் வெற்றிடத்தை அறிந்த உடனேயே ஆசைப்பட்டுவிட்டார், தனக்காகக் காத்திருக்கும் நாய்க்கூட்டையும் சிறைக்கூடத்தையும் மறந்து!

"பலவீனர்கள் இருக்கும்வரைதான் இவர்களது பலம் எல்லாம்."

Post a Comment