June 08, 2017

சவுதியின் 10 நிபந்தனைகளும், ஒரு பாமரனின் கேள்விகளும்.

கட்டாருடன் மீண்டும் சுமுக நிலை திரும்பவேண்டும் என்றால் பத்து நிபந்தனைகளை கட்டார் நிலைநாட்ட வேண்டும் என்று சவூதி அரேபியா கட்டளையிட்டு இருக்கிறது. அந்த நிபந்தனைகள் தொடர்பாக ஒரு பாமரனின் கேள்விகள். 

1. ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை உடனடியாக நிறுத்தனும் .
ஈரான் GCC உள்ளே மூக்கை நுழைக்கிறத நிறுத்தனும் எங்கிற நிபந்தனை வாஸ்தவம்தான். ஆனால் குவைத், ஓமான், அபுதாபிக்கும் இப்படி நிபந்தனை விதிப்பீங்க்களா செய்க் ?? அவங்க இருக்கட்டும் சிரியாவுல பிரச்சினை வாரவரைக்கும் நீங்க ஈரானோடு கட்டிபுடிச்சி கொண்டுதானே இருந்தீங்க. உங்க நாநா அப்துல்லா மௌத்தா போனபோது மையத்த பாக்க வந்த முதலாவது வெளிநாட்டு ஆளே ஈரானின் வெளிநாட்டு அமைச்சர் ஜபாரிதானே . நீங்க மறந்திருந்தா இத கொஞ்சம் கிளிக் பண்ணி வாசிங்க சாப் (https://www.voanews.com/a/saudi-king-abdullah-…/2610297.html
அந்த சோக கதையை உடுவோம் ,போனவருஷம் தெஹ்ரானில் டெம்பரரியாக மூடிய உங்க எம்பசிய வந்தாவா போனா போன்னு முழுசா இழுத்து மூடுவீங்க்களா ஹாஜி !!
2. ஹமாசின் உறுப்பினர்களை வெளியேற்றவும்.
சல்மான் சாப் !! உங்க நாநா பஹதை நம்பித்தான் பாலஸ்தீன மேற்கு கரையில் யாசிர் அரபாத் இஸ்ரேலோடு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்தாறு. அந்த ஒப்பந்தத்துக்கு பொறகு யூத குடியேற்றம் யூத குடியேற்றம் என்று மேற்கு கரையின் அரைவாசியை இஸ்ரேல் முழுங்கிட்டான். ஒப்பந்தத்துக்கு பிறகு 130 குடியேற்ற ஊர்கள் உருவாக்கி நாலு லட்சம் பேரை குடியேற்றி இருக்கானா பாருங்களே . ஒருவேளை உங்களுக்கு இந்த விஷயம் தெரியாட்டி கொஞ்சம் இதை கிளிக் பண்ணி பாருங்க ஆஜி (http://peacenow.org.il/…/settle…/settlements-data/population)
ஆனாலும் பாருங்க , காசாவுல இந்த விளையாட்ட செய்ய ஹமாஸ் உடல்ல. இஸ்ரேல்காரன் ஒருத்தன் கூட கசாவுக்குள்ள வரவுடாம வச்சிருக்கான். அவனுகளுக்கும் சாவு மணி அடிச்சுட்டா காசாவையும் இஸ்ரேல்காரன் புடிச்சு யூத ஆக்கள குடியேத்தி உடுவான். அப்புறம் பாலஸ்தீன பிரச்சின ஒண்டு இல்லாமல் போகும்..நீங்களும் இஸ்ரேல்காரனோடு டீல் அடிச்சுகொண்டு ஈக்கேளும் எனா. நீங்க இப்ப செஞ்சய் சட்டப்படி வேலைன்னும் உங்களோட டீல் அடிக்க புதுசா வழி வந்தீக்கின்னு இஸ்ரேல்காரன் சொல்லியிருக்கான். அவன் என்னெல்லாம் சொல்லிருக்கான்னு நீங்களே இத கொஞ்சம் கிளிக் பண்ணி பாருங்களே (http://www.timesofisrael.com/liberman-hails-qatar-schism-a…/
3. ஹமாசின் அத்தனை வங்கி கணக்கையும் முடக்கி அவர்களுடனான தொடர்பை துண்டித்தல்.
இதை சொன்னது சல்மானா நெதன்யாஹுவான்னு ஒரு கணம் ஆடிப்போயிட்டேன்.. ஏன்னா இஸ்ரேல்காரன் இருவத்தி ஐஞ்சு வருஷமா சொல்லிவாற விஷயத்தை ஒரு வசனம் பிசகாம அப்படியே சொல்லிட்டீங்க பாருங்க.. சட்டப்படி கொப்பி அடிச்சிகீங்க ஹாஜி 
4. முஸ்லிம் சகோதரத்துவ இயக்க உறுப்பினர்கள் அனைவரையும் கட்டாரில் இருந்து வெளியேற்றவும்.
சிரியாவுல அசாத் அரசாங்கத்தை கவுப்பதற்கு அங்குள்ள முஸ்லிம் சகோரத்துவ இயக்கத்துக்கு 2011 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்தும் பேக் அப் பண்ணுறீங்களே!! சிரியாவுல இருந்தும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு வெளியேறனும்னு ஜோக்குக்கு சரி ஒரு அறிக்கை விடுவீங்களா..மாட்டீங்க ..ஏன்னா சிரியாவுல உங்க பெயரை சொல்லி அடிச்சிக்கொள்ள நாலு பேரு வேணாமா !! 
5. GCC க்கு எதிரான சக்திகளை வெளியேற்றவும்.
ஒங்கட குரூப் மெம்பர் எமேனுக்கு போட்டு நீங்க எல்லாம் சேர்ந்து அடிக்ககொல உங்களுக்கு எமன் எடேன்ல இருக்கிற துறைமுகம்தான் பெரிசா தெரிஞ்சிச்சே ஒழிய GCC பற்றி நெனப்பு வரலியே. இப்ப மட்டும் ஏன் ஹாஜி இந்த நினைப்பு. எமன்ல அப்துல்லாஹ் ஸலிஹ்ஹிற்கு முப்பத்து ஐந்து வருஷமா பேக் அப் கொடுத்தீங்க.. எகிப்துல மாதிரி யேமன் மக்கள் ஜனாநயக உரிமை கேட்டு ஸாலிஹ்ஹிக்கு ஆப்பு அடிக்ககோல அவரு சவுதிக்கு ஓடிவந்தப்ப நீங்கதானே அவரையும் அவர்ட ஆட்சியையும் பாதுகாத்து கொடுத்தீங்க. ஆனால் உங்களுக்கு அவரு பிரச்சினைன்னு வந்தப்புறம் ஸாலிஹ் திடீர்னு GCC க்கு எதிரான சக்தியாக காட்டினீங்க. அய் மாதிரி, உங்களுக்கு யாராச்சும் பிடிக்கலன்னா உடனே அவங்களுக்கு லேபல் அடிச்சு வெளியேத்த சொல்றீங்களா ஹாஜி.
6. “பயங்கரவாத அமைப்புகளுக்கான “ உதவிகளை நிறுத்தவும் .
பயங்கரவாத அமைப்புன்னு நீங்க இங்க யாரை ஹாஜி சொல்றீங்க. ஐஸ்ஐஸா, அல்கைதாவா , லக்சரிதைபாவா, தலீபானா, ஹிஸ்புல்லாவா யாருவா அது. 
பயங்கரவாத அமைப்புகளுக்கான உதவிகளை நிறுத்தவும் !! அப்படின்னு கண்ணாடிக்கு முன்னுக்க நின்னு ஒருக்கா சத்தமாக சொல்லிப்பாருங்களேன், உங்களுக்கே உங்களை பார்த்து சிரிப்பு வரும். 
7. எகிப்திய விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்தவும். 
ஹா..ஹா.. சீ சீ க்கு ஒண்ணுன்னா இப்படி பதறுரீங்களே !! எகிப்து மக்கள் வோட்டு போட்டு கொண்டுவந்த முர்சிட ஆட்சியை உங்க நாநா அப்துல்லாஹ் காலத்துல 3 பில்லியன் டாலர் சல்லி செலவழிச்சு கைவுத்துனது எகிப்து விவகாரத்தில தலையிட்டது இல்லையா !! வயசு போனதுக்காக எல்லாத்தையும் இப்படித்தான் மறப்பீங்க்களா ?
8. அல் ஜசிரா ஒளிபரப்பை தடை செய்யவும். 
குவைத்தை சதாம் ஆக்கிரமித்த போது ஏற்பட்ட முதலாவது ஈராக்கிய யுத்தத்தில் முழு மொத்த உலகமும் CNN, BCC ஐயே நம்பியிருந்தன. ஆனால் இரண்டாவது ஈராக் யுத்தத்தில் அல்ஜெசீரா மூலமாகவே அமேரிக்கா துருப்புக்களால் செய்யப்பட்ட அநியாயங்கள், ஈராக்கிய மக்களின் ஆதங்கம் போன்றவை வெளியுலகுக்கு கொண்டுவரப்பட்டன. 
அதனால் ஒருமுறை புஷ் சூடாகி பிளேயருக்கு கோல் அடிச்சு அல் ஜசீரா ஆபீசுக்கு குண்டை போட்டு அழிச்சு போடுவோமான்னு கூட கேட்டிருந்தான். ஏனென்னா அவன்ட ஊடகத்த வச்சு சொன்ன பொய் எல்லாம் அல் ஜசீராக்காரன்தான் வெளியே கொண்டு வந்தான். அது மட்டும் இல்ல மத்திய கிழக்கில் இருந்து ஒரு ஊடகம் சர்வதேச அங்கீகாரம் கிடைப்பது லேசானா காரியம் இல்லைன்னு அவனுக்கு தெரியும். அப்படி பவர்புல் ஊடகம் ஒன்னு வந்தா பச்ச தண்ணில் பப்படம் பொரிக்க ஏலான்னும் அவனுக்கு தெரியும். அந்த நேரம் அவன் குண்டு போட்டு அழிக்கணும்னு நெனச்சத இப்ப நீங்க லேசா செய்யபாக்கிறீங்க ..
அவன் அப்படி சொன்னான்னு கேட்டாலும் கேப்பீங்க..எதுக்கும் இத கிளிக் பண்ணி பாருங்களேன் ஹாஜி !!

9. அல்ஜசீரா தொடர்பாக வளைகுடா நாடுகளிடம் மன்னிப்பு கேட்கணும். 
உலகத்தில பல ஊடகங்கள் ஒவ்வொரு அரசாங்கத்தையும் கிழி கிழின்னு கிழிக்கிறான். உங்கல விமர்சிச்சா மட்டும் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணுமா ஹாஜி. ...நீங்க வரவர அப்படியே உங்க எஜமான் ட்ரம்ப் மாதிரி வாறீங்க.
.  
10. GCC இன் கொள்கைகளுக்கு எதிராக நடக்கமாட்டேன் என்று கட்டார் உறுதிமொழி அளிக்கணும் 

GCC ன்னு ஒன்னு இன்னும் மிச்சம் இருக்கா ஹாஜி?. சும்மா மரிசிய போடாம போங்கவா !!
கடைசியாக ஒன்று சொல்லணும். நான் உட்பட முழு மொத்த முஸ்லிம் உம்மாஃவும் உங்க பாதுகாப்பும் இருப்பும் அவசியம் என்றே உணருகிறோம். ஆனால் நீங்களோ உங்க சுயநலத்திற்காக தொடர்ந்தும் முஸ்லிம் உம்மாஃவின் முதுகில் குத்திக்கொண்டே இருக்கிறீர்கள்.
Dilshan Mohamed.

8 கருத்துரைகள்:

மாஷா அல்லாஹ் சூபர்

Thelse conditions are like childish one...it is a joke..

மா புளிச்ச அமெரிக்கானனுக்கு இலேசாக ஆப்ப சுடலாலாம்.

அருள்புறியப்பட்ட கஃபதுல்லா மட்டும் இந்த சவூதிபூமியில் இல்லையென்றால் இவர்களின் நிலைமையை நினைத்தும் பார்க்கமுடியாது பல திசைகளிலுமிருந்து இந்த கஃபாவை தர்சிக்க வரும் முஸ்லிம்களின் பணத்தால் வாழ்ந்துகொண்டு அதில் அனைத்து ஏழை முஸ்லிம் நாடுகளுக்கு பங்குண்டு என்பதை மறைத்துவிட்டு தங்களின வறட்டு கவுரவத்தை காக்க அப்பணங்களை மேற்கத்திய தீய கயவர்களுக்கும் குறிப்பாக இந்த அமெரிக்கனுக்கும் கொடுத்துக்கொண்டு கிட்டத்தட்ட 1990 களிலிருந்து இன்வறையுள்ள சவுதி ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்கு அனியாயம் செய்துகொண்டிருக்கின்றார்கள் இந்த உண்மை எத்தனை முஸ்லிம்களுக்குத் தெரியும்

இந்த நிபந்தனைகள் கட்டாரக்கு மட்டும்மல்ல மாற்றமாக அனைத்து முஸ்லிம்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மேலும் சவதியுடன் நட்பை பேனவிரும்பும் ஏனைய இஸ்லாமிய நாடு அல்லாதவர்களுக்கும் சூசகமாக கூறப்பட்டுள்ளது நிச்சயமாக இந்த இழிவான சிந்தனைகளால் இந்த சவுதி ஆட்சியாளர்களை இவ்விடயத்தில் இன்ஷா அல்லாஹு இழிவு படுத்துவான்.

paamaran ariyaada neraya widayangal idil iruku palaya panjaangatha kelari welai illa paamarare naluku naal ulaham change aawudu

ஹாஜிக்கிட்ட இதுக்கெல்லாம் பதில் இல்ல பாய்

Post a Comment