Header Ads



UNP யின் செயற்குழு கூட்டம் நாளை - ஹரீன் முரண்படுகிறாரா..?

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு கட்சியில் உயர் பதவி வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ச மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் நாளை (08) கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் சரத் பொன்சேகாவிற்கு கட்சியின் துணைத் தலைவர் என்ற பெயரில் பதவியொன்று வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பதவி வழங்கப்படுவதற்கு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

பதவி வழங்குவது தொடர்பில் கட்சிக்குள் பிளவு நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, ஹரின் பெர்னாண்டோ போன்றவர்கள் பகிரங்கமாகவே எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

நாளைய தினம் நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஹரின் பங்கேற்க மாட்டார் எனவும், மஹியங்கன பிரதேசத்தில் நடைபெறவுள்ள சமய நிகழ்வு ஒன்றில் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெலிமட பிரதேசத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போதும் ஹரின் விஜயத்தில் இணைந்து கொள்ளவில்லை, மே தினக் கூட்டத்தில் உரையாற்றவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெசாக் பௌர்ணமி தினத்தின் பின்னர் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்கப் போவதாக விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.