Header Ads



ஜனா­தி­ப­தியின் வர்த்தமானியை, முழுமையாக வாபஸ் பெறத் தேவையில்லை - SLMC

ARA.Fareel

ஜனா­தி­ப­தியின் மாவில்லு பேணற்­காடு வர்த்­த­மானி பிர­க­ட­னத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­களின் குடி­யி­ருப்­புகள், விவ­சாய மற்றும் மேய்ச்சல் நிலங்கள் விடு­விக்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­னையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கொண்­டுள்­ள­தே­யன்றி முற்­று­மு­ழு­தாக வர்த்­த­மானி பிர­க­டனம் வாபஸ் பெறப்­பட வேண்­டு­மென்­ப­தல்ல என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம்.சல்மான் தெரி­வித்தார். 

மாவில்லு பேணற்­காடு வர்த்­த­மானி பிர­க­டனம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில், ‘முசலி பிர­தே­சத்தில் சுமார் 29 ஆயிரம் முஸ்­லிம்கள் இருக்­கி­றார்கள்.

எதிர்­கா­லத்தில் அவர்­க­ளது சனத்­தொகை அதி­க­ரிப்புக் கேற்ப காணிகள் ஒதுக்­கப்­பட வேண்டும். அண்­மையில் நாம் கள விஜ­ய­மொன்­றி­னையும் மேற்­கொண்டோம். 

அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சு திணைக்­க­ளங்­களின் உய­ர­தி­கா­ரி­க­ளுடன் முசலி மக்­களை நேரில் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­லொன்­றி­னையும் நடத்­தினார். கள விஜயம் மற்றும் கலந்­து­ரை­யா­ட­லை­ய­டுத்து அரச உய­ர­தி­கா­ரிகள் அறிக்­கை­யொன்­றினை ஜனா­தி­ப­தி­யிடம் சமர்ப்­பிப்­பார்கள்.

அந்த அறிக்­கைக்­காக காத்­தி­ருக்­கிறோம். ஜனா­தி­ப­தியே இவ்­வி­வ­கா­ரத்தில் இறுதித் தீர்­மா­னத்­தினை மேற்­கொள்வார். 
முசலி பிரதேச மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார். 

No comments

Powered by Blogger.