Header Ads



முஸ்லிம் காங்­கி­ர­சின் சொத்தை அப­க­ரித்­ததாக, நஸீர் அகமட்டுக்கு எதி­ராக வழக்கு

-MFM.Fazeer-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­சுக்கு சொந்­த­மான 11.2 மில்­லியன் ரூபா பெறு­மதி வாய்ந்த சொத்­தினை கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நசீர் அஹ­மட்­டுக்கு சொந்­த­மா­னது என கரு­தப்­படும் தனியார் நிறு­வனம் ஒன்று மோச­டி­யான முறையில் அப­க­ரித்­துள்­ள­தாக தமக்கு முறைப்­பாடு கிடைத்­துள்­ள­தாக கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு நேற்று கோட்டை நீதி­மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பித்­தது. 

ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் செய்த முறைப்­பாடு தொடர்­பி­லேயே பொலிஸார் நேற்று பீ அறிக்கை ஒன்­றூ­டாக விட­யத்தை கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­னவின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­தனர்.

 இந் நிலையில் இந்த வழக்­கா­னது நேற்று கோட்டை நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்த போது, பொலிஸில் முறைப்­பாடு செய்த ஊட­க­வி­ய­லாளர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­த­துடன் அவர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான மைத்­திரி குண­ரத்ன மற்றும் சிராஸ் நூர்தீன் உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

முஸ்லிம் காங்­கி­ர­சுக்கு சொந்­த­மான சொத்தின் உறு­தி­யா­னது மிகத் திட்­ட­மிட்டு மோச­டி­யான முறையில் மாற்றம் செய்­யப்­பட்டு, குறித்த தனியார் நிறு­வ­னத்­தினால் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னத்தின் பின்­ன­ணியில் மு.கா. உறுப்­பி­னரும் தற்­போ­தைய கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­மான நஸீர் அஹமட் இருப்­ப­தாக தாம் அறிந்து கொண்­ட­தா­கவும் இதன் போது சட்­டத்­த­ர­ணிகள் நீதி­வானின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­தனர்.

குறித்த சொத்தின் உறு­தி­யா­னது சாட்­சி­யா­ளர்கள் மாற்­றப்­பட்டு, பெறு­மதி குறைத்து மதிப்­பி­டப்­பட்டு, அர­சுக்­கான முத்­திரைக் கட்­டணம் கூட செலுத்­தப்­ப­டாது அர­சையும், மு.கா.வையும் ஏமாற்றி மோசடி செய்­யப்­பட்டு அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக குறித்த சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்றில் சுட்­டிக்­காட்­டினர்.

இதன் போது, குறித்த சொத்தின் உறு­தி­யினை எழு­திய நொத்­தா­ரி­ஸிடம் விசா­ரணை செய்­யப்­பட்­டதா என நீதிவான் பொலி­ஸா­ரிடம் கேள்வி எழுப்­பினார். இதற்கு பதி­ல­ளித்த மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த மோசடி தடுப்புப் பிரிவின் அதி­காரி, இன்னும் வாக்­கு­மூலம் பெறப்­ப­ட­வில்லை எனவும் வங்கி உள்­ளிட்ட சில ஆவ­ணங்­களைப் பெற வேண்­டி­யுள்­ள­தா­கவும் கூறினார்.

 இதனையடுத்து குறித்த ஆவணங்கள் அனைத்தையும் பெற்று உடன் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பிக்க நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டதுடன் அவ்வறிக்கையின் பின்னர் வழக்குத் திகதியை அறிவிப்பதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.