Header Ads



பலஸ்தீன சிறைக் கைதிகளின் விடுதலைக்காக, கையெழுத்து போட்ட NFGG


பலஸ்தீன சிறைக் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடாத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் NFGG  தலைமைத்துவ சபை சிரேஸ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது பூரண ஆதரவினை வழங்கினர். இன்று (04.05.2017) பலஸ்தீன துதுவராலயத்திற்கு விஜயம் செய்த NFGG தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட் ஆகியோர் அங்கு தமது கையெழுத்துக்களைப் பதிவு செய்து பலஸ்தீன கைதிகளின் விடுதலைக்கான  தமது ஆதரவினை வெளிப்படுத்தினர்.

இஸ்ரேல் சிறைகளில் அநியாயமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பலஸ்தீன கைதிகள் தமக்கு நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் விடுதலைக்கான ஆதரவை இலங்கையிலிருந்தும் தெரிவிக்குமுகமாக பலஸ்தீன துதுவராலயம் கையொப்பமிடும் இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. அதற்கிசங்கவே  NFGG பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தினர்.

அங்கு விஜயம் செய்த பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், நஜாமுஹம்மட் ஆகியோரை வரவேற்ற பலஸ்தீன துதுவர் சுஹைர் தார் செய்ட் அவர்கள் தமது போராட்டத்திற்கு NFGG வழங்கும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். பலஸ்தீன விவகாரங்களில் அண்மைய நாட்களில் இலங்கை அரசாங்கம் சர்வதேச அரங்குகளில் மேற்கொண்ட நிலைப்பாடுகள் பற்றி தாம் பெரிதும் கவலையும் ஏமாற்றமும் அடைவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக ஜெரூசலம் தொடர்பான யுனஸ்கோ தீர்மானம் வாககெடுப்புக்கு வந்த போது அதிலிருந்து இலங்கை விலகிக் கொண்டது தொடர்பாக தாம் பெரிதும் கவலையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பலஸ்தீன மக்களின் விடுதலைக்கான போராட்டத்திற்கு இலங்கையின் முழுமையான ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும்  தெரிவித்தார்.

பலஸ்தீன் விடுதலை விடயத்தில் முழுமையான ஆதரவினையும்,  பங்களிப்புக்களையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக NFGG பிரதி நிதிகள் பலஸ்தீன தூதுவரிடம் உறுதியளித்தனர்.


No comments

Powered by Blogger.