Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக தீவிர இனவாதம், அரசு பொறுப்பற்று செயற்படுகிறது - சம்பந்தனிடம் முறையிட்ட NFGG


முஸ்லிம்களுக்கெதிராக தீவிரமடைந்து வரும் இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் விசேட சந்திப் பொன்றினை கௌரவ. எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுடன் NFGG இன்று (23.05.2017) மேற்கொண்டது.

இன்று பிற்பகல் 04.00 மணியளவில் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் NFGG பிரதிநிதிகள் எதிர்கட்சித் தலைவரை சந்தித்து விரிவாக கலந்துரையாடினர்.

இதன் போது முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்கட்சித்தலைவரிடம் வலியுறுத்திக் கூறியதுடன் அரசாங்கம் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் தொடர்ந்தும் பொறுப்பற்ற வகையில் நடந்து வருவதையும் சுட்டிக் காட்டினர்.

கடந்த ஒரு மாத காலத்தில் இடம் பெற்ற இனவாத சம்பவங்கள் தொடர்பான விரிவான அறிக்கை யொன்றினையும் எதிர்கட்சித் தலைவரிடம் NFGG பிரதிநிதிகள் கையளித்தனர்.

இன்று மாலை சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பிலான விசேட பிரேரனையொன்றில் தான் உரையாற்றவுள்ளதாகவும் NFGG தெரிவித்த கருத்துக்களை சபையில் முன்வைப்பதாகவும் எதிர்கட்சித்தலைவர் உறுதியளித்தார்.

இந்த விசேட பிரேரணையானது கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சந்திப்பில்NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட், தலைமைத்துவ சபை உறுப்பினர்களான சட்டத்தரணி முஹம்மட் இம்தியாஸ், HMM. ஹனான் முஜிபுர் ரஹ்மான மற்றும் AW. முஹம்மட் சப்ரி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.