May 19, 2017

மனோவின் துணிச்சலுக்கு NFGG ஆதரவு

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ மனோகனேசன் அவர்களுடனான விசேட சந்திப் பொன்றினை NFGG பிரதிநிதிகள் இன்று (19.05.2017) மேற்கொண்டனர்.

அமைச்சரின் உத்தியோக பூர்வ கொழும்பு அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட், தலைமைத்துவ சபை உறுப்பினர்களான சட்டத்தரணி முஹம்மட் இம்தியாஸ், மற்றும் முஹம்மட் ஹனான் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

நாட்டில் தற்போது மீண்டும் தீவிரமடைந்து வரும் இனவாத சக்திகள் தொடர்பில் அமைசச்சர் மனோ கனேசன் அவர்கள் தெரிவித்திருக்கும் துணிச்சலான நியாயமான கருத்துக்களுக்கு ஆதரவினையும் நன்றியினையும் NFGG பிரதிநிதிகள் தெரிவித்துக் கொண்டனர்.

கடந்த 17.05.2017 அன்று சகவாழ்வு அமைச்சுக்கு வருகை தந்து அத்துமீறலான வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொள்ள முற்பட்ட கலகொட ஞானசார தேரர் குழுவினருக்கு அமைச்சர் மனோகனேசன் அவர்கள் துணிச்சலான தெளிவான பதிலினை வழங்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் “இந்த நாட்டிற்கு எல்லா சமூகங்களுமே வெளியிலிருந்து வந்தவர்களின் சந்ததிகள்தான் எனவும் இந்த நாடு எல்லா மக்களுக்கும் சமஉரிமை உடையது” என்பதையும் மிக ஆணித்தரமாக தெரிவித்திருந்தார்.

அமைச்சர் மனோகனேசன் அவர்களின் துணிச்சலான நியாயமான இந்தக் கருத்துக்கு ஆதரவும் நன்றியும் தெரிவிப்பதாக NFGG பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர். 

அத்தோடு எவ்வாறு இந்த இனவாத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் சகவாழ்வுக்கு பொறுப்பாக அமைச்சர் என்ற வகையில் சக தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து அத்தோடு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இனவாத சக்திகளுக்கு எதிரானவர்களையும் இணைத்துக் கொண்டு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் கலந்துரையாடப்பட்டது. அந்த வகையில் சர்வதேச சமூகப் பிரதிநிதிகளுக்கு இந்த விடயங்களைத் தெளிவுபடுத்தி அதன் மூலம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க்ககூடிய நடவடிக்கைகள் சிலவற்றை உடனடியாக மேற்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் அனைத்துக்குமான முழு ஒத்துழைப்புக்களையும், பங்களப்புக்களையும் வழங்குவதாக NFGG  பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

சந்திப்பின் இறுதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் யாப்புருவாக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

9 கருத்துரைகள்:

சும்மா கண்ணுமுன்னாலே பொய் சொல்ல வேண்டாம் ஞானசார வந்து மனோகணேஷோடு பேசும் போது இவரு மேல பார்த்து இருந்து கொண்டு சரியான பதிலை அவருக்கு கொடுக்காமல் ஞானசார சென்ற பிறகு நான் அப்படி இப்படி சொன்னனேன் என்று நல்ல பொய்யுடவேண்டியது தான் எது எப்படியோ ஞானசார வந்தான் சொல்லவேண்டியது சொன்னான் போனான் அது தான் உண்மை.

அந்த வெறி நாய் குரைப்பதை பார்த்து ஒரு அமைச்சரும் அதோடு சேர்ந்து குரைக்க முடியுமா என்ன ? நீ கத்திட்டுப்போ பின்னால உனக்கு வைக்கிறான் ஆப்பு என்று யோசிச்சு நல்ல கணக்கா வச்சி செய்யோணும் .அத விட்டிட்டு அது பேசுதுன்னு ஒரு அமைச்சரும் எதிர்வாதம் பண்ணினால் அது என்ன செய்யும் தெரியுமா? மனோகணேசனை ஒரு அமைச்சர் என்றும் பாராமல் கையை ஓங்கிவிடும் அதற்குப்பிறகு அமைச்சருடைய மானம் மரியாதை எல்லாம் அம்போதான் .அதனால் அமைச்சர் அந்தஇடத்தில் நடந்துகொண்ண்ட விதம் சரியானதும் புத்திசாலித்தனமாதுமே ...............

NO DOUBT BROTHER ABDUL RAHUMAN, YOU ARE PLANNING A ROAD MAP TO BECOME A NOMINATED MEMBER OF PARLIAMENT AT THE NEXT GENERAL ELECTIONS. THERE ARE RUMOURS THAT YOU HAVE AMAZED ENOUGH WEALTH THROUGH PROMOTING EDUCATIONAL OPENINGS FOR SRI LANKANS OF ALL THREE COMMUNITIES, ESPECIALLY THE TAMILS AND MUSLIM YOUTH DURING THE ETHNIC WAR/CONFLICT PERIOD WHICH CAN BE ASSUMED OR SUSPECTED TO BE CONSIDERED AS HUMAM TRAFFICKING, IF PROPERLY INQUIRED, BECAUSE NEARLY ALL OF THOSE WHO TRAVELED TO EUROPE AND NORTH AMERICA WITH VISAS OBTAINED THROUGH YOUR CHANNELS RE RUMOURED NEVER RETURNED TO SRI LANKA. IT IS SUSPECTED THAT MANY HAVE OBTAINED ASYLUM IN THOSE COUNTRIES. SOME OF YOUR ADMINISTRATIVE STAFF MEMBERS OF THE NFGG ARE THOSE DEPORTED FROM THE UK AFTER LOOSING THEIR ASYLUM APPLICATIONS, AND HAVE BEEN SUSPECTED AS WORKING WITH THE LTTE FRONT LOBBY GROUPS IN THE UK DURING THEIR STAY IN LONDON.
"THE MUSLIM VOICE" WISHES YOU TO BE A "CLEAN AND DILIGENT MUSLIM YOUTH POLITICIAN OF THE EASTERN PROVINCE" AND NOT BE AN OPPORTUNISTIC MUSLIM. THE MUSLIM VOICE WISHES YOU ALL SUCCESS IN THIS HONOURABLE PATH, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Watch Minister' statement in Parliament bro

Dinnunhan Rahumathulla:-அம்புலவோட தானே பேசுறது என்ன பயம் ?பசியுள்ள நேரம் தான் உணவு உட்கொள்ள வேண்டும் பிறகு உண்டால் அது பிரயோசமிருக்காது.

When a dog bites a man that is not news, but when a man bites a dog that is news!

பெண்களின் சேலைக்குபின்னால் ஓடி ஒழிக்கும் உங்கள் மினிஸ்டர்களை போய் கேட்க வேண்டியது தானே உங்கட கேள்விகளை.

ajan Antonyraj:-எங்கள் கேள்விகள் எல்லோருக்கும் பொருந்தும் தமிழர்க்கோ ,முஸ்லிம்களுக்கோ என்றல்ல!

Ajan Antonyraj:-ஞானசார முஸ்லீம் அமைச்சரை சந்தித்து நீங்கள் சொல்லுவது போன்று கேட்டு இருந்தால் அவர்கள் நிச்சியமாக கேட்கவேண்டிய கேள்வி கேட்டு இருப்பாங்க ஆனால் ஞானசார இதுவரைக்கும் முஸ்லீம் அமைச்சர் யாரையும் சந்திக்கவில்லை.இங்கு நாங்க மேலவுள்ள கேள்விகள் தமிழரோ முஸ்லிமோ என்று நாங்க நீங்க என்று முன்வைத்து எழுதவில்லை எல்லோருக்கும் பொதுவாக தான் தமிழ் பேசும் மக்கள் சார்பில் எழுதியுள்ளோம் அதை நீங்க விளங்கிக்கொள்ளுங்க Mr Ajan Antonyraj.

Post a Comment