Header Ads



சமகால அரசியல் நிலவரங்கள் - NFGG யின் மக்கள் சந்திப்பு


நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) நடாத்திய மக்கள் சந்திப்பு ஒன்று கடந்த 14.05.2017 அன்று மருதமுனை கலாசார மண்டபத்தில் நடை பெற்றது.
சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நிலைப்பாடுகள் என்ற தலைப்பில் இடம்பெற்ற இம்மக்கள் சந்திப்பு NFGGயின் மருதமுனை பிராந்திய செயற்குழு உறுப்பினர் அஸ்செய்க் மதீன் இஸ்லாஹி தலைமையில் இடம்பெற்றது.

இதில் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பிரதித் தவிசாளர் சிராஜ் மசூர், அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட், மற்றும் தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் நழீமி ஆகியோர் கலந்து கொண்டு விசேட உரைகளை ஆற்றினர். NFGGயின் மருதமுனை செயற்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மருதமுனை பிரதேச பிரமுகர்கள், NFGGயின் அம்பாரை, மட்டக்களப்பு பிரதேசங்களைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



1 comment:

  1. கிழக்கிலங்கையின் முக்கிய முஸ்லிம் நகரிலேயே ஒரு 50 பேரைக் கூட்ட முடியாத இவர்கள், யாரோ கொடுத்த தர்மத்தில் கிடைத்த வடமாகாண சபை உறுப்பினர் பதவியை வைத்துக்கொண்டு போடும் ஆட்டம் ரெம்ப ஓவர் என்பதை புரிந்து கொள்ளட்டும்.

    வடமாகாண சபை முஸ்லிம் உறுப்பினர் ராஜினாமா செய்தாலும் கூட, வடமாகாண சபையில் இவர்கள் இன்னொரு முஸ்லிம் உறுப்பினரை நியமிப்பதற்கு ஒப்பந்தத்தில் எந்த ஏற்பாடுகளும் இல்லை என்று அறிய முடிகின்றது. அத்துடன், தேர்தல் சட்டங்களின் படி, தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவரே நியமிக்கப்பட முடியும் என்றும் அறிய முடிகின்றது.

    அரசியல் விவேகமே இல்லாமல் செயற்படுவதை இவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மாற்றுக் சக்தியாக வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட NFGG, சகதியாக மாறிவிட்டது.

    ReplyDelete

Powered by Blogger.