Header Ads



கீதா Mp பதவி, வகிக்கமுடியாது - நீதிமன்றம் அதிரடி

இரட்டை குடியுரிமை பெற்ற கீதா குமாரசிங்க இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கீதாவுக்கு எதிரான இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்றைய -03- தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி விஜித் மலல்கொடவின் இணக்கத்திற்கு அமைய, நீதிபதி பத்மன் சூரசேன இந்த தீர்ப்பினை அறிவித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்து குடியுரிமையை பெற்றுள்ள கீதா குமாரசிங்க தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது.

மேலும், இரட்டை குடியுரிமை பெற்ற எவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்ற முடியாது என்பது தற்போதைய சட்டம் என கீதாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

காலி மாவட்டத்தைச் சேர்ந்த கே. புவனக்க, ஜே.கே. அபேவர்தன உள்ளிட்ட நான்கு பேர் கீதா குமாரசிங்கவிற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.