Header Ads



MIM மொகிதீன் எழுதிய 'இலங்கையின் இனத்துவ முரண்பாடும், அதிகாரப் பரவலாக்கமும்' நூல்

முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் (MULF) தாபகச் செயலாளர் நாயகமும், முஸ்லிம்களுக்கான அமைதிச் செயலகத்தின் செயலாளர் நாயகமுமாக கடந்த காலங்களில் செயல்பட்ட நில, கட்டிட அளவையாளர் எம்.ஐ.எம்.மொகிதீன் எழுதிய இலங்கையின் இனத்துவ முரண்பாடும் அதிகாரப் பரவலாக்கமும் நூல் வெளியீடு சித்திலெப்பை ஆய்வுமன்றத்தின் ஏற்பாட்டில் (2017-05-20) எதிர்வரும் சனிக்கிழமை 4 மணிக்கு கொழும்பு தபாலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக எம்.ஐ.எம்.மொகிதீன், சிறப்பதிதியாக முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளருமான பஷீர் சேகுதாவுத் விஷேட அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.எம்.எம். நாஜிம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அதேவேளை சிறப்புப்பேச்சாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். சுஹைர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார். அனைவரையும் அன்புக்கரம் நீட்டி அழைக்கிறது சித்திலெப்பை ஆய்வு மன்றம்.


1 comment:

  1. எங்களுக்கு எல்லாம் நல்லா இலங்கை வரலாறு தெரியும் இவனுக்கு தான் ஒன்றும் தெரியாது .இலங்கைக்கும் முதல் முதலில் வந்து காலடி வைத்தவர் ஆதம் நபி அவர்கள் அதற்கு தான் சொல்லுறது ஆதம் பாவ அதாவது பாவது மலையென்று அங்கே அவர்களில் காலடி பாதம் யாரும் காணலாம் இன்னுமொரு பவுத்தர்களின் வரலாறு அவர்கள் பங்காளதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் இலங்கைக்கு அதற்கு முன்பு இலங்கையில் புத்தர்கள் இருக்கவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.