Header Ads



''FCID'' மூடப்­ப­டு­ம் - சிங்­களப் பத்­தி­ரி­கை­ செய்தி

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்­பெற்ற பாரிய நிதி மோசடி குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள நல்­லாட்சி அர­சாங்கம் நிய­மித்த ஊழலைக் கட்­டுப்­ப­டுத்தும் குழுவின் அலு­வ­ல­கத்தை மூடி­விட நல்­லாட்சி அரசின் ஒரு தரப்­பினர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக சிங்­களப் பத்­தி­ரி­கை­யொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது. 

இதன் ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கை­யாக தற்­போது ஊழலைக் கட்­டுப்­ப­டுத்தும் குழுவின் செய­ல­கத்தின் மூலம் நிதிக் குற்­றச்­சாட்டுப் பிரி­வுக்கு முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களில் ஒரு பகுதி இர­க­சிய பொலி­ஸா­ருக்கும் ஏனைய விசேட விசா­ரணைப் பிரி­வு­க­ளுக்கும் அனுப்பி வைக்கும் நடை­முறை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அனைத்து முறைப்­பா­டு­களும் நிதிக் குற்­றங்கள் தொடர்­பா­னவை என்­பதால் அது தொடர்­பாக நிபு­ணத்­துவம் பெற்ற அதி­கா­ரி­களைக் கொண்ட குழுவை நிதிக் குற்றப் பிரி­வி­லி­ருந்து அப்புறப்படுத்தி ஏனைய பிரிவுகளுக்கு ஒப்படைப்பது கேள்விக்குறியாகவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.