Header Ads



மலையில் சிலை, கிழக்கு மாகாணசபை விட்டுக்கொடுக்கிறதா - திரைமறைவில் பல நிகழ்வுகள்..!

(உமர்)

மாயக்கல்லி மலை சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் புதியதொரு பௌத்த விகாரையை அமைப்பதற்கு எடுத்த முயற்சி பல தரப்பினரின் அழுத்தத்தினாலும்,பொதுமக்களின் பலத்த எதிர்ப்பினாலும் தற்காலிகமாக கைவிடப்படிருக்கின்ற போதிலும், அவ்விடயம் சம்மந்தமான பல நிகழ்வுகள் மூடிய அறைகளினுள்ளே திரைமறைவில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்தப்பிரச்சினையில் ஒரு கட்டமாக பௌத்தவிகாரை அமைப்பதற்கு பொருத்தமான இடமொன்றினை முன்மொழியுமாறு ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.அக்குழுவில் எம்மவர்க்களும்தான் உறுப்பினர்களாக உள்ளார்கள்.அக்குழு அமைக்கப்பட்டபோது முஸ்லீம்கள்  அனைவரும் மௌனம் சாதித்துக்கொண்டிருந்தார்களே ஒழிய பன்சலை ஒன்று இந்த இடத்தில்  தேவையில்லை ,அவ்வாறு பன்சலையே தேவையில்லாத இடத்து இந்தக்குழுவே தேவையில்லை என்று உரத்துக்கூறி தமது எதிர்ப்பினை வெளிக்காட்டவில்லை.

பௌத்தர்கள் யாரும் இல்லாத இடத்தில் வழிபாட்டுத்தலம் எதற்கு?அரசர்கள் வாழ்ந்த இடத்தில் அரண்மனையும் அவை சார்ந்த இடங்களில் எல்லாம் வழிபாட்டுத்தலங்கள் நிர்மாணிக்கப்படவேண்டுமென்று இந்நாட்டில் ஏதாவது சட்டம் உண்டா என்று உரக்கக்கூறவேண்டியவர்கள் மௌனம் சாதிப்பது என் என்றுதான் புரியவில்லை.

மட்டுமன்றி இந்த விடையம் சம்மந்தமான விசேட கூட்டமொன்று திருகோணமலையில் இவ்வாரம்  நடைபெற்ற வேளையில் மாயக்க்கல்லி மலை பிரச்சினை என்ற விடையத்தை விடுத்து மாணிக்கமடு என்ற பிரச்சினையை மட்டுமே பேசுங்கள்,அந்த இடம் மாணிக்கமடுவே அன்றி மாயக்க்கல்லி அல்ல  என்று சிங்கள மாகான சபை உறுப்பினர்கள் கூறியிருக்கின்றார்கள்,இதன்போது எமது உறுப்பினர்கள் வாளாவிருந்தது ஏன்.மாகான காணி,கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி அவர்கள்  இந்த விடையத்தில் குறுக்கிட்டு எமக்கு சார்பாக பேசியிருக்கின்றார்.

மக்கள் காலகாலமாக குறித்த இடத்தை எவ்வாறு அழைத்துவருகின்றார்களோ அதுவே அவ்விடத்தின் பெயராகும் என தர்க்கித்திருக்கின்றார்.

இதுபோலவேதான் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை துறைமுகமென்ற பெயரையும லங்கா பட்டணம் என்று மாற்றிவிட்டு பேரினவாத நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றிக்கொண்டு வருகின்றார்கள்.

இதற்கிடையில் குறித்த மாயக்கல்லி மலை பிரதேசத்தில் முஸ்லீம் மக்களிடம் இருந்து சுவீகரிக்க இருந்த காணியினை கைவிட்டுவிட்டு,அருகில் இருக்கும் தமிழர் ஒருவரது காணியினை பணம்கொடுத்து வாங்குவதற்குரிய நிகழ்சிகளும் திரைமறைவில் நடைபெற்றுவருவதாகவும்,தமிழரான அந்தக்காணிச் சொந்தக்காரர்  அச்சுறுத்தபட்டோ அல்லது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டோ சம்மதிக்க வைக்கப்பட்டதாவும் தகவல்கள் கசிந்துளன.சட்டததரணிகள் இதுவிடையமாக காணி அபிவிருத்திச்சட்டங்களில் கூறப்பட்டுள்ள பிரிவுகளிநூடாக ஆராய்ந்து சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்களா?

இதுதவிர அம்பாறை அரசாங்க அதிபரானவர் இது எதுவும் சரிவரா விட்டால் அருகே காணப்படும் அரச காணியினை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூகங்களுக்கிடையிலான நல்லுறவு சிதைந்துபோகக்கூடிய எந்த செயல்களையும் மாவட்டத்தில் நடைபெறாமா தடுக்கவேண்டியது மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களது கடமையாகும்.அவர் இவ்வாறு தன பாட்டில் முடிவெடுப்பதை முஸ்லீம் அரசியல் வாதிகள் அனைவருமொருமித்த குரலில் ஆட்சேபிக்க வேண்டும், இவ்வாட்சேபனை மாகாண,தேசியமட்டங்களில் வலுவான ரீதியில் இடம்பெறவேண்டும்.

1 comment:

  1. அம்பாரை மாவட்டத்தில் தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையானோர், அங்கு அவர்கள் 'முஸ்லிம் தனிஅலகு' வேற கேட்டார்கள்.

    ஆனால் போகிற போக்கைப்பார்தால், வெகு விரைவில் அங்கும் சிறுபான்மையினராக வந்து விடுவார்கள் போலுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.