May 22, 2017

சிங்கள இனவாதத்திற்கு எதிராக, முஸ்லிம்கள் ஹர்த்தால் செய்யனுமா..?

எல்லைமீறும் காவித் தீவிரவாதத்துக்கு எதிராக   எதிர்வரும் 24.05.2017 புதன்கிழமை  முழு இலங்கை முஸ்லிம்களும் ஒரு நாள் கடையடைப்பு, தொழில்,கல்வி ரீதியாக தவிர்ந்திருந்து தமது அளுத்தத்தை சர்வதேசத்துக்கும்,அரசுக்கும் தெரிவிக்குமாறு ஹர்தாலுக்கான ஓர்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எல்லை கடந்து செல்லும் காவித் தீவிரவாதத்துக்கு எதிராக நமது ஒற்றுமைகளையும் நமது கண்டனங்களையும் நமது எதிர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.  ஆனால் அவை ஒவ்வொன்றும் மிக நிதானமாகவும், காலத்துக்கு ஏற்பவும் சூழ்நிலைக்கு ஏற்பவும் முஸ்லிம் சமூகம் முடிவுகளை எடுத்துகொள்ள வேண்டும்.

அந்த வகையில் எதிர்வரும் 24.05.2017 புதன்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட வேண்டுமா? என்று பார்த்தால்,

இந்த ஹர்த்தாலுக்கான  அழைப்பு ஒரு தனிநபரால் விடுக்கப்பட்டுள்ளது இன்றைய காலகட்டத்தில் தனிநபர்களின் அழைப்புக்கு பின்னால் முஸ்லிம் சமூகம் சில வேளைகளில் பிழையான முடிவுகளை எடுக்கவும் வாய்ப்புண்டு.
இந்த ஹர்த்தால் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஒரு சில ஊர்கள்   வர்த்தக நிலையங்களை மூடியும்… ஒரு சில ஊர்கள்  இந்ந அழைப்பை புறக்கணித்து வர்த்தக நிலையங்களை திறந்தும்… இந்த ஹர்த்தாலின் ஊடாக மீண்டும் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையின்மையை சர்வதேசத்துக்கும்,அரசுக்கும் எடுத்து காட்ட வேண்டுமா?

அல்லது இனவாதிகளால்  குறிவைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் வர்த்தகத்தை  (கிழக்கில்) சில ஊர்களில் கடையடைப்பு செய்து நமது வெளியூர் முஸ்லிம் வர்த்தகத்தை நாமாக இனவாதிகளால் பழி வேண்ட  வழி அமைத்து கொடுக்க  வேண்டுமா? அல்லது  நிலமை இவ்வாறு தொடர்ந்தால்  ஒரு ஹர்த்தால் வேறு ஒரு  நாளில் முஸ்லிம்,தமிழ்,சிங்கள  சிவில் தலைமைகள் புத்திஜீவிகள்  எல்லோரும் ஒன்றினைந்து  சர்வதேசத்கும்,அரசுக்கும் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் ஒரே நாளில் நாடு பூரவும் கவன ஈர்ப்பு போராட்டங்கள், கண்டனகையழுத்துக்கள் அடங்கிய மஹஜர்கள், கடையடைப்புகள்  நடாத்தப்பட்டு  ஒற்றுமையையான ஓர் அழுத்தத்தை கொடுக்க வேண்டுமா? நாட்டில் நடைபெறும் மதவாத பழிவாங்களுக்கு பெரும்பாலான பெளத்தர்களும் பெளத்த மதகுருக்களும் ஆதரவு இல்லை.  சில கடும்போக்கு பெளத்த இயக்கத்தினால் முன்னெடுக்கப்படும்  இவ்வாரான செயட்பாடுகளுக்கு ஒட்டுமொத்த பெளத்தர்களும் பொருப்பாக மாட்டார்கள். அந்த வகையில் அன்மைக்காலமாக இன விரிசலை ஏற்படுத்தி அதனூடாக ஓர் இனக்கலவரத்தை தூண்ட  முனையும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் விடயத்தில் முஸ்லிம் சமூகம் மிக நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்.

ஹர்தாலுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 24ம் திகதி ஞானசார தேரர் நீதிமன்றை அவமதித்த குற்றத்திற்காக மேன்முறையீற்று நீதிமன்றல்  விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார்.

குறித்த தினம் அன்று நாம் ஹர்த்தால் பன்னுவதால் சில சமயம் அன்றைய நாள் ஞானசாரவுக்கு  சாதகமாகவும் அமையவாய்ப்புண்டு.  ஞானசாரவை சட்டரீதியாக தண்டிப்பது மாத்திரமே முஸ்லிம்களிடம் உள்ள தீர்வாகுகேக் தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஹர்த்தால்  செய்தால் அது பெளத்த இனவாதிகளால் பெளத்தர்களுக்கு எதிரான ஹர்த்தாலாக  காண்பிக்கப்படும்.
இவ்வாரான சூழ்நிலையில் சட்டரீதியாக ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  போது ? இனவாத இயக்கங்கள் சட்டத்தில் இருந்து  ஞானசாரவை தப்பிக்க ஞானசாரவுக்கு ஆதரவாக பெளத்தர்கள் ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டும்  என்று அழைப்பு விடுத்தால் வெளியூர்களில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்களின்  நிலவரம் என்ன?
சிந்தித்து செயட்படுவோம்…!

முஹம்மட் பர்சாத்

6 கருத்துரைகள்:

A strike at this moment and on that date is
NEGATIVE ! It would look like forcing the
courts in our favour rather than against
Gnanasara . And also , it would look helping
Doctors strike. We are in a difficult
situation and shouldn't follow one man's call
blindly without an objective ! What is the
follow up action plan ? Better ignore the call.

புதன்கிழமை எவ்வகையிலும் ஹர்தாள் அனுஷ்டிப்பது பொருத்தமாகாது,புதன்கிழமை நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்பதை பார்த்து முடிவடுப்பதுதான் சிறந்த வழி

My opinion it will not have positive impact. Rather it will give some sort of negative impact.
We can write million letter to President and Priminister to establish, law and order in the country,
( adult and young including school students, every one write a own letter and post it to President and Priminister)

It is only a request from one man from abroad.Please understand it has to neglected taking into consideration of the ground situation. If at all it has to done should be organized by all the Organizations together with the Parliamentarians and be well planned to face repercussions

Correct message.

WE Muslim Should not follow individual calls in this issue..

Rather Stay under to order of acceptable leadership which includes all the experts, leaders, ministers and scholars under one umbrella.

Never listen to the call of one individual.. this will only show our disunity as there will be some obey him and some will oppose his way.

May Allah Give us a Courage Islamic Leader who only fear Allah and Act wisely to solve the problems of today.

இந்த ஹர்த்தாலுக்கு எதிராக அனைத்து இணையத் தளங்களிலும் செய்திகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

Post a Comment