Header Ads



முஸ்லிம் பிரதேசத்தில் புத்தர் சிலை, சகல நடவடிக்கைகளும் நிறுத்தம்

-ARA.Fareel-

மாணிக்­க­மடு – மாயக்­கல்லி மலைப்­பி­ர­தே­சத்தில் தற்­போ­தைக்கு எந்­த­வித நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட மாட்­டாது.

அனைத்து நட­வ­டிக்­கை­களும் தற்­கா­லி­க­மாக பிற்­போ­டப்­பட்­டுள்­ளது என மாணிக்­க­மடு பரி­வார சைத்­திய மகா விகா­ரையின் அதி­பதி அம்­பே­பிட்­டிய சீல­ரத்ன தேரர் குறிப்­பிட்டார்.

மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் விகாரை நிர்­மாணப் பணி­களை ஆரம்­பிப்­ப­தற்­காக நேற்று மே மாதம் 1 ஆம் திகதி நடாத்­தப்­ப­ட­
இ­ருந்த பூஜை வழி­பா­டுகள் குறித்து வின­விய போதே அவர் இவ்­வாறு கூறினார்.

முதலாம் திகதி (நேற்று) நடத்த திட்­ட­மிட்­டி­ருந்த பூஜை வழி­பா­டு­களும் கால­வ­ரை­ய­றை­யின்றி பிற்­போ­டப்­பட்­டுள்­ள­தா­கவும் இது தொடர்­பாக பின்னர் அறி­விக்­கப்­ப­டு­மெ­னவும் அவர் கூறினார்.

இதே வேளை மாயக்­கல்லி மலைப்­பி­ர­தே­சத்தில் எந்த வித­மான புதிய கட்­டட நிர்­மா­ணங்­க­ளையும் அமைக்­கா­த­வாறு தான் உரிய நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­திரி பால சிறி­சேன தன்­னி­டமும் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்­பந்­த­னி­டமும் தெரி­வித்­துள்­ள­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

2 comments:

  1. இனிமேலும் குள்ளநரி அரசியல்வாதிகளான மைத்ரி, ரணிலை நம்பி ஏமாறுவதைவிட தப்புசெய்தனக்கு மன்னிப்புக்கொடுத்து அவனை சேர்த்துவாழ்வது மேலென தோன்றுகிறது.எனவே நாம் அனைவரும் இவர்களிமிருந்து விடுபடுவதை முதலில் செய்யவேண்டிய காலத்தின் கட்டாயத்திலுள்ளோம். இவர்கள் ஒரு நேர்மையான அரசியல் தலைவர்களல்ல.

    ReplyDelete
  2. இது முஸ்லிம்களை ஏமாற்ற நடக்கும் சதி. அந்த இடத்தில் election முடிந்தவுடன் எப்படியும் சிலை / பன்சலை வரத்தான் போகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.