May 06, 2017

இலங்கை சட்டத்தரணி சித்தீக், லண்டனில் வபாத் - இறுதி ஆசையை நிறைவேற்றி வைத்த அல்லாஹ்..!

-Abdul Razak-

சட்டத்தரணியும் கணக்காளரும் Milton Keynes இலங்கை மஸ்ஜிதின் Founder Member உம் அதன் பொருலாளருமான மர்ஹூம் சித்தீக் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று மாலை 7.00 மணிக்கு MK Wolverton மையவாடியில் அலையாகத் திரண்டிருந்த மக்களின் கண்ணீர் வெள்ளத்துக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கத்தின் போது மாணவ ஹாபிஸ்களான அவரின் ஆண் குழந்தைகள் தனது தந்தைக்காக அழுதழுது குர்ஆன் திலாவத் செய்தது கள்நெஞ்சர்களையும் உருக்கும் ஒரு சோக நிகழ்வாகவிருந்தது.

மரணத்தறுவாயில் அவருடைய ஆசை என்னவாக இருந்தது என்பதை நல்லடக்க நிகழ்வில் இமாம் வாசித்தார். ஆமாம் தன்னுடைய 4 ஆண் குழந்தைகளும் புனிதக் குர்ஆனைச் சுமந்த ஹாபிஸ்களாக தன்னை மறுமையில் சந்திக்க வேண்டும் என்பதே அவறுடைய இறுதி ஆசை.

'ஆகும் பயிரை அடியிலே தெரியும்' என்பது போல், நல்லடக்கத்தின் போது, அவருடைய பிள்ளைகளின் குர்ஆன் திலாவத் நிரூபித்து விட்டது. இன்ஷா அல்லாஹ் அவருடைய தன்னிகரில்லா ஆசை நிறைவேறும்.

ஜனாஸா தொழுகை:

Milton Keynes யில் வாழும் இலங்கையருக்கு ஒரு மஸ்ஜித்தின் தேவைப்பாடு இருந்த சூழ் நிலையில்  அதன் கட்டிட நிர்மாணப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த மர்ஹூம் சித்தீக் அவர்கள் அந்தப் பள்ளிவாயலின் திறப்பு விழா எதிர்வரும் றம்ழான் தலை நோன்பு தினத்தன்று நடைபெறவிருந்தது. ஆனால், அவர் அந்த நிகழ்வுக்கு முன்பே இறையடி சேர்ந்து விட்டார். 

பாருங்கள் சகோதரர்களே !
அல்லாஹ் நன்றிமிக்கவன்; இஃலாசான உள்ளங்களின் இதயத் தாகங்களைத் தீர்ப்பவன். ஆமாம், இங்கிலாந்தின் பலபாகங்களிலுமிருந்தும் வந்திருந்த மஸ்ஜித் தர்மகர்த்தாக்கள் , அலை கடலெனத் திரண்டிருந்த உள்ளூர் வெளியூர் மஹல்லாவாசிகள் முன்னிலையில் ஜனாஸாத் தொழுகை நடைபெற்று மர்ஹூம் சித்தீக் அவர்களின் இறுதி ஆசையைக்ஙகூட அல்லாஹ் நிறைவேற்றி வைத்தான்.

மர்ஹூம் சித்தீக் அவர்கள் எங்கள் சமூகத்துக்கு ஒரு Role model ஆக வாழ்ந்துவிட்டுச் சென்றவர். தான் ஒரு சட்டத்தரணி, மற்றும் தலைசிறந்த கணக்காளர் என்ற கற்கால கெளரவ அளவுகோல்களுக்கு அப்பால் தன்னுடைய மனைவி, பிள்ளைகளை தீனுடைய பாசறைக்குள் பாசமூட்டி வளர்த்தவர். இங்கிலாந்தின் மேற்கத்திய கலாச்சாரப் பிடிகளிலுருந்து நமது சமூகத்தைக் காக்கப் புறப்பட்ட ஓர் உன்னதமான ஆத்மா அது.

லண்டன் வந்தோமா நாலு பணத்தை உழைத்தோமா தானும் தன் குடும்பமும் அனுபவித்தோமா என்று தப்பிச் சென்று கொண்டிருக்கின்ற ஓர் எண்ணிகரில்லாத மக்களுக்கு மத்தியில் மர்ஹூம் சித்தீக் அவர்கள் சமூக பொது நல நடவடிக்கைகளில் தன்னை அர்ப்பணித்துப் பாடுபட்டுழைத்த தன்னிகரில்லாதவர்.

பட்டத்தையும் பதவியையும் பெரும் மகுடமாக நினைப்பவர்களை பெரும் விகடமாக நினைப்பவர். அகம்பாவம் தலைக்கணம் என்றால் ஒரு கிலோ என்ன விலையெனக் கேட்பவர். வாழ்ந்தால் இவரைப் போல் வாழ வேண்டும்; வீழ்ந்தால் இவரைப் போல் வீழ வேண்டும் என்பதே இன்றைய இங்கிலாந்தின் பேசும் பொருளாகும்

யா அல்லாஹ்!
அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை நசீபாக்குவாயாக ! அன்னாரை இழந்து தவிக்கும் மனைவி , பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் , நண்பர்கள் யாவருக்கும் பக்கபலமாக இருப்பாயாக !
ஆமீன் ! ஆமீன் !! யாரப்பல் ஆலமீன் !!!

6 கருத்துரைகள்:

اللهم اغفر له وارحمه

اللهم اغفر له وارحمه اللهم اجعل قبره روضة من رياض الجنة

Yes. Marhoom Siddiq is a role model having examplified on how to lead a meaningful Islamic life wherever we live .With humble begining he rose to adorable echelon.
May Allah swa grant him The Highest Rank in Jannah.

May Allah Almighty accept his good deeds and forgive him and reward the highest rank of jennathul firdhouse.

May allah swa grant him jannathul firdouse and grant comfort to his wife and children

Post a Comment