Header Ads



நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு, பகிரங்க மடல்

-முஜாஹித் நிஸார்-

நல்லாட்சி என்ற நாமத்தில் உருவாகிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இந்நாட்டில் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முக்கிய பங்காளியாக செயற்பட்டது யாவரும் அறிந்த உண்மையே. இன்று அதிமேதகு ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனா நாட்டின் தலைமை தீர்மானிப்பதில் பெரிதும் பங்காற்றினர் . சந்தர்ப்ப சூழ்நிலை மக்கள் ஆணை சொற்ப வாக்குகளால் கிழக்கில் தவறிவிட்டது.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒருங்கிணைந்த அரசியல் மேற்கொண்டு அதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கு ஒரு போனஸ் ஆசனத்தை கட்சியின் ராஜதந்திரமாக காய் நகர்த்தி ஒரு அரசியலில்  முஸ்லீம் பிரதிநிதியை அரசியல் அதிகாரமில்லாத யாழ் முஸ்லீம் சமூத்திற்கு பெற்றுத்தந்ததை  யாவரும் மறுக்கவோ , மறக்கவோ முடியாது. சகோதரர் அயூப் அஸ்மின் அவர்கள் அரசியலில் அதிகாரமில்லாத யாழ் முஸ்லீம் சமூகத்திற்கு விடிவெள்ளியாக பல்வேறு பணிகளை செய்துவந்தது குறிப்பிடத்தக்கது. இரு தினங்களுக்கு முன்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஊடக அறிக்கையில் வடமாகாணத்தின் யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட போனஸ் ஆசனத்தின் மூலம் நியமிக்கட்ட சகோதரர் அயூப் அஸ்மின் அவர்கள் மீளழைக்கப்பட்டு ,  அவருக்கு பதிலாக பிறிதோர் நபரை நியமிப்பதாக பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் காணக்கூடியதாக இருந்தது. அவ்வாசனத்தை மீள் நிரப்புவதற்கு தங்களுடைய கட்சியின் அங்கத்தவரோ அல்லது மக்களின் செல்வாக்கு பெற்ற நபரையோ குறிப்பாக யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது சாலச்சிறந்தது. ஏனெனின்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திரத்தின் ஒன்றாக யாழ் மாவட்ட முஸ்லிம்களுக்கு தங்களுடைய அரசியலில்  ஒரு அதிகாரத்தினை வழங்குவதைக்காணக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி இமாம் அவர்களைக் குறிப்பிடலாம்.  காரணம் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் பழைமையான நல்லிணக்கமான உறவுகள் காணப்படுகின்றது . 

மேற்படி வெற்றிடத்தை யாழ் மாவட்டத்திற்கு வழங்கவேண்டுமென்பதுடன் குறிப்பாக மன்னார்  மாவட்டத்திற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், ஹபீப் ரயீஸ், வவுனியா மாவட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாகாண சபை உறுப்பினர் ஜநூபுர் போன்ற பல்வேறு அரசியல் பிரமுகர்கள் காணப்படுகின்றனர். அதேசமயம் மேற்படி வெற்றிடத்திற்கு யாழ் மாவட்டத்தை சேர்ந்த முஸ்லீம் பிரதிநிதியை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறு புறக்கணிக்கும் சந்தர்ப்பத்தில் யாழ் முஸ்லிம்களின் விடியலாக அமைந்த  மீள்குடியேற்றம் பகல் கனவாக மாறுவதற்கு வழிவிடாதீர்கள். அதனால் யாழ் மாவட்டத்தை சேர்ந்த முஸ்லீம் நபருக்கு மாகாணசபை உறுப்புரிமை ஆசனத்தை வழங்கி யாழ் முஸ்லிம்களின் கனவுகளையும், அபிலாஷைகளையும் நனவாக்குவப்பவர்களாக இந்த நல்லாட்சியின் முன்னோடியான நல்லாட்சிக்கான   தேசிய முன்னனி செயற்பட வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

No comments

Powered by Blogger.