Header Ads



மோதல் வேண்டாம் என அமைச்சர்களுக்கு ஜனாதிபதி உபதேசம்

முரண்பாடுகளை களையுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கும், தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார். முரண்பாடுகளை களைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் ஐக்கியத்தைப் பேணி பாதுகாக்க வேண்டிய கடப்பாடு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றுக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை பெரிதுபடுத்தாது முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமக்கு ராஜிதவுடன் பிரச்சினை இல்லை என ஜோன் செனவிரட்னவும், தமக்கு ஜோனுடன் பிரச்சினை இல்லை என ராஜிதவும் இதன்போது கூறியுள்ளனர்.

பகிரங்கமாக விமர்சனம் செய்து கொண்டமைக்காக இருவரும் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.

அமைச்சரவையின் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.

2 comments:

  1. Rombaa mukkiyam...?
    Naattil etthanayo perachna avaigalai teerkka vakkilla....!!!

    ReplyDelete

Powered by Blogger.