Header Ads



தோப்பூர் பதற்றநிலை பற்றிய இன்றைய கூட்டம், முஸ்லிம்களுக்கு பாதகமானதா..?


-கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் Alm Nazeer முகநூலில் இருந்து-

தோப்பூர் செல்வநகர் நீனாகேணி செருவில பகுதியில் நீனாக் கேணி பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையினூடாக வந்த காடையர்கள் செல்வநகர் பிரதேசத்தில் இருந்த சில முஸ்லிம் மக்கள் குடியிருப்புக்களுக்குச் சென்று அடாவடித்தனம் செய்த வேளையில் அப்பகுதி மக்கள் செல்வநகர் பள்ளிவாசலை நோக்கி இடம்பெயர்ந்த நிலை நேற்று (17) உருவானது. குறித்த மூதூர், தோப்பூர் செல்வநகர் பதற்றநிலை நிலை தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (17) கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது;

கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இங்கு இரண்டு சாரர்களினாலும், உயர் அதிகாரிகாளிடத்திலும் விரிவான விளக்கம் கோரப்பட்டதை தொடர்ந்து குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்தினுடையது என 1975, 2013ஆம் ஆண்டும் வர்த்தகமாணி அறிவித்தலினால் குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்தினுடையது என அறிவிக்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் இருந்த குறித்த இடத்தில் 44 வீடுகள் கடந்த 15வருடமாக அமைக்கப்பட்டிருந்ததாலும், வாக்காளர் அட்டையில் அவர்களின் இடம் குறிக்கப்பட்டதாலும் குறித்த இடத்தில் எவ்விதமான வீடுகளும் அகற்றப்பட மட்டாது எனவும் மேலதிக கட்டுமானப்பணிகளும் இடம்பெற முடியாது எனவும் அவ்வாறு மேலதிகள் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இருந்தால் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதி பெற வேண்டும். எனவும் ஆளுநரினால் இங்கு உத்தரவு இடப்பட்டது.

இதனைத்தொடந்து குறித்த பகுதியில் உள்ள வனபரிபாலன திணைக்களத்தினுடையது என அறிவிக்கப்பட்ட இடத்தில் தோட்ட காணிகள் உள்ளதால் அங்கு எவ்வித நடவடிக்கைகளும் அங்குள்ள மக்களினால் இடம்பெற முடியுமா என கேள்வி எழுந்ததை தொடர்ந்து குறித்த இடத்தில் மக்களினால் எவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளலாமா என சரியான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டார். கிழக்கு மாகாண அரசங்க அதிபர் தலைமையில் மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாள ஆகியோர் 01மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனார்.

மேலும், இதனை தொடர்ந்து அங்கு இரு சாரர்களிடத்திலும் பரஸ்பர ஒற்றுமையுடன் பிரச்சினைக்கு அவ்விடத்தில் தீர்வு எட்டப்பட்டடு சமாதனத்துடன் குறித்த பதற்றத்திற்கு சாதகமான தீர்வு எட்டப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இம்றான் மஹ்ரூப் , எம்.எஸ் தெளபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், அரசங்க அதிபர், முப்படைத்தளபதிகள், பெளத்த குருமார்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. தமிழர்கள் இந்த தருணத்தில் அமைதி காப்போம் 😂😂

    ReplyDelete

Powered by Blogger.