Header Ads



அஸ்ரப் வைத்தியசாலைக்கு வசதிகளுடன்கூடிய, அவசர சிகிச்சை பிரிவு - அமைச்சரவை அனுமதி

-மு.இ.உமர் அலி-

கிடைக்குமா ?கிடைக்காதா ? இதனை செய்து முடிப்பாரா ? என்று இதுவரை சர்ச்சைக்குரியதாக இருந்துவந்த கல்முனை அஸ்ரப் ஞாபகாத்த வைத்தியசாலையின்  நவீன வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சைப்பிரிவினை அமைப்பதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளது.

கடந்த 2015 ஆம்  ஆண்டு மைத்திரிபால சிரிசேன அவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் அமையப்பெற்ற புது அமைச்சரவை ஆரம்பித்ததில் இருந்து இந்த அவசர சிகிச்சைபிரிவினை எங்கு அமைப்பது என்பது  இழுபறி நிலையிலேயே இருந்து வந்தது.அப்போதிருந்த சுகாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ ஹசனலி அவர்கள் கூட பலவழிகளிலும் இதனை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியாசலைக்கு கொண்டுவருவதற்கு முயற்சித்தும் பயனளிக்காமல்  கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலை இந்தவாய்ப்பினை பெற்றுக்கொண்டது.

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிருவாகம்,வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உட்பட பல சமூக நிறுவனங்கள் ஒன்றிணைந்து  பிரதியமைச்சர் பைசால் காசீம் அவர்களிடம் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு அவசர சிகிச்சைப்பிரிவொன்று இந்த வைத்தியசாலையில் அமையவேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தனர்.இதனைத்தொடர்ந்து தொடர்ந்து பிரதியமைச்சர் பைசால்காசீம் அவர்கள் எடுத்த அயராததும்,தொடர்ச்சியானதுமான முயற்சியின் பலனாக இந்த நான்கு மாடியினாலான கட்டிடத்தொகுதியினை அமைப்பதற்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று 02.05.2017 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரைவை கூட்டத்தில் பதிலமைச்சராக கலந்துகொண்ட பைசால்காசீம் அவர்கள் முன்வைத்த இந்த பிரேரணை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. 

ரூபா 1449,153444/81 (1449மில்லியன்) பெறுமதியான இக்கட்டிடம் CT ஸ்கேன்  உட்பட இன்னும் பல நவீன வசதிகளை கொண்டதாக இருக்கும்.இப்பிரதேச மக்கள் அவசர நோய் நிலைகளின்போது நவீன சிகிச்சைகளை பெறுவதற்கும்,தூர இடங்களுக்கு நோயாளர்களை மாற்றம் செய்வதனால் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை சமாளிப்பதற்கும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வைத்தியசாலையில் ஒரு கட்டிடத்தொகுதியை அமைப்பதற்காக ஒரே தடவையில் பாரியளவிலான நிதி ஒதுக்கபடுவது இதுவே முதல்தடவையாகும்.

தமக்கு வாக்களித்த மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு பிரதி அமைச்சர் பைசால்காசீம் அவர்கள் தமது அமைச்சினூடாக பலவழிகளிலும் முயற்சித்து வருவது கடந்த காலசெயல்பாடுகளிநூடாக நிரூபிக்கப்பட்டு வருகின்றமையை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

3 comments:

  1. வர வேற்கத்தக்க விடயம், இதே போன்று இங்கு கடமை புரியும் வைத்தியர்கள், தாதிமார்கள் உட்பட அனைத்து ஊழியர்களையும் நோயாளிகளிடம் சிறந்த முறையில் நடக்கக்கூடியவர்களாக மாற்றுவதற்கு வாரம் ஒரு முறை பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட வேண்டும், இந்த வேண்டு கோளின் நோக்கம் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள் என்ற நம்பிக்கையில் இதை கௌரவ பிரதி அமைச்சரிடம் கொண்டு சேர்க்கும் படி வேண்டிக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  2. I am agree with Mr. Abu Abdullah

    ReplyDelete
  3. விசேடமாக பிள்ளைபேறு பிரிவுக்கு கற்பிக்க வேண்டும் இதனால் தான் நான் இந்த வைத்தியசாலையினைத் தாண்டி வசதி குறைவாக இருந்தாலும் வடக்கு வைத்தியசாலையில் இரண்டு முறை எனது மனைவியை அனுமதித்து இருக்கிறேன்

    ReplyDelete

Powered by Blogger.