Header Ads



இஸ்ரேலுக்கு எதிராக பிரேரணை - இலங்கை தப்பியோட்டம், பாராளுமன்றத்தில் ஹக்கீம் கவலை

'இஸ்ரேலுக்கு எதிராக யுனேஸ்கோ அமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை கலந்து கொள்ளாமை சர்வதேச ரீதியாக தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டது' என்று நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றி இன்று (05) இடம்பெற்ற சபைஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாலஸ்தீனம் தொடர்பிலான எமது நிலைப்பாட்டினை நாம் அறிவிக்கவேண்டும். ஏனெனில், பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை வெளியிடும் வகையில், யுனேஸ்கோவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை கலந்து கொள்ளாது அதனை தவிர்த்தது. இதுதொடர்பில் நாம் கவலையடைகிறோம்.

“பாலஸ்தீனத்துக்கும் இலங்கைக்குமிடையில் நெருங்கியத் தொடர்பு காணப்படுகின்றது. இவ்விரு நாடுகளுக்குமிடையிலான நட்பு பலமாக இருக்கின்றது. அந்நாட்டு மக்களின் குறிக்கோள்கள் தொடர்பில் எமது வெளிநாட்டுக்கொள்கையிலும் பிரதானமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“இவ்வாறான நிலையில், மேற்படி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது இலங்கை அரசு புறக்கணித்தமையானது இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும்வகையில் இருக்கின்றது என்றும் பாலஸ்தீனம் இந்த விடயத்தில் தோற்கடிக்கப்பட்டு விட்டது என்றும் சிலர் இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தகவல்களை வெளியிட்டனர். இது சர்வதேச ரீதியாக பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.

“இஸ்ரேல் அரசு பாலஸ்தீனத்துக்கு எதிரான செயற்படும் செயற்பாடுகளுக்கு எதிராகத் தான் இந்த வாக்கெடுப்பே இடம்பெற்றது. எனவே, இதனை தவிர்க்கும் முன்னர் இதுவிடயம் குறித்து அரசு பரிசீலித்திருக்க வேண்டும் என்பது தான் எமது கருத்தாக இருக்கின்றது. எனவே, இதுதொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

5 comments:

  1. இது நடந்தது பல மாதங்கள் அதை பேச இப்போதுதான் இவருக்கு நேரம் கிடைத்து இருக்கிறது

    ReplyDelete
  2. Replies
    1. Not only ranil dear.entire eneimies playing double game in the world.

      Delete
  3. என்ன இது பிரச்சினைகள் பல நிகழ்ந்து கொண்டிருக்கிறது எப்பவோ நடந்தவற்றுக்கு இப்ப பேசுறான், ஈத்தம்பழம் வரி,மற்றும் முசலி பிரச்சினை இது போன்ற பல பிரச்சினைகள் எங்களை சுற்றி இருக்குது இவனுகள் எதற்கு பாராளமன்றம் போனானுகள் என்றே தெரியவில்லை

    ReplyDelete
  4. பகல் உணவு அருந்திவிட்டு தூக்கம் போடும் சிலர் மஹ்ரிப் வரை உறங்கிவிட்டு எழுந்து சுபஹ் தொழ அல்லது வேலைக்கு போக தயாராகவார்கள் இவ்வாற ஒரு தூக்கத்தில் இருப்பதுதான் நம் தலைமைகள்

    ReplyDelete

Powered by Blogger.