Header Ads



எமது நாடு, பிச்சை எடுக்கின்றதாக மாறியுள்ளது.


நாட்டை கடந்த காலங்களில் ஆண்ட ஆட்சியாளர்கள் பத்துமடங்கு செலவினை செய்துள்ளார்கள் என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. 

மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். 

அதனால் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இன்று அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானம் சிலவருடங்களில் அதற்கான வட்டியினை செலுத்துவதற்கு கூட போதியதாக இல்லை. 

அதற்கான எமது நாடு பிச்சை எடுக்கின்ற நாடாக மாறியுள்ளது.  அதற்காக பெருமை அடைகின்றோம். ஐனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் எல்லோரும் உலகத்தினை சுற்றப் போகின்றார்கள். 

எல்லோரும் கடன் கேட்கத்தான் போகின்றார்கள்.மீண்டும் ஒரு கடன் சுமையில் நாட்டை தூக்கி வைத்துள்ளனர்.  இன்னும் சில ஆட்சியாளர்கள் இந்த நாட்டில் பொருளாதாரத்தினை கட்டி எழுப்ப முடியாது திண்டாடுகின்றனர். 

குற்றங்கள் அதிகரித்துள்ளன. சட்டமும் ஒழுங்கும் இல்லாத நாடாக இலங்கை மாறிவிட்டது என அவர் குறிப்பிட்டது. 

No comments

Powered by Blogger.