Header Ads



இலங்கையிலிருந்து மியன்மார் முஸ்லிம்களை நாடுகடத்த திட்டம், கோஷமிட்டவர்களை காணவில்லை என கவலை


காங்கேசன்துறையில் மீட்கப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக  கவலை வழக்கு விசாரணைகளை ஒத்திவைத்துள்ளார்,

இதுகுறித்து மேலும் அறியவருவதாவது,

இன்று செவ்வாய்கிழமை 16.05.2017 அன்று மல்லாகம் நீதிமன்றத்தில் காங்கேசன்துறையில் மீட்டகப்பட்ட மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பான வழங்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குடிவரவு, குடியகல்வு சட்டத்தின்படி காங்கேசன்துறையில் மீட்கப்பட்ட முஸ்லிம்களை நாடுகடத்தும் நீதிமன்ற அதிகாரம் தமக்கிருப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பில் எந்தவொரு சர்வதேச அமைப்பும் நீதிமன்றத்தை அணுகவில்லை எனபதும் நீதிபதியின் வாதமாக இருந்துள்ளதுடன், பொலிஸாரின் வாதமும் அதே அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

இந்நிலையில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கு பஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட இளம் முஸ்லிம் சட்டத்தரணி ஒருவர், மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக மிகவும் உருக்கமான முறையில் வாதடியுள்துடன், அவர்களை திருப்பி அனுப்பினால், அவர்கள் படுகொலை செயய்ப்படலாமெனவும் நீதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் அதனை கவனத்திற்கொண்டுள்ள மல்லாகம் நீதிபதி, அடுத:துவரும் 14 நாட்களுக்குள் இதுதொடர்பிலான உரிய தரப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும், அவர்களை பராமரிக்கவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச சட்ட ஏற்பாடுகள் குறித்து எடுத்துக்கூற வேண்டுமென வலியுறுத்தி, வழக்கு விசாரணைகளை ஒத்திவைத்துள்ளார்,

இதகுறித்து கருத்துக்கூறிய மூத்த முஸ்லிம் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்,

மியன்மார் முஸ்லிம்கள் விடயத்தில் ஆரம்பத்தில் கோஷமிட்டவர்களை தற்போது காணவில்லை எனவும், இலங்கையில் உள்ள மியன்மார் முஸ்லிம்களை நாடுகடத்தும் நிலை தோன்றலாமெனவும் எச்சரிக்கை விடுத்ததுடன், இதுபற்றி உரிய தரப்பினர் கவனம் செலுத்த வேண்டுமெனவும் உருக்கமாக வேண்டிக்கொண்டார்.

1 comment:

  1. இண்று 16/05/2017 மியன்மார் மக்களின் வழக்கு நீதிமன்றம் வருவதாக எந்த தரப்பினராவது
    யாருக்காவது அறிவித்திர்களா?

    ReplyDelete

Powered by Blogger.