May 08, 2017

சியாரங்களை தகர்க்கும் முயற்சி, முஸ்லிம்களின் வரலாற்றை சிதைக்கும் சூழ்ச்சி...!!

-M.M.M. Noorul Haq-

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றுத் தட­யங்­களை அழிப்­பதில் திட்­ட­மிட்ட செயற்­பா­டுகள் நடந்­து­வ­ரு­வ­தென்­பது மறுக்க முடி­யாத ஒர் அம்­ச­மாகும். குறிப்­பாக இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்று பூர்­வீகத் தட­யத்தில் மிகுந்த தொன்­மைக்­கு­ரிய ஆதம் அலை­ஹிஸ்­ஸலாம் அவர்­களின் கால­டித்­தடம் பதிந்­தி­ருக்­கின்ற பாவா­த­மலை அடை­யா­ளத்தை அழிப்­ப­திலும் அது முஸ்­லிம்­க­ளுக்­கு­ரி­ய­தல்ல என்­பதை நிலை­நாட்­டு­வ­திலும் சிங்­கள – பௌத்த ஆதிக்க சக்­திகள் பல்­வேறு முனைப்­புக்­களில் திட்­ட­மிட்டு செய­லாற்றி, அது பௌத்­தர்­க­ளு­டைய அடை­யாளம் மாத்­திரம் என்ற பரப்­பு­ரை­யையும் செய்து வரு­கின்­றனர். 

இது­போன்ற இன்­னொரு இலங்கை முஸ்­லிம்­களின் பூர்­வீகத் தட­ய­ங்களான சியா­ரங்கள் அழிக்­கப்­பட்டு வரு­கின்ற ஒரு நிகழ்வும் நடந்­தே­றிக்­கொண்­டி­ருக்­கின்­றன. இதனோர் அம்­ச­மா­கவே  அண்­மையில் காலிக் கோட்டை இரா­ணுவ முகாம் பாது­காப்பு வல­யத்­தினுள் கடற்­க­ரையில் அமைந்­துள்ள ஷெய்க் சாலி வலி­யுல்லாஹ் சியா­ரத்தின் பாது­காப்பு மதில் இனந்­தெ­ரி­யாத நபர்­களால் சேத­மாக்­கப்­பட்ட சம்­பவம் நடந்­துள்­ளது.  சிங்­கள – பௌத்த ஆதிக்க மனோ­பா­வ­மு­டைய சிங்­கள காடை­யர்­களால் அல்­லது முஸ்­லிம்­களில் ஒரு பகு­தி­யி­னரால் இச்­செ­யற்­பாடு அரங்­கேற்­றப்­பட்­டி­ருக்­கக்­கூடும். இவர்­களின் எவர்­க­ளா­னாலும் இச்­செ­யற்­பாடு மிகுந்த கண்­டிப்­புக்­கு­ரிய ஒன்­றென்­பதில் மாற்­றுக்­க­ருத்து இருக்க முடி­யாது. 

இவ்­வா­றான ஈனச் செயல்­கள் முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளினால் மேற்­கொ­ள்­ளப்­ப­டு­கின்­ற­தென்றால், அது நமது வர­லாற்றுத் தட­யத்தை இல்­லா­தொ­ழிப்­பதன் ஓர் இயங்­கி­யலை நோக்­கிய நகர்­வாக அமை­கின்­றது. சியா­ரங்­களில் இருக்­கக்­கூ­டிய உண்­டி­யலை உடைத்து அதற்குள் இருக்­கின்ற பணங்­களைக் கொள்­ளை­யிட்டுச் செல்­வ­தென்­பது வேறொரு தீய நோக்­கி­லான செயற்­பா­டாகப் பார்க்க முடியும்.  அவ்­வா­றின்றி சியா­ரங்­களின் தொன்­மையை பறை­சாற்­றக்­கூ­டிய சுற்று மதில்­க­ளையோ அல்­லது சியா­ரத்தின் மேற்­ப­ரப்பில் கட்­டப்­பட்­டி­ருக்­கின்ற கட்­ட­டங்­க­ளையோ சேதப்­ப­டுத்­துதல் என்­பது வர­லாற்றுத் தொன்­மையை அழித்துவிடும் திட்­ட­மிட்ட ஒரு செயற்­பாட்­டோடு தொடர்­பு­பட்­ட­தாகும். 

முஸ்­லிம்­க­ளினால் சியா­ரங்கள் தகர்க்­கப்­ப­டு­கின்ற சம்­ப­வங்கள் நடை­பெற்ற வர­லாற்­றையும் நாம் அவ­தா­னிக்­கலாம். இங்கு அவர்கள் உடைப்­ப­தற்கு சொல்­லப்­ப­டு­கின்ற காரணம் சியாரம் என்­பது இஸ்­லாத்தில் இல்­லாத ஒன்­றென்றும் அங்கு அந்­நிய மத வழி­பாட்டுச் செயற்­பாட்­டுக்குச் சம­னான கிரி­யைகள் நடை­பெ­று­வது கூடா­தென்ற அடிப்­ப­டை­யி­லாகும். 

சியார முறைமை என்­பது முஸ்­லிம்­க­ளி­டையே ஆகு­மென்றும், ஆகா­தென்றும் இரண்டு வித­மான கருத்­தாடல்கள் இருந்த போதிலும் அதற்­கப்பால் சியாரம் என்­கின்ற அம்சம் முஸ்­லிம்­களின் வர­லாற்றுத் தட­யத்தை மற்றும் தொன்­மையை பறை­சாற்­று­வ­தற்கு வலு­வா­ன­தொரு ஆதா­ர­மாக இருப்­பதை யாரும் மறுப்­ப­தற்­கில்லை. ஏனென்றால் சியா­ரத்தின் நீளம், அங்கு கட்­டப்­பட்­டி­ருக்­கின்ற கட்­ட­டத்­தொன்மை என்­ப­ன­வெல்லாம் நமது வாழ்­கா­லத்தை பறை­சாற்­றவும் உறு­திப்­ப­டுத்­தவும் இன்­றி­ய­மை­யாத அம்­சங்­க­ளாக இருக்­கின்­றன.  அந்த வகையில் முஸ்­லிம்­களின் வர­லாற்றை எழு­து­வ­தற்கும் பேசு­வ­தற்கும் மூல­கங்­க­ளாகக் கூட அவை அமை­கின்றன. 

 உதா­ர­ண­மாக அண்­மையில் உடைக்­கப்­பட்ட காலிக் கோட்டை சியாரம் என்­பது ஒல்­லாந்­தர்கள் காலியில் கோட்­டையை நிர்­மா­ணிப்­ப­தற்கு முன்­பி­ருந்தே இந்த இடத்தில் சியா­ரமும் அதனை அண்­மித்த பகு­தியில் சுத்­த­மான குடிநீர்க் கிணறும் காணப்­ப­டு­கின்­றன. ஆக இந்த சியா­ரத்தை தகர்ப்­ப­தென்­பது அல்­லது அத­னோடு அண்­டிய கட்­ட­டங்­களை சிதைப்­ப­தென்­பது குறைந்­த­பட்சம் சுமார்  800 வரு­ட­கால தொன்­மையை  நாம் இழப்­ப­தற்கு வழி­வ­குக்­கின்­றன. 

இந்த அடிப்­ப­டையில் சியா­ரத்தின் சுற்­று­மதில் நாசப்­ப­டுத்­தப்­பட்­டமை முஸ்­லிம்­களின் சில­ரினால் மேற்­கொள்­ளப்­பட்­டாலும் சரி அல்­லது சிங்­கள – பௌத்த ஆதிக்க சக்­தி­க­ளா­னாலும் சரி நமது தொன்­மையைத் தொலைப்­ப­தற்கு திட்­ட­மிட்டுச் செய்­கின்ற ஒரு அநீ­தி­யா­கவே இதனை நோக்க வேண்­டி­யு­முள்­ளது.  எனவே இலங்­கையில் காணப்­ப­டு­கின்ற பாவா­த­ம­லையில் உள்ள ஆதம்(அலை) அவர்­களின் பாதச்­சு­வடு, நாற்­பது முழம் அதா­வது அறு­பது அடி நீள­மு­டைய சியா­ரங்கள் மற்றும் சாதா­ரண நீள­மு­டைய சியா­ரங்கள், தொன்­மை­யான பள்­ளி­வாசல்கள் போன்­ற­வை­களின் தட­யங்கள் இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றை இரண்­டா­யி­ரத்து ஐநூறு ஆண்­டு­க­ளுக்கு மேற்­பட்­டது என்­பதை நிறு­வு­வதில் பாரிய பங்­க­ளிப்பை நல்­கக்­கூ­டி­ய­வை­க­ளாக இருந்து வரு­வதை நாம் சிந்­திக்­க­வேண்டும்.

 வர­லாறு இல்­லாத ஒரு சமூகம் விரை­வாக தங்­க­ளது தொன்­மை­களை இழந்து நாடோ­டி­க­ளாக அல்­லது பர­தே­சி­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தி­லி­ருந்து விடு­பட முடி­யாத இக்­கட்டைச் சந்­திக்க நேரிடும். அந்த வகையில் இலங்கை முஸ்­லிம்­களும் ஆகி­விடக் கூடா­தென்­கின்ற கவனம் நமக்கு இன்று முக்­கி­யப்­ப­டு­கின்­றது.  இங்கு வாழு­கின்ற முஸ்­லிம்கள் வெறு­மனே வந்­தேறு குடி­க­ளா­கவும் இந்­நாட்­டுக்கு அந்­நி­ய­வர்­க­ளா­கவும் சித்­த­ிரிக்­கப்­பட்டு நம்மை குடி­பெ­யர்ந்து செல்ல வேண்­டு­மென்று சிங்­கள பேரி­ன­வா­திகள் அச்­சு­றுத்­து­கின்ற கால­கட்­டத்தில் நமது வர­லாற்றை புடம்­போட்டு வைக்­கக்­கூ­டிய ஆதா­ரச்­சான்­று­களை மாற்று மதத்­தி­னர்­கள்தான் அழிப்­ப­தற்கு கங்­கனம் கட்­டு­கின்­றனர். நம்­ம­வர்­களில் ஒரு பகு­தி­யி­னரின் செயற்­பாடு இதற்கு இசைந்து செல்­வ­தென்­பது ஒரு விவேகத்தின் வழிமுறை அல்ல.

பேரினவாத ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மையை இல்லாமல் செய்வதற்கு எடுத்துவருகின்ற எத்தனிப்புக்கள் முஸ்லிம்களை இந்த நாட்டில் பூர்வீக வரலாற்றைக் கொண்டிராதவர்கள் என்று காட்ட எடுக்கும் முயற்சியின் வெளிப்பாடாகும்.  இதற்கு ஒத்ததாக நம்மவர்களில் ஒரு பகுதியினர்களும் சியாரங்களைத் தகர்க்க கிளம்பியிருப்பதும், அதற்காக பிரசாரம் செய்வதும் நம்முடைய வரலாற்றை சிதைத்து குறைத்து மதிப்பிடுவதற்கு ஆதிக்க சக்திகளுக்கு வலுச்சேர்ப்பதாகவே அமையும். இதிலிருந்து முற்றாக நம்மவர்கள் தவிர்ந்து நடப்பதே நமது பூர்விவீக வரலாற்றுக்கு செய்யும் உபகாரமாகும்.

3 கருத்துரைகள்:

இது எல்லாம் ஒரு அடையாலமா.... 1000 வந்தாலும் உங்கள திருத்த முடியாது..

உங்களைப் போன்றவர்களெல்லாம் இந்த நாட்டில் வாழ்ந்தார்கள் என்று 1000 வருடங்களுக்குப் பின்னால் வரும் முஸ்லிம்கள் தெரிந்து கொள்ள இம்முறையினால் முடியாதுதானே! அதுதான் "இது எல்லாம் ஒரு அடையாலமா" என்று கேட்கிறீர்களாக்கும்.

Post a Comment