May 19, 2017

ஞான‌சாராவை மஹிந்த இய‌க்குகிறார் என்பது, வ‌டிக‌ட்டிய‌ முட்டாள்த‌ன‌ம்

ஞான‌சார‌வை உருவாக்கிய‌வ‌ர் ம‌ஹிந்த‌ என்ப‌து க‌ற்ப‌னை. ஞான‌சார‌ர் என்ப‌வ‌ர் புலிக‌ளுக்கெதிராக‌ ஒரு கால‌த்தில் இருந்தார். அவ‌ரும் நானும் சேர்ந்து புலிகளுக்கெதிராக‌ கொழும்பில் மிக‌ப்பெரிய‌ ஆர்ப்பாட்ட‌ம் ஒன்றை செய்தோம். இதுதான் புலிக‌ளுக்கெதிராக‌ ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ க‌டைசி ஆர்ப்பாட்ட‌ம். அத‌ன் பின் அவ‌ரை நான் நேர‌டியாக‌ இன்றுவ‌ரை ச‌ந்திக்க‌வில்லை.

அத‌ன் பின் ஞான‌சார‌ ஹெல‌ உறும‌ய‌ க‌ட்சியில் இணைந்து தேர்த‌லில் போட்டியிட்டு தோற்றார். 2012 அள‌வில் பொதுப‌ல‌ சேனாவை உருவாக்கினார்.

சும்மா இருந்த‌ ம‌னித‌ரிட‌ம் ந‌ம‌து முஸ்லிம்க‌ளில் சில‌ர் அவ‌ரிட‌ம் சென்று முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் வ‌ஹ்ஹாபிச‌ம் இருக்கிற‌து, உல‌மா ச‌பை ஹ‌லால் மூல‌ம் ச‌ம்பாதிக்கிற‌து என‌ கோள் மூட்டினார்க‌ள். அந்த‌ ம‌னுச‌னுக்கு வ‌ஹ்ஹாபி, த‌வ்ஹீத் என்ப‌தெல்லாம் தெரியுமா?  எல்லா முஸ்லிம்க‌ளையும் இழுத்துப்போட்டு தாக்கினார்.

உட‌னே அவ‌ரிட‌ம் ஓடிச்சென்ற‌ குராஃபி முஸ்லிம்க‌ள் என்ன‌ப்பா எங்க‌ளையும் சேர்த்து உதைக்கிறாய் என்று முறையிட்ட‌ன‌ர். உட‌னே ஞான‌சார் தான் ச‌ம்பிர‌தாய‌பூர்வ‌மான‌ முஸ்லிம்க‌ளுக்கு எதிர் அல்ல‌ என்றார்.

ஹ‌லால் பிர‌ச்சினையில் அவ‌ர் பெய‌ர் பிர‌ப‌ல்ய‌ம் பெற்ற‌தால் ஜ‌மிய்ய‌த்துல் உல‌மாவுக்கு ஹ‌லாலுக்காக‌ ல‌ட்ச‌க்க‌ண‌க்கில் ப‌ண‌ம் செலுத்திய‌ க‌ம்ப‌ணிக‌ள் ஞான‌ சார‌வை ப‌ய‌ன்ப‌டுத்தி ஹ‌லாலுக்கெதிரான‌ பிர‌ச்சார‌த்தை முன்னெடுக்க‌ உத‌வி செய்த‌ன‌ர். இத‌ற்கு ர‌ணிலின் ச‌கோத‌ர‌ரின் ரி என் எல் தொலைக்காட்சி அனுச‌ர‌ணை வ‌ழ‌ங்கிய‌து.

இந்த‌ இட‌த்தில் சிந்திக்க‌ வேண்டிய‌ ஒன்று என்ன‌வென்றால் ம‌ஹிந்த‌ ஞான‌சார‌வுக்கு பின்புல‌மாக‌ இருந்திருந்தால் அர‌ச‌ தொலைக்காட்சியில் அவ‌ருக்கு வாய்ப்பை கொடுத்திருப்பார். ஆனால் ம‌ஹிந்த‌ அவ‌ருக்கு ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌மும் கொடுக்க‌வில்லை.

ஞான‌சார‌வின் பெய‌ர் பிர‌ப‌ல்ய‌மாகியதால் அவ‌ருக்கு சிங்க‌ள‌ உய‌ர் ம‌ட்ட‌த்தில் ம‌திப்பு கூடிய‌து. கோட்டாப‌ய‌ அவ‌ரை பெரிய‌ ஹாம‌துரு என‌  ம‌தித்தார். 

ஞான‌சார‌ முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌ துவேச‌த்தை க‌க்கிய‌ போது அவ‌ருக்கு பின்புல‌மாக‌ அமைச்ச‌ர் ச‌ம்பிக்க‌ இருந்தார். அதே போல் ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌வே பொது ப‌ல‌ சேனாவை இய‌க்குவ‌தாக‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ஹ‌ரீஸ் ப‌கிர‌ங்கமாக‌ கூறினார்.

ஞான்சார‌வுக்கு எதிராக‌ ம‌ஹிந்த‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ முற்ப‌ட்ட‌ போது, ச‌ம்பிக்க‌ அத‌னை த‌டுத்தார். இருந்தும் ம‌ஹிந்த‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்காம‌ல் விட்ட‌து பெரும் பிழை. இத‌ன் கார‌ண‌மாக‌ அவ‌ர் தோற்க‌ வேண்டி வ‌ந்த‌து.

த‌ற்போது ம‌ஹிந்த‌ த‌ன்னையும் த‌ன் ம‌க‌ன்க‌ளையும் காப்பாற்ற‌ முடியாம‌ல் இருக்கும் போது ஞான‌டார‌வுக்கு அத்த‌னை பாதுகாப்பையும் கொடுத்து அவ‌ரே இய‌க்குகிறார் என‌ சில‌ர் நினைப்ப‌து வ‌டி க‌ட்டிய‌ முட்டாள்த‌ன‌மாகும். நான் த‌ற்போது ம‌ஹிந்த‌ அணியிலிருந்து வில‌கி மைத்ரியுட‌ன் இணைந்து கொண்ட‌த‌‌ற்காக‌ ம‌ஹிந்த‌ மீது பொய் சொல்ல‌ முடியாது. எந்த‌ நிலையிலும் உண்மை சொல்ப‌வ‌ன் நான். இப்போதைய‌ ஞான‌சார‌வின் அத்து மீற‌ல்க‌ளுக்கு பிர‌த‌ம‌ர் ர‌ணில் த‌லைமையிலான‌ அர‌சாங்க‌மே பொறுப்பு கூற‌ வேண்டும்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி
த‌லைவ‌ர், முஸ்லிம் உல‌மா க‌ட்சி

3 கருத்துரைகள்:

அப்போ யார்தான் இயக்குகின்றார் என்று உங்களின் நுண்ணறிவு புத்திசாதுயரியத்தால் மக்களுக்கு வெளிப்படுத்துங்களேன் ஏன் ஞானசார்ரை மஹிந்தவால் மீண்டும் இயக்கமுடியாது?

ஐயா/... ஞானசார தேரர் தான்,தேர்தல் காலத்தில் மகிந்த மீண்டும் ஆட்சியில் அமர்த்துங்கள் அவரே மீசை வைத்த ஆண் என்றார்.அத்துடன் ரனிலை பொதுப் பால் வ‍ர்கத்தைச் சேர்தவர் என்றார்.அத்தோடு அவர்களுக்கு ஒரு தலைவரை உருவாக்கி விட்டதாக கோட்டாவை சொல்லம சொன்னார்.
இப்படி இருக்க ரனிலை எப்படி கூறுவீர்??...T N L ரனிலின் சொந்தகாரன் கொடுத்த அதே நேரத்தில் மகிந்த ஆட்சியில் சம்பிகவை இயங்க விட்ட தேன்?சகல அதிகார ஜனதிபதி எப்படி சம்பிக அடக்க முடிய வில்லை என்று சும்ம இருக்க முடியும்?இனியும் சம்பிக மாதிரி எதிர் காலத்து மகிந்த அரசில் உருவெடுத்தால் மகிந்தவை எப்படி நம்புவது?
அறிக்கை சமர்பிக்கும் போது இவற்றையும் கணக்கில் கொண்டு சமர்பிக்குமாறு வேண்டுகிறேன்.இல்லாத விடத்து
உங்களுக்குஅரசியலிளும் ஈடேற்றம் இல்லை.மறுமையிலும் ஈடேற்றம் இல்லை எனபதை வருத்தத்துடன் அறிவிக்குறோம்.

You only told about everything about islam to sara since you were paid by gota ,,, u are a culprit munafiq... where did u get moulavi title, ,,,

Post a Comment