Header Ads



எழுத்துப் பரீட்சையில் மணமகன் பூஜ்ஜியம், திருமணத்தை நிறுத்திய மணமகள்

எழுத்து பரீட்சையில் மணமகன் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றதால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

மண­ம­க­னுக்கு வைக்­கப்­பட்ட எழுத்து பரீட்­சையில் பூஜ்­ஜியம் மதிப்பெண் பெற்­றதால் மண­மகள் கல்­யா­ணத்தை நிறுத்­தி­யுள்ள சம்­பவம் ஒன்று இந்­தி­யாவின் உத்­தர பிர­தேச மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­திய உத்­தர பிர­தேச மாநிலம் மணிப்­பூரி கிரா­மத்தில் பெற்­றோர்கள் நிச்­ச­யித்த திரு­ம­ணத்தில் மாப்­பிள்ளை 10ஆம் வகுப்பு வரையில் படித்­தவர். ஆனால், கல்­யாணப் பொண்ணு வெறும் ஐந்தாம் வகுப்பு வரை மட்­டுமே படித்­தவர் என்­பதால் மாப்­பிள்ளை வீட்டு அதி­காரம் கொஞ்சம் தூக்­க­லா­கவே இருந்­துள்­ளது.

அதே அதி­கா­ரத்­துடன் மண­ம­க­ளுக்கு எழுத படிக்க வருமா என மண­மகன் ஒரு சின்ன ஹிந்தி பரீட்­சை­யொன்றை நடத்­தி­யுள்ளார். இதில், நூற்­றுக்கு நூறு பெற்று மண­மகள் சித்­தி­ய­டைந்­துள்ளார். இத­னை­ய­டுத்து   மண­மகன் திரு­ம­ணத்­துக்கு சம்­ம­தித்­துள்ளார். 

அடுத்து இதே பரீட்­சையை மண­ம­க­னுக்கும் நடத்த வேண்­டு­மென மணப்பெண் கூறி­யுள்ளார். இதற்கு மண­மகன் சம்­மதம் தெரி­வித்­துள்ளார். 

ஹிந்­தியில் ஐந்தே ஐந்து வார்த்­தை­க­ளுக்கு எழுத்து பரீட்சை வைத்­துள்ளார் மண­மகள். அதில் சித்­தி­பெற்று கூடிய மதிப்­பெண்ணை பெற்று விடுவார் என சுற்­றமும் நட்பும் காத்­தி­ருந்­தனர்.

ஆனால், திரு­மண வீட்டார் சற்றும் எதிர்­பார்க்­கா­த­வாறு மாப்­பிள்ளை எடுத்த மதிப்பெண் என்ன ‘பூஜ்­ஜியம்’. இத­னை­ய­டுத்து, உடனே கல்­யா­ணத்தை நிறுத்­து­மாறு மண­மகள் தெரி­வித்­துள்ளார். இரு வீட்­டாரும் எவ்­வ­ளவோ சமாதானங்கள் கூறினாலும், குறித்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை எனத் தெரிவித்து மணமகள் வெளியேறியுள்ளார்.

2 comments:

  1. இந்தியாவில் நடந்துள்ளது பிரச்சினை இல்லை,யாரும் பெரிது படுத்தமாட்டார்கள்,மனித நேயம் இல்லாத காட்டுமிராண்டி நாடு இந்தியா என்பது உலகறிந்த உண்மை,

    ReplyDelete

Powered by Blogger.