Header Ads



இலங்கை முஸ்லிம்களின் நிலைமை ''கவலைக்கிடமானது''

-முஹம்மத் பாயிஸ்- 

இலங்கையில் சிறுபான்மை மக்களை குறிப்பாக முஸ்லிம்களை இலக்குவைத்து இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும்  வன்முறை கலந்த  தீவிரவாதம்  நாட்டை மீண்டும்  அழிவைநோக்கி நகர்த்துவதற்கான ஆரம்பமா!

மிக மோசமான வரலாற்று பக்கங்களைக் கொண்ட பெளத்த தீவிர வாதத்தின்  எழுச்சி மிக அண்மைக் காலமாக மீண்டும் இலங்கை மக்களின் பேசு பொருளாக மாறி உள்ளது .

ஒரு தேசிய இனத்தின் அழிவை இலக்காகக் கொண்டு  முன்னெடுக்கப் பட்டுவரும் பெளத்த தீவிர வாதம் பயங்கரவாத செயற்பாடுகளை நோக்கி நகர்ந்து செல்ல ஆரம்பித்துள்ளது .

இன்றைய நாளின் விடியலில் மாத்திரம் மூன்று  முஸ்லிம்களின்  வணக்கஸ்தலங்கள் இலக்கு வைக்கப் பட்டு  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

ஆனால் அரச இயந்திரமோ மிக அமைதியோடு ஒரு சிறு சம்பவமாக பதிவு செய்து காலத்தை கடத்த நினைப்பதுபோல்  தோன்றுகிறது. 

உண்மையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைமையானது  பயங்கரமான சூழல் ஒன்றினை உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்கப்   போவதில்லை  இதனை அரசும்  விளங்காமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை  என்றாலும்  மகிந்த ராஜ பக்ஸ ஆட்சியில் நாட்டப் பட்ட  இந்த நஞ்சி  மரத்தினை தண்ணீர் ஊற்றி வளர்த்த பெருமை நல்லட்சியையே சாரும்  

இப்போது நிலைமை  கட்டுக்கு அடங்கமுடியாத அளவு பெருக்கெடுத்து  வருகிறது வடகிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில்  வாழும் முஸ்லிம்களின் நிலைமை கவலைக்கிடமானதே 
முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற அரசியல் வாதிகளோ இதனைப் பயன்படுத்தி இந்தச் சூழலில் எப்படி அமைச்சுப் பதவிகளை பெற்றுக்  கொள்ள   முடியும் என திட்டமிட்டு வருகின்றனர் போல்  தோன்றுகிறது.

எல்லாவற்றுக்கும் பிரதான காரணமாக அமைந்த கடந்த  தொழிலாளர் தின கூட்டமே  ஆகும்  காலிமுகத் திடலில் மகிந்த ராஜ பக்ஷ தலைமையிலான  கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்  இதனை வைத்து இலக்குகள் வரையப் பட்டு ஆட்சியை கைபற்றும் நோக்கில் முஸ்லிம்களை மீண்டும் திரும்புச் சீட்டாக  பயன் படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றினை முன் எடுத்துவருவதாக தோன்றுகிறது.

இதுவே மதிலில் படுக்கும்  பூனையின் கதையாக நல்லாட்சியின் அதிகாரப் பலம் மாறி உள்ளது .

காலிமுகத்திடலில் சேர்ந்த சிங்கள மக்களின் செய்தி என்ன என்பது குறித்த யூகித்துக் கொள்ள முடியாமையும் ஒரு காரணமாக இருக்கலாம் 

இதனை சாதகமாகிக் கொண்ட மகிந்த கூட்டணி சிங்கள மக்களின் தனித்த வாக்குகள் மூலம் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற கனவுடன்  மறைமுகமாக முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை  தீவிரப் படுத்தியுள்ளதோடு சிங்கள மக்களை வெறுப் பேற்றி  ஆட்சியை கைப்பற்ற முனைகிறது என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.

சிங்கள தீவிரவாதம் வளர்ந்துள்ளதாக பிரச்சாரங்களை முன் எடுத்துவரும் ஊடகங்களின் ஊளைகளுக்கு பயந்துள்ள அரச இயந்திரமானது இனவாதத்திற்கு எதிரான பிடியை   இறுக்குவதில் இருந்து தளர்ந்து உள்ளது என்பதும்  தெளிவாகிறது

இதனை சாதகமாக பயன்படுத்திக்  கொள்ள திட்டமிட்டுள்ள தீவிர வாத பெளத்த குழுக்கள் மேற்கு தெற்கு பகுதிகளில் கலவரம் ஒன்றினை ஏற்படுத்த முனைப்புடன் செயலாற்றத் துவங்கி உள்ளது . 

நல்லாட்சி அரசாங்கத்தின் பெளத்த தீவிர வாதத்தை அடக்குவதற்கான இரகசிய திட்டம் தோல்வியில் முடிந்திருகிறது .இனவாதக் குழுக்களின் தலைவர்களுக்கு பதவிகளை வழங்குவதன் மூலம் இனவாதத்தை கட்டுப் படுத்தும் செயற்பாடு கட்டுக்கடங்காமல் போய் உள்ளது  பொலநறுவையில் இடம்பெற்ற சம்பவம் எடுத்துக் காட்டுகிறது .

முஸ்லிம்களைச் சுற்றி வைக்கப் பட்டுள்ள பொறிகளில் இருந்து முஸ்லிம்களை மீட்டெடுப்பது யாருடைய கடமை  பாதுகாப்பை யார் உறுதிப் படுத்துவது ?

இனவாதிகளுக்கு துணை போகும் பொலிசாரும் இராணுவத்தினர் மீதும் முஸ்லீம்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் கலவரம் ஒன்று ஏற்படுமானால் அழிவு பாரியதாகவே இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம் 

இப்படியான சூழலில் பிரார்த்தனை மட்டும் போதுமானதா ?

நாம் என்றுமே நம்பிக்கை கொள்ளாத எமது அரசியல் வியாபாரிகள் மகிந்த ஆட்சியை கைப் பற்றினாலும்  பற்றக் கூடும் என்ற அச்சத்தில் திரை மறைவில் பேரங்களுக்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது .இந்தச் சூழலில்தான் தமிழ் மக்களுடனான உறவை பலப் படுத்த வேண்டிய தேவைப் பாடு எமக்கு அதிகம் அதிகம்  இருக்கிறது . 

சிவில் சமூக அமைப்புக்கள் , உலமாக்கள்பு த்திஜீவிகள் ,முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்த கலவரம் ஒன்று  உருவாகும் சூழலில் அதனை கட்டுபடுத்தி மக்களைக் காப்பாற்றுவதற்கான திட்டம் ஒன்றினை வரைதல் அவசரத் தேவையாகும் முஸ்லிம் சமூகம் கைவிடப் பட்டுள்ள இச் சூழலில்  அரசியல் காய் நகர்த்தளுக்கேற்ப முஸ்லிம் சமூகத்தின் சாத்வீக போராட்டங்களைத் திட்டமிடுவது அவசியமாகிறது .

No comments

Powered by Blogger.