Header Ads



அழகிய முஸ்லிம் பெயர்களை வைத்துக்கொண்டு, சாபத்திற்குரியவர்களாக இருக்காதீர்கள்

-Inamullah Masihudeen-

முகநூலில், சமூக ஊடகங்களில் எமது நடத்தைகள் நிச்சயமாக நன்மைகளாகவும் தீமைகளாகவும் பதியப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அழகிய முஸ்லிம் பெயர்களை வைத்துக் கொண்டு சிலவேளை போலிக் கணக்குகளில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களிற்கும் அவப் பெயரை தேடித் தரும் அல்லது இஸ்லாமிய போதனைகளை கேலி செய்யும், புறக்கணிக்கும் விதத்தில் பதிவுகளை, பகிர்வுகளை செய்வதும் ஹராமான பாவமாகும்.

பாத்திமா, ஸைனப் அல்லது வேறேதும் அழகிய இஸ்லாமிய பெயர்களுடன் அரைகுறை ஆடையோடு கவர்ச்சி நடிகைகளின் அல்லது தங்கள் கவர்ச்சி படங்களை போடும் அறிவு கெட்ட ஜீவன்கள், முகமூடிகள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும், திருந்த வேண்டும் இல்லாவிட்டால் சாபக் கேடுதான்.

சிலர் சினிமாவிற்கான இலவச விளம்பரங்களை விமர்சனங்களை செய்து கொண்டிருக்கின்றனர், சிலர் தமது படங்களுக்கு பதிலாக நடிகர் நடிகைகள் படங்களை போட்டுக் கொள்கிறார்கள்.

மொழி, கலை என்பவை எமது சமூக கலாசார விழுமியங்களை கட்டுக் கோப்புக்களை தர்த்தெறியும் ஊடகங்களாக மாறுவது அவற்றிற்கு துணை போவது தனிநபருடன் மட்டுப் படும் பாவம் அல்ல, அது எமது உயிரிலும் மேலான மார்க்கத்திற்கும் உம்மத்திற்கும் எதிராக நாம் அறிந்தோ அறியாமலோ செய்யும் கேடுகளாகும்.

முகநூலில் நல்லவற்றை பதிவது பகிர்வது விரும்புவது சிரமமாக இருந்தால் பரவாயில்லை, தயவு செய்து தீமைகளுக்கான விளம்பர முகவர்களாக சாபத்திற்குரியவர்களாக இருந்து விடாதீர்கள்.

தகவல் தொழில் நுட்பம், மொழி கலை கலாசாரம் பண்பாடு என்வவற்றில் நல்லவற்றை பகிர்ந்து கொள்வதற்கு உள்ள பரப்பினை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் இஸ்லாமிய வரையறைகளை கட்டுக் கோப்புக்களை கேள்விக்கு உற்படுத்தி விடாதீர்கள்.

எங்களிடம் இருந்து இரகசியமாகவோ பகிரங்கமாகவோ புறப்படும் சொற்களும் நடத்தைகளும் நிச்சயமாக நல்ல மற்றும் தீய விளைவுகளுடன் இன்மையிலும் மறுமையிலும் எங்களிடமே மீளுக்கின்றன.

1 comment:

  1. Piety is of paramount necessary. The people who devote themselves for the sake of Allah can only be the winner in the day of judgement.
    People who must think twice that will their comments or status bring the satisfaction of Allah? before publish something.

    ReplyDelete

Powered by Blogger.