May 31, 2017

மயில் கர்ப்பமாகிறதை கண்டுபிடித்த நீதிபதி, பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை வழங்க வலியுறுத்து


-BBC-

''பசுமாடு தொடர்பாக இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் விவாதம் அரசியல் ரீதியானது, ஆனால், எனது உத்தரவு நீதித்துறை தொடர்புடையது. எனது ஆன்மாவின்படியும், நாட்டில் உள்ள இந்து சமூகத்தினரின் மன உணர்வுனையும் மதித்து வழங்கியது நான் வழங்கிய தீர்ப்பு'' என்று நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேசிய விலங்கினமாக, புலிக்கு பதிலாக பசுமாட்டை அறிவிக்கக் கோரி மத்திய அரசுக்கு இன்று (புதன்கிழமை) தான் பரிந்துரைத்த உத்தரவு குறித்து விளக்கமளித்த ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது உத்தரவு குறித்து நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா பிபிசியிடம் பேசுகையில், ''இந்து சமூகத்தினரின் தாய் பசு மாடு. கிருஷ்ண பகவான் பசு மாட்டுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்துள்ளார்'' என்று தெரிவித்தார்.

''கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு "உயிருள்ள மனிதர்கள்" என்ற அந்தஸ்தை உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் போது, நான் ஏன் பசுமாட்டை தேசிய விலங்காக அறிவிக்க பரிந்துரை செய்யக்கூடாது'' என்று நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா வினா எழுப்பினார்.

மயில் எப்படி கர்ப்பமாகிறது?

மேலும், நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா இந்திய செய்தி தொலைக்காட்சியான நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியும் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

'மயில் எப்படி கர்ப்பமாகிறது?' ராஜஸ்தான் நீதிபதி புது விளக்கம்

அந்த பேட்டியில், ''வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருப்பதால்தான் மயில் இந்தியாவின் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுளள்து'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆண் மயிலின் கண்ணீர்த் துளிகளால்தான் பெண் மயில் கர்ப்பமாகும். மயில்கள் எப்போதும் உடலுறவு கொள்வதில்லை. இதனால்தான் கிருஷ்ண பகவானும், துறவிகள் பலரும் மயில்தோகைகளை பயன்படுத்துகின்றனர் என்று நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க நீதிபதி பரிந்துரை

முன்னதாக, நாட்டின் தேசிய விலங்கினமாக வங்காள புலிக்கு பதிலாக பசு மாட்டை அறிவிக்கக்கோரி மத்திய அரசை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா வலியுறுத்தியுள்ளார்.

பசு மாட்டைக் கொலை செய்தவர்கள் என அடையாளம் காணப்படும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் சிறைத் தண்டனை மூன்றாண்டுகளிலிருந்து ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டும் என்று அந்நீதிபதி கூறியுள்ளார்.

இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் பசுமாட்டின் நிலை குறித்த ஓர் தேசிய அளவிலான விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இக்கோரிக்கைகள் வெளிவந்துள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, இறைச்சிக்காக பசுமாடுகள் சந்தையில் விற்கப்படுவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த சர்ச்சைக்குரிய தடை உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒருமாதம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

7 கருத்துரைகள்:

very idiotic & funny argument....what a funny.. he is a justice??? hahah...

என்னது மயில் கண்ணீர்துளிகலால் தான் கர்பபமாகின்றதாமா?
இவரெல்லாம் உயர் நீதிமன்ற நீதிபதியா?

இவனுக்கு விலங்கினங்களின் தொழில் பாடுகள் நன்றாகவே தரியாது இவன் எல்லாம் ஒரு நீதிபதி.நீதி இல்லாத ஊரில் கூ... இல்லாதவள் பிள்ளை பெற்றாளாம்

LET them have a state of Killing Human to Protect Cows. NOW it is high time to work for Separate Muslim States within current INDIA, so that do each one can follow their religious beliefs 100% without interference.

HOPE Modi and his groups are forcing Indian Muslims to think for Separation of Current India.. for the sake of living with peace.

அட முட்டாள் மதவெறியனே மாட்டு மூத்திரத்தை குடித்து குடித்து உங்கள் மூலைகளெல்லாம் மங்கிவிட்டது

I agree with you brother outright. Indian notorious troops killing innocent Muslims in Kashmir and it's becoming increasingly difficult for the rights of Muslims. The chief prosecutor of International Criminal Court (ICC) must take tangible action to arrest the Indian leaders.

https://www.youtube.com/watch?v=erL7JHnzqww

அந்த நீதிபதிக்கு இந்த இங்கினை அனுப்பி வையுங்கள்

Post a Comment