May 15, 2017

ஞானசாரவை அடக்க முடியாத, முஸ்லிம்கள் கோழைகைளா..?

பல வருடங்களாக ஞானசாரவை அடக்க முடியாத ஒரு சமூகமாக இலங்கையின் முஸ்லிம் இருந்து வருவது ஒரு கோழைத்தனமான வெட்கக்கேடான விடயமாகும். 

இந்த விடயத்தில் நாம் ஒருவரையொருவர் விமர்சித்துக்கொண.டிருப்பதை தவிர்த்து இதற்கான நேரடி நகர்த்தல்களை நாம் மேற்கொள்ளா விட்டால் நாம் ஒரு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.அன்று ஹலால் என்ற ஒரு மமதையை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி விட்டு திட்டமிட்டு அலுத்கமையை அன்று எரித்தாலும் அந்தப் பிரச்சனை நாடு பூராவும் பரவாமல் அல்லாஹ் அன்று பாதுகாத்தான். 

ஆனால் இன்றிருக்கும் நிலை இப்படியே தொடருமானால் மியன்மார் முஸ்லிம்களை விடவும் அன்று 83 ஜூலை கலவரத்தின் போது எங்கள் கண் முன்னாள் எரிக்கப்பட்ட இலங்கையின் தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட ஒரு நிலையை நாம் முன் நோக்கியவர்களாக ஒரு அபாயகரத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலையில் தேர்தல் காலங்களில் இலங்கையின் முஸ்லிம் தலைகளுக்கு பேரம் பேசி அமைச்சுக்களையும் சலுகைகளையும் சொகுசுகளையும் மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்யும் முஸ்லிம் அரசியல்வாதிளை நம்புவதில் எங்களுக்கு எந்த பயனுமில்லை.

அன்று மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில தங்களின் வசதிகளை காத்துக் கொள்வதற்காக முஸ்லிம்கள் விடயத்தில் மௌனமாக இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மீன்டும் நல்லாட்சியை கொண்டு வருவதற்காக மஹிந்வுக்கு எதிராக புனிதப் போர் செய்வதாக மாயை காட்டி தங்களது மாய அரசியலை அப்பாவி முஸ்லிம்கள மீது மீன்டுமொறு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியதன் மூலம் மீன்டும் தங்களது ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொண்டனர். என்றாலும் பெரும்பான்மையான முஸ்லிம் வாக்குகளை கொண்டு உறுவாக்கப்பட்ட நல்லாட்சி அரசின் ஆட்சியில் முஸ்லிம்கள் மிகவும் அச்ச மனப்பான்மையோடு வாழ்ந்தாலும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இருபத்தியொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஞானசாரவையோ அல்லது முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அட்டகாசங்கள் சம்பந்தமாக பேசுவதால் தமக்கிருக்கும் சலுகைகளை இழக்கலாம் என்ற அச்சத்தோடு உள்ளனர். 

இந்த இக்கட்டான கால கட்டத்தில் பள்ளிவாசல்கள் மூலமாக முஸ்லிம்கள் ஒன்று கூடுவதன் மூலம் மாத்திரமே எங்களுக்குறிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் பள்ளிவாசல்களை கேந்திரப்படுத்துவதன் மூலம் எங்களுக்குள்ள முஸ்லிம் சக்திகளை  ஒன்று திரட்ட வேண்டும்.எங்கள் சமூகத்தில் மார்க்கம் சம்பந்தமான முரன்பாடுகள் மலிந்து கிடந்தாலும் அவைகளை விட முஸ்லிம்களின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். எங்களுக்குள் எவ்வளவு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் ஒரே இறைவணை வணங்கக்கூடியவர்களாகவும் ஒரே நபியைப் பின் பற்றக்கூடியவர்களாகவும் இருக்கிறோம். 

இந்த அடிப்படையில் முஸ்லிம்களுக்கெதிராக ஒரு அநியாயம் கட்டவிழ்த்து விடப்படும் போது தப்லீக் இயக்கத்தினர் என்றோ அல்லது தவ்ஹீத் இயக்கத்தினர் முஸலிம் காங்கிரஸ் என்றோ அல்லது மக்கள் காங்கிரஸ் என்றோ பாகுபாடு பாராமல் முஸ்லிம்கள் என்ற அமைப்பிலேயே முகம் கொடுக்க நேரிடும். இந்த அடிப்படையில் ஜும்ஆப் பிரசங்களில உட்பட இந்த சங்கடமான கால கட்டம் சம்பந்தமாக ஆராயப்படுவதுடன் சமூகத்தின் வழி காட்டிகளாக உலமாக்கள்  இவைகளுக்கு தலைமைத்தும் தாங்க வேண்டும்.

அப்துல் சத்தார்
தேசிய அமைப்பாளர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் முற்போக்கு முன்னணி

9 கருத்துரைகள்:

வெள்ளி மேடைகள் பாவிக்கப்பட்டு, குரான் ஹதீஸ் இல் தீர்வு தேடினால் அல்லாஹ் உதவி செய்வான் இல்லாவிட்டால் இன்னும் நாலு பிரிவுகளாக பிரிவது நடக்கும்

முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தி அழிய வேண்டுமென்று சிங்கள இனவாதிகளும் விரும்புகின்றனர் அதை உருவாக்கிய மகிந்தவும் விரும்புகின்றான் அவனுக்கு கழுவிவிடும் நீயும் விரும்புகிறாய். சமுதாய துரோகி

Poonaiku mani kattuwazu yaar?

அத தானே செய்தார்கள் நம்ம SLTJ சகோதரர்கள். ஆனா நமக்கிட்ட இருக்கிற கேடுகெட்ட அரசியல் வாதிகள், ஆசாத் சாலி நயவஞ்சக கூட்டம், 13முனாபிகுகள் அமைப்பு பிண நார்த்தம் சாப்பிட்ட மூடர்களாச்சே...!!!
இது காலம் கடந்த ஜானம் மஹா பிரபு...இருப்பினும் மேலே சொன்ன நயவஞ்சகர் கூட்டம் மனம் மாறாதவரை நம் சமூகத்துக்கு கேடுதான் Mr. Abdul Saththaar

We have facing many problem in the worrld.
Once we have a example in quran allah mension 25 anbiya stories.pls read care ful and get the explaination from aalim.
Each and every anbiya they have faced kind of eniemes.how they deal with them.example kaaroon firawn abujahl .
How them defeated .beautiful story in fronf of us. Please follow the quran not just say always quraan qraan hadees.

May allah give hidayath for our country buddhist people and entire musriqe too

IPPADY ELLARUME AWANA KOLLU IWANA KOLLU ENDRAAL KADAISHIKKU YAARU MEETHI???

Post a Comment