Header Ads



ஓரினச் சேர்க்கையை, ஞானசார ஆதரிக்கிறாரா..?

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்தும் இனவாத அரசாங்கத்தின் பூசாரியான ஞானசார பௌத்தமத துறவிதானா என்ற சந்தேகத்தை முதலில் அவர் தெளிவுபடுத்த வேண்டும். அதன் பிற்பாடே அவர் இஸ்லாத்தைப்பற்றி குறை நிறைகாண வரவேண்டும். சர்வதேசத்தின் தரகர்களான மைத்திரி  ரணில் அரசாங்கத்தின் மடியில் தவழும் ஞானசார, பௌத்த மதத்தை பாதுகாக்க புறப்பட்டதாக கூறிக்கொண்டு சிலை வைப்பதற்காகவும் விகாரை கட்டுவதற்காகவும் முஸ்லிம்கள் வாழும் பூர்வீக நிலங்களை அபகரிப்பதற்காக கலகம் ஏற்படுத்துவதும், முஸ்லிம் பள்ளிவாயல்களை உடைத்து இலங்கையில் இஸ்லாத்தை இல்லாமல் செய்யப்போவதாகவும் புறப்பட்டவர் நாட்டில் பௌத்தம் அழிந்து போவதை அவதானிக்க மறந்துவிட்டார்.

கௌதம புத்தர் அனுமதிக்காத, பௌத்த சமயத்தில் இல்லாத ஒரு சட்டமூலமான, ஓரினசேர்க்கை திருமணத்திற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் ஞானசார கவனம் செலுத்த மறந்துவிட்டாரா? துறவரம் பூண்டுள்ள அவருக்கு துணைக்கு ஆள் வேண்டும் என்பதற்காக அனுமதிக்கிறாரா? என்பது தொடர்பில் சிங்கள பௌத்த மக்களுக்கு அவர் தெளிவு படுத்த வேண்டும்.

முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் தீவிரவாதிகளின் தங்குமிடமாக இருப்பதாக கூறி, நாடு பூராகவும் பௌத்த கொடிபறக்க விடப்பட வேண்டும், இது பௌத்தர்களின் நாடு என்ற கோசத்துடன்,  தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு அத்துமீறி நுழைந்த ஞானசார தேரர், உண்மையில் பௌத்த மதத்தினதும் சிங்கள  மக்களினதும் விசுவாசியாக இருந்திருந்தால் நாட்டில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக பிரித்தானிய தூதரகத்தில் பறக்கவிடப்பட்ட கொடியை பிடிங்கி வீச ஏன் பிரித்தானிக தூதரகத்தை முற்றுகையிடவில்லை என்பதை சிங்கள மக்கள் மாத்திரம் அல்ல நாட்டின் அனைத்து மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

சிறுபான்மையர் சமூகத்தை பலவீன படுத்தவும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவும் மேற்குலக சக்திகளின் கைக்கூலியாக இயங்கும் ஞானசார பௌத்த துறவி என்பதற்கு முதல் பௌத்த இனத்தையே சேர்ந்தவர்தானா? என்பதற்கு அவர் பதில் தேட வேண்டும்.

மஹிந்தவிடம் அமெரிக்கா தோற்பதற்கு காரணமாக இருந்த, மஹிந்தவுக்கு நேசக்கரம் நீட்டிய அரபு நாடுகளை அவரிடமிருந்து தூரப்படுத்தவும் நாட்டில் இனக்கலவரம் ஒன்றின் மூலம் தங்களுடைய வஞ்சத்தை தீர்த்துக்கொள்ளவும், துருப்புச் சீட்டாக பயன்படுத்தப்பட்ட ஞானசார முஸ்லிம்கள் மீது அவிழ்த்துவிடப்பட்டார். அதன் காரணமாக மஹிந்தவுக்கு உள்நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தி ஆட்சியை இலகுவாக கவிழ்த்துவிடலாம் என்கிற திட்டத்தை அமெரிக்கா ஒரு பழிவாங்கள் நடவடிக்கையாக கையாண்டது.

உண்மையில், மஹிந்த தன்னையே பாதுகாக்க முடியாமல் விசாரணைக்கு அழைக்கப்பட்டு போகிறார், அவருடைய மனைவியை விசாரணைக்கு அழைக்கிறார்கள், அவருடைய சகோதரர்களை அழைக்கிறார்கள், அவருடைய புதல்வர்கள் கைது செய்யப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டு இப்பொழுதும் நீதிமன்றம் செல்கிறார்கள். இப்படி இருக்க ஞானசார மஹிந்தவுக்கு யார்? அவரை மஹிந்த ஏன் இயக்க வேண்டும்? காப்பாற்ற வேண்டும்? என்று கூட சிந்திக்க முடியாத சிறுபிள்ளை வாதத்தை முன்வைக்கிறார்கள்.

ஞானசாரவின் மேலுள்ள கோபத்தை மஹிந்தவை பழிவாங்குவதனூடாக வெற்றி கொண்டுவிடலாம் என்றவர்கள். இப்போது வானம் பார்த்து அழுகின்றார்கள். முஸ்லிம்களின் இந்த குருட்டுத்தனமான நம்பிக்கையை தமக்கு மேலும் சாதகமாக பாவித்து எதிர்வரும் தேர்தலை வெற்றி கொள்ள அரசாங்கம் மீண்டும் ஞானசாரவை ஏவி விட்டுருக்கிறது. அதனூடாக மஹிந்த ஆட்சி ஏறுவதற்காக ஞானசாரவை பயன்படுத்துகிறார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்து விடுவார்கள். இனிமேலும் நல்லாட்சியின் கபட நாடகத்தை நம்பி முஸ்லிம்கள் ஏமாந்தால் 21ம் நூற்றாண்டின் முட்டாள்கள் இலங்கை முஸ்லிம்கள்தான்.

-அஹமட் புர்க்கான்-

5 comments:

  1. புத்த மத்தை ஓரளவு கற்று இருக்கின்றேன், அந்த மதத்தில் ஓரினச் சேர்க்கை தடைசெய்யப்பட்டதாக நான் கண்டதில்லை. அப்படி இருந்தாலும், மனித உரிமை குறித்து உயர்வாக்கப் பேசப்படும் இன்றைய காலத்திற்குப் பொருத்தமில்லை.

    தனிப்பட்ட ரீதியில் தன்னினச் சேர்க்கையை சரியானதாக என்னால் கருத முடியாவிட்டாலும், அதனை சரி என்று கருதி, அதன் படி சுய விருப்பத்தில், சுய தெரிவின் அடிப்படையில் வாழ விரும்புகின்றவர்களை தடுப்பதற்கான எந்த உரிமையும் அடுத்தகவர்களுக்கு இல்லை. தன்னினச் சேர்க்கையாளர்கள் வாழ்க்கை, மற்றவர்களுக்கு இடையூறு இல்லாததாக, அவர்களின் உடலியல், உளவியல் தேவையை பூர்த்தி / திருப்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு அமையும் பொழுது, அடுத்தவர்கள் அதற்கு இடையூறாக இருக்கக் கூடாது.

    ReplyDelete
    Replies
    1. மேற்கத்தேய சிந்தனையின் வெளிப்பாட்டுக் கருத்து. ஒழுக்கவியல் கலாசாரவயப்பட்ட நாடுகளுக்குப் பொருந்தாது.இருவர் விரும்பினால் என்றால் எதையும் அங்கீகரிக்க முடியுமா?

      Delete
  2. I am no fan of this monk, but he definitely cannot enter/tresspass a foreign embassy . British embassy is free to fly whatever flag they like , he can protest from outside but cannot forcefully enter, like he enters government ministries.

    ReplyDelete
  3. நிலவன்!!

    பெற்றோல் டாங்கியில் தான் பெற்றோல் போடவேண்டும்.

    அதை விட்டு புகையை வெளியேற்றக்கூடிய "ஸைலன்ஸரில்" அல்ல!

    அதுதான் நியதி&முறை.

    பகுத்தறிவற்ற மிருகம் கூட இதை தெரிந்திருக்கிறது. அவ்வாறு செய்வதும் இல்லை.

    ReplyDelete
  4. இது என்ன சிறுபிள்ளைகளை போன்று பதிவு செய்து இருக்கின்றன அனேகமாக பவுத்த விஹாரையிலுள்ளவர்களே ஓரினசேர்கையாளர்கள் அவர்களிடம் சென்று அது சரியா பிழையா என்று கேட்பது எந்த அளவுக்கு புத்திகெட்டது!

    ReplyDelete

Powered by Blogger.