Header Ads



மக்கா - மதீனாவை தவிர்த்து, சவூதியை பூண்டோடு அழிப்போம் - ஈரான் எச்சரிக்கை


ஈரான் நாட்டில் அத்துமீறி சவுதி அரேபியா தாக்குதல் நடத்த முயன்றால் அந்நாட்டில் ஒரு கட்டிடம் கூட இல்லாமல் அழித்து விடுவோம் என ஈரான் நாடு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

சவுதி அரேபியா நாட்டின் துணை இளவரசரான Mohammed bin Salman சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

அப்போது, ‘ஆட்சி மற்றும் அதிகாரத்தை பெருக்கிக்கொள்ள சவுதி மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.

இப்பனிப்போரானது தீவிரமடைந்து தாக்குதலாக மாறினால், இந்த போரானது ஈரான் நாட்டில் தான் நிகழுமே தவிர சவுதி அரேபியாவில் நிகழாது’ என மிரட்டல் விடுத்துள்ளார்.

எனினும், இக்கருத்து குறித்து அவர் விரிவான தகவல் எதுவும் வெளிடவில்லை.

இந்நிலையில், சவுதி இளவரசரின் மிரட்டலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஈரான் நாட்டு பாதுகாப்பு அமைச்சரான Hossein Dehghan ஒரு பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அதில் ‘சவுதி தன்னுடைய எல்லையை தாண்டி ஈரான் நாட்டிற்குள் நுழைந்தால் சவுதியில் ஒரு கட்டிடம் கூட இருக்காது.

இஸ்லாமியர்களின் நலனிற்காக மெக்கா மற்றும் மதீனா ஆகிய புனித தளங்களை மட்டும் அழிக்காமல் மற்ற அனைத்து கட்டடங்களையும் பூண்டோடு அழித்து விடுவோம்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், இந்த எச்சரிக்கைக்கு சவுதி அரசு இதுவரை எவ்வித பதிலடியும் வழங்கவில்லை.

இரு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்து வரும் அதிகார யுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இரு நாட்டு எல்லைகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.