May 30, 2017

எம்மை பாலியல் துஸ்பிரயோகம், செய்தது இவர்கள் இல்லை - பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்குமூலம்

கடந்த சில தினங்களாக சில தீய சக்திகள் திட்டமிட்டு தமிழ் முஸ்லிம்களிடையில் கலவரம் ஒன்றை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.மூதூர் மல்லிகை தீவில் மூன்று தமிழ் மாணவிகளை முஸ்லிம் இளைஞர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறி அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலையின் உண்மை தன்மையினை அறிய பாராளுமன்ற உறுப்பினர் நேற்று திங்கட்கிழமை அப்பகுதிக்கு விஜயம் செய்த பின் வெளியிடுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரத்தியேக வகுப்புக்கு சென்ற மூன்று தமிழ் மாணவிகளை அப்பகுதியில் கட்டிட நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பின் தலைமறைவாகியதாக கூறி அக்கட்டிட ஒப்பந்தகாரரையும் அவரின் உதவியாளரையும் சிலர் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இன்று காலை தலைமறைவானதாக கூறிய இரண்டு இளைஞர்களும் பொலிசார் முன்னிலையில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் மாணவிகள் தம்மை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர்கள் இவர்கள் இல்லை என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆகவே இச்சம்பவத்தின் குற்றவாளிகள் யார்? அவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது இவ்வாறிருக்க ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் இச்சம்பவத்தை முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புபடுத்தி இச்செய்தியை திரிபுபடுத்தி வதந்திகள் பரப்பபடுவதன் மூலம் இப்பகுதிகளில் பல வருடகாலமாக ஒற்றுமையாக வாழ்ந்துவரும் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் இன நல்லுறவை சீர்குலைக்க சில குழுக்கள் செயற்பாட்டு வருகின்றமை தெளிவாகின்றது.

இதுபோன்று கடந்த சில தினங்களாக இரு சமூகங்களுக்கிடையில் நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் பல செயற்பாடுகள் இப்பிரதேசத்தில் அரங்கேற்றப்படுவதை அவதானிக்ககூடியதாகவுள்ளது.உதாராணமாக அண்மையில் தமிழ் மக்களின் பூர்வீக  காணிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து வருவதாக கூறி இப்பகுதி தமிழ் மக்களை தூண்டிவிட்டு போராட்டங்களில் ஈடுபட்டதை கூறலாம்.

அவ்வாறு அவர்களின் பூர்வீக காணிகள் ஏதாவது ஆக்கிரமிக்கப் பட்டிருப்பின் அதற்குரிய ஆதாரங்களுடன் அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இதுவரையில் அவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நான் அறியவில்லை.

ஆகவே தற்போது அப்பகுதியில் தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைக்க சில  குழுக்கள் சில அமைப்புகளின் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக செயற்படுகின்றமை தெளிவாகின்றது. ஆகவே இவர்களின் சூழ்ச்சிகளை முறையடித்து இப்பகுதிகளில் வாழும் இரண்டு சமூகங்களும் தமைக்கிடையில் பல்லாண்டு காலமாக நிலவும் நல்லுறவை பேணி நடக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் சிறுவர்கள் பாலியல் வற்புறுத்தளுக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்படும் வரை இன முறுகலை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை தவிர்க்குமாறு அனைத்து ஊடகங்களுக்கும் கோரிக்கை விடுக்கிறேன். 

மேலும்  உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த தண்டனையை பெற்றுகொடுக்கும் வரை தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்போம்.
                                                                                                                        

17 கருத்துரைகள்:

இரு சமூகங்களினதும் சிவில் அமைப்புக்கள் தங்களுக்கு இடையில் பரஸ்பரம் கலந்துரையாடல்கள் செய்து தொடராக ஒற்றுமையை பலப்படுத்த நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட வேண்டும் அப்படி செய்யா விட்டால் இந்தியாவில் நடக்கும் கலவரங்கள் போன்று நமது நாட்டையும் மதக்கலவரங்கள் உள்ள நாடாக ஆக்கி விடுவார்கள் .

முஸ்லீம் அமைச்சர் ஏன் இவ் விடையத்தில் மூக்கை நூளைக்கிறார்.மகரூப் ற்க்கு மூக்கு வியர்த்ததன் காரணம் என்ன.??.? சந்தேகங்கள் வலுக்கிறது.?
மாணவிகள் துஷ்பிரயோகம் சம்மந்தமாக தமிழர் யாரும் கேள்வி கேட்க கூடாது என்று மிரட்டு கிறார் போல!!

சகோதரர் நீங்கள் முட்டாளாக்க ?

சகோதரர் நீங்கள் முட்டாளா?

தமிழ் சிறுவர் சிறுமியரின் எதிர்காலத்தை பணயம் வைத்துதான் இனநல்லுறவை வளர்க்க வேண்டும் என்றால் அப்படி எந்த நல்லுறவும் எமக்குகு தேவை இல்லை.

Then its deppending with muslim boys... so i bope ur really muttal as our brothers says.... bloody mr.kumar

Please avoid bad manners.we have strong judicial system,it will clear everything.whoever it is suspect should be punished.who are we to take the justice into our hands.

இது்இனமுறுகலை தூண்டுபவர்களின் ஒரு வழமையான கைவரிசை போல் உள்ளது.
இவ்வாறுதான் மியன்மாரிலும் பொய் வதந்திகளை கிழப்பினார்கள், இந்தியாவிலும் இதேபோன்று நிகழ்ந்துள்ளது.
இவைகள் நன்கு திட்டமிடப்பட்டே நடக்கின்றன.

You brother's. And you dont have proper answers to my comments so they putt "muttal "on reply box.you bloody racist.

Kumaran kumaran, அறிவிலியை போல் பேசாதீர்கள்...

முஸ்லிம்கள் மீது ஆதாரமற்ற குற்றசாட்டுகளை வைத்தால் நாம் பார்த்து பொத்திக்கொண்டு போகோணுமோ? நீங்கள் நினைத்தபடி சட்டம் போட இது புலி காட்டுமிராண்டிகள் காலம் அல்ல புரிந்துகொள். ஏன் இதன் உண்மை தன்மையை அறிய TNA அரசியல்வாதிகள் களத்தில் இறங்கட்டுமே யார் வேண்டாமெண்டது அவர்களும் மக்களால் தெரிவுசெய்த அரசியல்வாதிகள் தானே சும்மா கிடைக்கமுடியாத சமஸ்டி, வடகிழக்கு இணைப்பு பற்றி மட்டும் பேசிக்கொண்டிருப்பதால் என்ன பயன் ?

உங்களோடு இன நல்லுறவா? எப்படி வடகிழக்கு இனைந்து உங்களுக்கு அடிமையாகவா? யார் கோரியது அப்படியான இன வல்லுறவை

மகருப் கோரியிருக்கரே செய்தியை வசித்துவிட்டூ பதிவிடும்.

முஸ்லிம்களிடம் நல்லொழுக்கத்தையோ நேர்மையையோ ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. முஸ்லிம்கள் நல்லவர்கள் என்று நம்ப செய்வதற்கு என்னவெல்லாமோ செய்வார்கள்.உண்மையான குற்றவாளிகளை காட்டாமல் வேறு நபர்களை அடையாள அணிவகுப்பில் நிறுத்தினால் இல்லை என்றுதான் பதில் கூறுவார்கள் .

குமார் ஆமாம்டா அந்த விந்தியாவை கற்பழித்துக்கொலைசெய்தவர்களும் முஸ்லிமகள்தானே?

எந்த சிறுமி யாக இந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.இனநால்லிணக்ககம் என்றும் சர்வதேச சதி என்றும் பசப்பு வர்தைகளை கூறி முஸ்லீம் கள் குற்றத்தை நியாயப்படுத்துகின்றனர்.இது வே பாதிக்க பட்டது முஸ்லீம் சிறுமீஆக இந்தால் மகரூப்கள் இனநல்லிணக்க பாடம் எடுப்பார்களா??வித்தியா கொலைவழக்குக்கு நீதீ கோரீ தமிழர் செய்த போராட்டங்கள் தெரியாதா உமக்கு??

Kumaran எனது பதில் "முஸ்லிம்களிடம் நல்லொழுக்கத்தையோ, நேர்மையையோ எதிர்பாக்க முடியாது " என்ற உமது கருத்துக்குக்குத்தான்.
பாலியல் வன்புணர்வு குற்றம் செய்தால் அவர்களுக்கு மரண தன்டனை வளங்கச்சொல்லி இஸ்லாம் கூறும்போது நாம் எப்படி அவர்களை பாதுகாப்போம் உமக்கு கூறலாம்?
இத்தன்மனையை வழங்களினாலும் இஸ்லாம் மனிதநேயமற்ற மார்க்கம் என்று கூக்குரலிடப்போவதிம் உம்மைப்போன்ற துவேசிகளே.

Post a Comment