May 15, 2017

முசலி மக்கள், முஸ்லிம் அரசியல்வாதிகளினால் ஏமாற்றம், மோடிக்காக நிறுத்தப்பட்ட போராட்டம்

-விடிவெள்ளி-

மாவில்லு பேணற்­காடு வர்த்­த­மானி பிர­க­டனம்  தொடர்­பாக  கடந்த 13 ஆம் திகதி  ஜனா­தி­ப­தியின்  செய­லா­ள­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தீர்க்­க­மான முடி­வொன்று பெற்­றுத்­த­ரப்­படும் என உறு­தி­ய­ளிக்­கப்­பட்டும் அப்­பேச்­சு­வார்த்தை நேற்­று­முன்­தினம் இடம்­பெ­ற­வில்லை. எனினும் இப்­பேச்­சு­வார்த்தை நாளைய தினம் -16- இடம்­பெறும் என சம்­பந்­தப்­பட்ட தரப்­புகள் தெரி­வித்­துள்­ளன.  இருப்­பினும் முசலி மக்கள் சில தலை­மை­க­ளினால் திட்­ட­மிட்டு ஏமாற்­றப்­பட்­டுள்­ள­தாக பிர­தேச மக்­களும் சில அர­சி­யல்­வா­தி­களும் விசனம் தெரி­வித்­துள்­ளனர். 

நேற்று முன்­தினம் 13 ஆம் திகதி ஜனா­தி­ப­தியின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு பெற்றுத்தரப்படும்  என அமைச்ர்­க­ளான பைஸர் முஸ்­தபா, ரிஷாட் பதி­யுதீன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காதர் மஸ்தான் மற்றும் அசாத்­சாலி உள்­ளிட்­டோரால் உறு­தி­ய­ளித்­த­தை­ய­டுத்­ததே மறிச்­சுக்­கட்­டியில் 44 நாட்­க­ளாக கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை மேற்­கொண்­டி­ருந்த பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது போராட்­டத்தை தற்­கா­லி­க­மாக கைவிட்­டி­ருந்­தனர். 

இதேவேளை, இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கையில்  நடை­பெற்ற சர்­வ­தேச வெசாக்  நிகழ்வில் பிர­தம  அதி­தி­யாகக் கலந்­து­கொள்ள  கடந்த 10 ஆம் திகதி வருகை தரவிருந்த நிலை­யிலே இந்த உறுதி மொழி வழங்­கப்­பட்டு  கடந்த 8 ஆம் திகதி  கவ­ன­யீர்ப்புப் போராட்டம் நிறுத்தி வைக்­கப்­பட்­ட­தாக கூட்டு எதி­ரணி குற்றம் சுமத்­தி­யுள்­ளது. 

கடந்த 7 ஆம் திகதி காலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நடத்­திய பேச்­சு­வார்த்­தையில் ஏற்­பட்ட புரிந்­து­ணர்வின்  அடிப்­ப­டையில் மாவில்லு பேணற்­காடு வர்த்­த­மானி பிர­க­ட­னத்தில் உள்ள  தவ­று­களைத் திருத்தும் வாய்ப்பு  ஏற்­பட்­டுள்­ளது.

அதனால் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை தற்­கா­லி­க­மாக நிறுத்­து­மாறு அமைச்­சர்கள் ரிஷாத் பதி­யுதீன், பைசர்  முஸ்­தபா, தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர்  அசாத்­சாலி, முஸ்லிம் கவுன்­சிலின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தனர். இதை­ய­டுத்தே போராட்டம் தற்­கா­லி­க­மாக கைவி­டப்­பட்­டது. 

அத்­தோடு அமைச்­சர்­க­ளான  ரிசாத் பதி­யுதீன், பைசர் முஸ்­தபா, சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் ஹெலி­ெகாப்­டரில் வில்­பத்­து­வுக்குச் சென்று, தாம் ஜனா­தி­ப­தி­யுடன்  நடத்­திய பேச்­சு­வார்த்­தையின் விப­ரங்­களை வெளி­யிட்டு  கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தைக் கைவி­டு­மாறு வேண்டிக் கொண்­டனர். இந்தப் போராட்ட நிறுத்தம் நரேந்­திர மோடியின் வரு­கையின் கார­ண­மா­கவே மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

அஸ்வர் குற்­றச்­சாட்டு

கடந்த 13 ஆம் திகதி திட்­ட­மிட்­ட­படி  மாவில்லு பேணற்­காடு வர்த்­த­மானி பிர­க­டனம்  தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டாமை குறித்து முஸ்லிம்  முற்­போக்கு முன்­ன­ணியின்  செய­ல­தி­பரும்,  முன்னாள்  அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம்.அஸ்வர் கருத்து தெரி­விக்­கையில்;  

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின்  இலங்கை வரு­கை­யை­ய­டுத்து இந்த கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை  மூடி மறைப்­ப­தற்­கா­கவே நிறுத்தி வைக்­கப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கி­றது. இந்த  வர்த்­த­மானி பிர­க­டன விவ­காரம் உட­ன­டி­யாக தீர்க்­கப்­ப­டாமல் அதற்­கென ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டால்  தீர்­வுக்கு நீண்­ட­காலம் செல்லும். இதனால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்கள் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் மீது ஆத்­திரம் கொள்­வார்கள்.  இவ்­வி­வ­கா­ரத்தில் அமைச்சர் ரிசாத் பதி­யு­தீனின் முயற்­சிகள் பாராட்­டத்­தக்­கன. அவ­ரது முயற்­சி­க­ளுக்கு முஸ்லிம் சமூகம் பூரண  ஒத்­து­ழைப்பை வழங்க வேண்டும் என்றார். 

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி

இதே­வேளை, மக்கள் திட்­ட­மிட்டு ஏமாற்­றப்­பட்­டுள்­ள­தாக நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி தனது ஆட்­சே­ப­னையை தெரி­வித்­துள்­ளது.  அதன் தவி­சாளர் பொறி­யி­ய­லாளர் அப்துர் ரஹ்மான் கருத்து தெரி­விக்­கையில், 

ஏற்­க­னவே, 2014 ஆம் ஆண்டு மரிக்கார் தீவு மக்கள் நடத்­திய போராட்டம் கைவி­டப்­பட்­டது. அதற்கு இது­வ­ரை­யிலும் தீர்வு கிடைக்­கப்­பெ­ற­வில்லை. இந்­நி­லையில் தற்­போதும் மறிச்­சுக்­கட்­டியில் இடம்­பெற்ற போராட்டம் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது. அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பியே மக்கள் இந்தப் போராட்டத்தை நிறுத்தியுள்ளனர். மக்களுக்கு ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையூடாக தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அது குறித்த தினத்தில் நிறைவேற்றப்படவில்லை. காலதாமம் எமக்கு நம்பிக்கையளிப்பதாக இல்லை. எனினும் நாளை பேச்சுவார்த்தை இடம்பெறும் என கூறப்படுகின்றது. அதன்மூலம் தீர்வொன்று பெற்றுத்தரப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார். 

0 கருத்துரைகள்:

Post a Comment