May 23, 2017

ஹர்த்தாலை வெற்றிகரமாக நடாத்துவதற்கு..!

-Azeez Nizardeen-

5ம் திகதி வியாழக்கிழமையே  ஹர்த்தால்! எமது முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் (MRO) பெயரை பயன்படுத்தி ஒரு சில சக்திகள் நாளை புதன்கிழமை ஹர்த்தால் அனுஷ;டிக்கப்படுவதாக முகவரியோ தொலைபேசி தொடர்பு இலக்கங்களோ இன்றி பரப்பி வருகின்றனர். 

முக்கியமாக சில மஹிந்த தரப்பு ஆதரவாளர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக எமக்கு அறிய வருகிறது.  முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு கொழும்பை மையமாக வைத்து செயற்படும் ஓர் அமைப்பாகும். கடந்த ஒரு தசாப்த காலமாக எமது அமைப்பு பல போராட்டங்களை நடாத்தியுள்ளது.

MRO அமைப்பு மஹிந்த ஆட்சிக்காலத்தில்  முஸ்லிம்களின் உரிமை தொடர்பாக களத்தில் இருந்து  செயலாற்றி  வந்த அமைப்பாகும். 

அதுமட்டுமல்லாமல்   எந்த அச்சுறுத்தல்களுக்கும் முகம்  கொடுக்கும் நிலையில்  செயலாற்றும்  அமைப்பாகும்.   எமது MRO அமைப்பை சீர் குலைக்கும் நோக்கத்துடனே சிலர் ஹர்த்தால் தொடர்பான கதையாடல்களை ஆரம்பித்திருப்பதாகவும் எமக்கு அறியக் கிடைத்திருக்கிறது.  

எனவே ஜனநாயக ரீதியில் எமக்குள்ள உரிமையை பயன்படுத்தி இந்த ஹர்த்தாலை வெற்றிகரமாக  நடாத்துவதற்கு உதவுமாறு சகல தரப்பினரிடமும் வினயமாக வேண்டிக்கொள்கிறோம்.


4 கருத்துரைகள்:

சந்தேகத்திற்கு இடமான ஹர்த்தால் அழைப்பு.!
நாளை வேண்டாம் ஹர்த்தால்!!
துறவி ஞானசாரவிற்கு எதிரான நீதி மன்ற அவமதிப்பு வழக்கு நாளை 24 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் கடந்த ஓரிரு தினங்களாக முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை அவரது சேனா தீவிரப்படுத்தியுள்ளமை நாம் அறிந்த விடயமாகும்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி காணாமல் போன ஊடகர் பிரதீப் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை ஹோமாகம மஜிஸட்ரேட் நீதி மன்றத்தில் இடம்பெற்ற போது நீதிமன்றத்தை அவமதித்ததன் பேரிலும் அரச ஊழியர் ஒருவரை அச்சுறுத்தியதன் பேரிலும் துறவி ஞானசார மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்து.
மேன்மறையீட்டு நீதி மன்றில் நாளை 24 ஆம் திகதி விசாரணைக்கு வரும் வழக்கில் குற்றவாளியாக துறவி காணப்படின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட இடமுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்து தண்டணைக்குரிய குற்றத்தை துறவி இழைத்துள்ளதாக அரச வழக்குரைஞர் நாயகம் மேன் முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முறையிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் ஹீரோவாக முனைவதன் மூலம் பல் பரிமாண அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றை துறவி மேற்கொண்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.
முஸ்லிம்களின் அழுத்தத்தின் பேரிலேயே தான் கைது செய்யப்பட இருப்பதாக அவரும் சகாக்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர், இந்த நிலையிலேயே முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திப்பதனை ஜனாதிபதி தவிர்த்துக் கொண்டு வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நாளை துறவி ஞானசார கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நிலை ஏற்படின் ஏக காலத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தாலும் இடம் பெற்றால் எந்தெந்தத் தரப்புக்கள் இலாபமடைவர் என்பதனை முஸ்லிம்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே நாளை எந்தவொரு முஸ்லிம் பிரதேசத்திலும் "ஹர்த்தால்" அனுஷ்டிக்காது இயல்புவாழ்க்கையை முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
அரசியல் மற்றும் சிவில் நடவடிக்கைகளை முஸ்லிம் தலைமைகள் நன்கு சமயோசிதமாக திட்டமிட்டு கூட்டாக மேற்கொள்வதே ஆரோக்கியமான அணுகு முறையாகும், மாறாக தனியாட்களோ, குழுக்களோ, முகவரியற்ற பிரசுரங்களோ, ஆத்திரமூட்டல்களோ எங்களை நகர்த்துவதனை அனுமதிக்க முடியாது.
அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளும் அரசோடு பங்காளிகளாக உள்ள சக்திகளும் கூட இனவாத சக்திகளை கவனமாக கையல்வதாகவே உணர முடிகிறது.
முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்பு குறித்த விடயங்களில் அவ்வப்பிரதேசங்களில் முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இருப்பதோடு கூட்டுப் பொறுப்புடனும் சகிப்புத் தன்மையோடும் நடந்து கொள்ள வேண்டும்.
குறிப்பு: முஸ்லிம்கள் தமது இருப்பை பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுகின்ற எல்லா உரிமையும் ஏனைய சமூகங்களிற்குப் போல் குறைவில்லாது இருக்கின்றது, அதேபோன்றே ஜனநாயக வழிமுறைகளில் போராட்டங்கள் நடத்துவதற்கும் அவர்களுக்கு பூரண உரிமை இருக்கிறது.
Copied from Inamullah Masihudeen

who is this people (MRO) ???

DO NOT FOLLOW HARTHAL ....................................

MRO ? I only first time see about MRO in jaffana.com today.

Please my Brothers/Sisters in Islam.. Do not answer to the call of any individual or any group to do harthaaal.

Let us stay behind the advice of Jammiyathul Ulema council, Soora Council and Active Muslim ministers (regardless of any differences).

Never listen to the call of any individual and strange groups. If these groups are really interested for Lankan Muslims.. They should Join hand with accepted and responsible Muslim organizations like ACJU and Muslim Ministers who really work for society.

May Allah Keep us under one unified leadership and especially under the situation like this.

Post a Comment