Header Ads



இயற்கை அனர்தத்தில் இன, மதம் பாராமல் ஒற்­று­மை­யாக செயற்­படுவது பாராட்­டுக்­கு­ரி­ய­து - சந்­தி­ரிகா

சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்ளம், மண்­ச­ரி­வினால் ஏற்­பட்ட பாதிப்­பு­களில் மக்­களை மீட்­ப­தற்கு இன, மத பேதம் பாராமல் செயற்­பட்­டமை பெரும் பாராட்­டுக்­கு­ரி­யது.

இனிமேல் இவ்­வா­றான அனர்த்தம் ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். அத்­துடன் வெள்ளம் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மான சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்­பு­களை நீக்க வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார்.

நாட்டில்  ஏற்­பட்­டுள்ள அனர்த்தம் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவ்­வ­றிக்­கையில் மேலும தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

சீரற்ற கால­நிலை கார­ண­மாக பெரும் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. இதன்­போது இன,மத, பேதம் பாராமல் ஒற்­று­மை­யாக செயற்­பட்டு வரு­கின்­றனர். எனவே பாதிக்­கப்­பட்ட மக்­களை மீட்­ப­தற்­காக இன பேதம் பாராமல் செயற்­பட்டு வரு­வது பாராட்­டுக்­கு­ரி­ய­தாகும்.

 இந்த அனர்த்­தத்தின் போது பாதிக்­கப்­பட்ட மக்­களை காப்­பாற்­று­வ­தற்கு பெரும் ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கிய முப்­ப­டை­யினர் மற்றும் அரச ஊழி­யர்­க­ளுக்கம் நன்றி கூற கட­மைப்­பட்­டுள்ளேன்.

எனவே, இனிமேல் இவ்­வா­றான அனர்த்தம் ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். அத்துடன் வெள்ளம் ஏற்படுவதற்கு காரணமான சட்டவிரோத குடியிருப்புகளை உடன் நீக்க வேண்டும். இனிமேலும் இவ்வாறான குடியிருப்புகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றார்.

3 comments:

  1. heheheeee... now got awake up from sleep! or you also been hidden like Gnanasera??

    where is your wording....during the election time to GOOD(???) GOVERNANCE???

    are you also ungrateful to sri lanka muslims who believed your words during election to topple mahintha government?

    ReplyDelete
  2. Madam please take good rest in your home.

    ReplyDelete
  3. She is the one who brought My3 as a "Common Candidate" to take revenge against Mahinda and now we are suffering.

    ReplyDelete

Powered by Blogger.