May 05, 2017

மகிந்த தலைமையில் பாரிய ஆபத்தை ஏற்படுத்தி, இனக்கலவரம் ஏற்படுத்த முயற்சி

மகிந்த தலைமையில் இன்னுமோர் யுத்தத்திற்கு வழி அமைத்துக் கொண்டு வரப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று -05- கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்த அவர்,

இப்போது தேசப்பற்றாளர்களைப் போல கருத்து வெளியிட்டு கொண்டு வரும் ராஜபக்சவினர் கடந்த காலங்களில் ஊழல்களையும் கொலைகளையும் செய்தவர்களே.

மகிந்த ராஜபக்சவின் மனைவியான சிராந்தி ராஜபக்ச வெசாக் பண்டிகை ஒன்றிக்காக பாரிஸ் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

அவர் அங்கு நான்கு நாட்களும், மூன்று இரவுகளும் தங்கினார். ஆனால் அதற்கான மொத்த செலவு 10. 4 மில்லியன்களாகும் இவை யாருடைய பணம் அனைத்தும் அரசாங்கத்தின் பணமே ஆகும்.

அதேபோன்று கோத்தபாயவின் மகள் அமெரிக்கா பல்கலைக்கழகம் ஒன்றில் கற்று கொண்டு வந்தார். அவரை பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் செல்ல இலங்கையின் இராணுவத்தரப்பில் இருந்து இருவர் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு இரு தரப்பில் இருந்தும் ஊழியம் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறான ஊழல்களையும், அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்தியவர்களுமே இன்று நல்லவர்களைப் போல் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மகிந்த ராஜபக்ச தலைமையில் நாட்டுக்கு பாரிய ஆபத்து ஏற்படுத்த திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டு வரப்படுகின்றது.

தற்போது பொய்களை பரப்பிக் கொண்டு வருவதனைப்போன்று நாட்டில் இனவாதத்தினையும் இனக்கலவரங்களையும் ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டு வரப்படுகின்றது.

மீண்டும் 88 மற்றும் 89 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கலவரங்களைப் போன்று நாட்டை வன்முறைக்கு உட்படுத்தி, மீண்டும் ஓர் யுத்தத்தினை கொண்டு வந்து அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றலாம் என மகிந்த திட்டமிட்டுள்ளார்.

மகிந்தவின் மே தினக் கூட்டத்தில் இருந்து நாட்டில் இனவாதத்தினை ஏற்படுத்த முயற்சிகளைச் செய்து கொண்டு வரப்படுகின்றது. இது மீண்டும் ஓர் யுத்தத்திற்கு நாட்டை அழைத்துக் கொண்டு செல்லப்படும் எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

8 கருத்துரைகள்:

IF THEY MIS-USED THE POWER (GOING FOR SHOPPING TO FRANCE USING GOVT MONEY, ENGAGING ARMY PERSONNEL FOR PERSONNEL WORKS ETC), WHAT IS THE HELL YAHAPALANAYA DOING. WHY DO NOT YOU PUNISH THEM. 2 YEARS GONE. YOU ARE STILL TALKING THIS.

Dear mujeeb,
Don't talk unwanted. Talk with your leaders to stop harm our Muslim community by racists

Dear
Don't talk like kids.
Do anything good for peoples if ur party can.
Look well, what is happening for muslim.
Let us even to eat dates in Ramadan season.

Except these kind of all story they don't have new topics.. We have 1000 of burning issues... but they will never talk... We have learned lots... This is what you all can do...

அப்பா உங்கட தலைவர் ரணிலிடம் பேசி தேவையான நடவடிக்கையை செய்யலாமே கௌரவ MP அவர்களே.நீங்கள் எல்லோரும் தெரு கூதாளிகள்தான். முதலில் இணைகளுக்கிடையில் விரிசலை உங்களது நல்லாட்சிதான் உரம் போடு வளர்கிறது.நீங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது இனத்துக்காக எவ்வாறெல்லாம் குரல் கொடுத்தீர்கள். அப்போ நீங்க எந்த அதிகாரமுமில்லாத MP. இப்போ ஆளும் கட்சி MP. அப்படியென்றால் பலமடங்காக இனங்களுக்கு படுபடவேண்டியுள்ளது.சும்மா எந்த நேரமும் மஹிந்தய குறைகூறாமல் தப்போது உங்கள் அரசாங்கத்தின் சதித்திட்டத்தை பேசுங்கள். ஆனால் உங்களால,ஆசாத் சாலியாலோ மற்றும் ஏனைய முஸ்லீம் அரசியல்வதிலோ ரணிலுக்கோ/மைத்ரிக்கோ எதிரா பேசமுடியாது. பேசினால் பதவி,பட்டம் அந்தஸ்து போய்விடும். அந்நிய சகோதர்களிடமுள்ள பற்று ஏன் நம்மர்களுக்கு இல்லாமல்போட்டு. பெரும் தலைவர் ஹக்கீம் கட்சிக்கார் எல்லாம் முடித்தப்புறம் வருவாராம் தீர்த்துவைக்க. அப்பாவிமக்களின் சாபம் உங்களையெல்லாம் சும்மாவிடாது கௌரவ மந்திரிமார்களே.

கௌரவ முஜீப் அவர்களே!
வெட்கமில்லாமல் இப்படியெல்லாம் பேசாமல் உங்கட தலைவர்ட காலைபிடிச்சிருங்க.

கௌரவ முஜீப் ரஹ்மான் அவர்களே! நீங்கள் எதிர்கட்சில் இருக்கும்போது உங்களது பேச்சாற்றல், தஹ்ரியத்தைப் பார்த்து உண்மையிலேயே உங்களை ஒரு உண்மையான, நேர்மையான அரசியல்வாதியென்றுதான் இருந்தோம்.ஆனால் அதிகாரம், அந்தஸ்து வந்தப்போ இப்பதான் புரிகிறது நீங்களும் ஒரு புஷ்வாணமன்று. எங்களது இனத்திற்கு உங்களால்தான் உதவமுடிமென்றுதான் நம்பிருந்தோம். ஆனால் அது உங்களாலும் முடியதுபோலிருக்கிறது. இருந்தாலும் உங்களால் முடியாவிட்டால் அல்லாஹுக்காக போத்திட்டிருங்க. சும்மா அவன இவன பற்றி புறம்பேசாம.

THE TRUTH IS BEING REVEALED, ALHAMDULILLAH! WHAT "THE MUSLIM VOICE" HAS BEEN CRYING FOR THE MUSLIMS OF SRI LANKA TO HEAR IS NOW BEEN HEARD, INSHA ALLAH. MANY MORE MUSLIMS WILL REVOLT AGAINST THESE UNSCRUPULOUS DECEPTIVE MUSLIM POLITICIANS LIKE MUJEEBU RAHUMAN (CASSIM NAANA) IN THE COMING MONTHS, INSHA aLLAH.

Noor Nizam - Convener "The Muslim Voice".

Post a Comment