Header Ads



நாட்டை நிர்வகிக்க வேண்டியது, செல்வந்தர்கள் அல்ல - ஜனாதிபதி

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் அனைத்து உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் குறித்து ஒரு முறையான ஆய்வை செய்து நாட்டுக்கு பொருத்தமானவற்றை மட்டும் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

2017 ஆம் ஆண்டில் நாட்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய அம்சமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2020 ஆம் ஆண்டாகும்போது 15,000 கிராமங்களில் வாழும் மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்ற இதனூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இங்கு மேலும் உரையாற்றியுள்ள ஜனாதிபதி, வசதிபடைத்தவர்களின் செல்வங்கள் வசதி இல்லாதவர்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் நாட்டை நிர்வகிக்க வேண்டியது மத்திய வர்க்கத்தினரேயன்றி செல்வந்தர்கள் அல்ல என தான் நம்புவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். 

அதேவேளை இதனை வெற்றிபெறச் செய்யும் தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கு கட்சி, நிற பேதங்களின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

6 comments:

  1. It is too late....Get ready to hand over the country to some one else...

    ReplyDelete
  2. He´s a joke president just wasting time for country better he resign and hand ower some young man to leading the country.

    ReplyDelete
  3. Easy to say
    Practically no way.our country collapsed by politicans

    ReplyDelete
  4. Our srilankan want to get everthing by fast.not to be patient.govt will run until 2020.wait and see .and entire srilankans will dupport present govt.after 2020 country will bad situation then will change to another party.pls be patient and dua.actually allah his rulling entire the world.srilanka is nothing for allah

    ReplyDelete
  5. Sri Lanka will be another ETHIOPIA if food imports become subject to scrutiny and stopped. Lesson still not learned?. Remember of Mrs B government in 1970-1977. Good luck.

    ReplyDelete
  6. இனிமேலும் குள்ளநரி அரசியல்வாதிகளான மைத்ரி, ரணிலை நம்பி ஏமாறுவதைவிட தப்புசெய்தனக்கு மன்னிப்புக்கொடுத்து அவனை சேர்த்துவாழ்வது மேலென தோன்றுகிறது.எனவே நாம் அனைவரும் இவர்களிமிருந்து விடுபடுவதை முதலில் செய்யவேண்டிய காலத்தின் கட்டாயத்திலுள்ளோம். இவர்கள் ஒரு நேர்மையான அரசியல் தலைவர்களல்ல

    ReplyDelete

Powered by Blogger.