Header Ads



முஸ்லிம் அமைச்­சர்கள், என்ன செய்ய போகின்­றனர்...? சுனில் ஹந்­துன்­நெத்தி கேள்வி

முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது. இதன்­மூலம் நோன்பு நோற்கும் மக்­களின் ஊடாக வரு­மா­னத்தை ஈட்­டவே அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. எனவே இது தொடர்­பாக முஸ்லிம் அமைச்­சர்கள் என்ன செய்ய போகின்­றனர்? அவர்கள் பதில் வழங்­கு­வார்­களா என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி கேள்வி எழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் விசேட வியா­பார பண்ட அற­வீட்டு சட்­டத்தின் மீதான விவா­தத்தில் கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது. விசேட வியா­பார பண்ட அற­வீடு மூலம் பேரீச்­ச­ம்ப­ழத்­திற்­கான வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. வெங்­காயம், உருளைக் கிழங்கு இறக்­கு­மதி உணவு வகையில் அதி­க­ரிப்­பதன் ஊடாக பயிர்­செய்­கை­யா­ளர்கள் இலாபம் பெறு­வார்கள் என கூற­மு­டியும். எனினும் பேரீச்­ச­ம்பழ வரி அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றது என்றால் இங்கே பேரீச்சம்பழம் பயி­ரி­டப்­ப­டு­கின்­றதா? பேரீச்­ச­ம்பழ பயிர்­செய்­கை­யா­ளர்கள் இலங்­கையில் உள்­ள­னரா?  இல்லை; நோன்­பா­ளிகளை வைத்து அர­சாங்கம் தனக்கு இலாபம் ஈட்­டவே முயற்­சிக்­கி­றது. இது பெரும் அநி­யா­ய­மாகும்.

எனவே இது தொடர்­பாக அர­சாங்­கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்­சர்கள் என்ன செய்யப்போகின்­றனர்? பெரி­தாக தம்மை முஸ்லிம் தலை­வர்கள் என அறி­மு­கப்­ப­டுத்­து­ப­வர்கள் என்ன பதில் வழங்க போகின்­றனர்? 

அத்­துடன் சீனா­வுடன் இம்­மாதம் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­ததை அர­சாங்கம் கைச்­சாத்­தி­ட­வுள்­ளது. இதனால் இலங்­கையின் உள்­நாட்டு உற்­பத்­தி­யா­ளர்கள் பெரு­ம­ளவில் பாதிக்­கப்­ப­டுவர். சீனர்கள் இலங்கை வந்தால் பீல்ட் மார்­ஷ­லினால் கூட ஒன்றும் செய்ய முடி­யாது. தற்போது சீனர்கள் அமெரிக்காவை கூட ஆக்கிரமித்துள்ளனர். எனவே பெரிய சந்தையை கொண்ட நாட்டுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு அரசாங்கம் என்ன செய்ய போகின்றது என கேள்வி எழுப்பினார். 

8 comments:

  1. VERY GOOD EXPLANATION AND QUESTION

    ReplyDelete
  2. வாய் மூடி மவுனமாக இருந்தாள் அரசாங்கம் இவர்களுக்கு commission கெடுக்கும். மானம் கெட்ட நாதாரிகள் இவர்கள்

    ReplyDelete
  3. ஐயோ பாவம்,
    சும்மா சும்மா ஏங்கட தலைவர்களை குறை கூற வாணாம்.

    நீங்க சொன்னத்துக்கப்புறம் தான் அவங்களுக்கே இந்த விஷயம் தெரிய வந்திருக்கும்.

    இனிதான் அவங்க வியூகம் வகுப்பங்க, இத வெச்சி எப்படி அரசியல் இலாபம் அடையிறதெண்டு??

    so, கொஞ்சம் பொறுமையா இருங்கோ அவங்க நல்லதொரு தீர்மானத்துக்கு வருவாங்க.

    ReplyDelete
  4. Mr. அப்துல் , நீங்கள் மிக சரியாக சொன்னீர்கள். இது எங்ககட மாடுகளுக்கு கணக்கே இல்லே. இதைப்பற்றி பேசினால் ஏனைய வரப்பிரசாதங்களை அடைய முடியாதல்லவா.

    ReplyDelete
  5. Where is Mr. Risad Bathiudeen. Did he instruct this price increase. Another Minister is trying to increase the water tariff. He is a nice guy helping government to make some bucks..

    ReplyDelete
  6. Rishad Bathideen will tell that we have got good quality of dates from Saudi Arabia; that is the reason for price increase.

    ReplyDelete
  7. இந்நாட்டில் நோன்பு பிடித்துக் கேட்ட துஆக்கள் -  பிரார்த்தனைகள் அரசியல் மற்றும் யுத்த  விதிகளை மிகத் தெளிவாக மாற்றியமைத்து  இருக்கின்றன.

    அதிலும்,  நோன்பு திறப்பதற்குப்  பயன்படுத்தும் பேரீச்சம்பழத்தின் விலையை, நோன்பாளிகளுக்குப் பாதகமாக அனாவசியமாக அதிகரித்தால் அதற்கான சரியான விலையை அரசாங்கம் கொடுக்க வேண்டிவரும்.

    காரணம் அவை பெறுமதி கூடிய பிரார்த்தனைகள்.

    ReplyDelete

Powered by Blogger.