Header Ads



அறிமுகமில்லாதவர் அருகில் ஜனாதிபதி - புகைப்படத்துக்கு மாறுப்பட்ட கருத்துக்கள்

சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும்  போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் ஒன்று பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வாவினால் எடுக்கப்பட்டு அவரது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த பதிவில், “நான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும் வர்த்தக விமானத்தில் இந்த புகைப்படத்தை எடுத்தேன்.

இலங்கை நாட்டின் ஜனாதிபதி இதற்கு முன்னர் அறியாத பயணிக்கு அடுத்தபடியாக, வியாபார வகுப்பில் அமர்ந்துள்ளார். நான் உண்மையாக நல்ல விடயத்தை உணர்ந்தேன். நான் பிரதமருடன் பலமுறை பயணம் செய்துள்ளேன். அவரும் அவரது மனைவி மைத்திரியும் இதே போன்று எளிய முறையில் பயணித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட போது, இலங்கை விமானப்படையின் கட்டளைத் தளபதிகள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை நினைவுபடுத்துகிறேன். பல முறையில் மஹிந்தவின் பயணங்களுக்கு அக்காலக்கட்டத்தில் விமானசேவையின் தலைவராக இருந்த அவரது மைத்துனரினால் தனிப்பட்ட விமானங்கள் வழங்கப்பட்டதனை காண முடிந்தன.

ராஜபக்ஷ ஆட்சியில் விசேட விமானத்தில் பல்வேறு நபர்கள் பயணங்களை மேற்கொண்டனர். இதற்காக பெருந்தொகை பணம் செலவிடப்பட்டது. இதனால் நாட்டுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டது என்று பதிவேற்றியுள்ளார்.

இந்த பதிவேற்றத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ள போதும் பல எதிர்ப்பான கருத்துக்களையும் பதிவேற்றியுள்ளனர்.

1 comment:

  1. When any aircraft problem occurs while flying people sitting on all classes (business, exonomy) are affected. If a person sitting in business class and feels he is safe then he is stupid. On going racist attack against minorities does not affect the majority leadrship bec. they feel they are safe and strong but at last we are all on board going to crash.

    ReplyDelete

Powered by Blogger.