Header Ads



ரமழானின் நபியவர்கள் சொல்லாத, செய்யாத விடயங்களைத் தவிர்ப்போம்..!

-அஷ்ஷைக் அல்ஹாபிழ் M.J.M Safran-

"தராவீஹ்" என அழைக்கப்படும் தொழுகையில் ஒவ்வொரு இரண்டு ரக்ஆத்துக்களுக்கிடையில் சப்தமாக அனைவரும் திக்ர், ஸலவாத்துக்கள்,துஆ ஆகியனவற்றை ஓதுகின்றனர்.இங்கு மிக முக்கியமான ஒரு விடயம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்.எவ்வழிமுறைக்கு அடிப்படையாக அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் வழிகாட்டவில்லையோ அதனை நன்மை பெற்றுத்தரும் எனக் கருதிச்செய்வது தெளிவான நூதனமாகும்( பித்அத்தாகும்).
ஏன் திக்ர்,ஸலவாத், துஆ என்பவற்றை ஓதுவது தவறா?? என ஒரு கேள்வி எழலாம்.

நிச்சயமாக அது தவறே கிடையாது.அது தனிப்பட்ட நபர்களோடு இரகசியமாக தொடர்புபட்டு இருக்கும் வரை.அதனை ஒரு சில வணக்கங்களோடு தொடர்புபடுத்தி குறிப்பாக்கிச் செய்வது நபி வழிகாட்டலுக்குப் புறம்பான ஒன்றாகும்.((கவலையான விடயம் என்னவெனில் திக்ர், ஸலவாத் ஓதுவதை ஆரம்பித்து வைக்கவில்லை  என்பதற்காக உலமாக்கள் பள்ளிவாயல் கடமைகளை விட்டும் நீக்கம் செய்யப்பட்ட வரலாறுகளும் உண்டு.))

ரக்ஆத்துக்களுக்கிடையே இவற்றை ஓதலாம்.ஆனால் இரகசியமாக பொருளுணர்ந்து உள்ளத்தால் ஓத வேண்டும்.அதை விடுத்து ஸலாம் கொடுத்த பின்னர் பள்ளியை முழக்குவது அடிப்படையற்ற ஒரு செயலாகும்.
நம்முடைய மூதாதையர் செய்தது,அதனை நாங்கள் அப்படி விட்டுவிட முடியாது என்பவர்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதில் தாருங்கள்,உங்களுடைய மூதாதையர் எனப்படும் பாட்டன் பூட்டன் செய்தது மார்க்கமா? அல்லது அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் கொண்டுவந்தது மார்க்கமா??

சட்டமியற்றும் அதிகாரத்தை உங்களுடைய மூதாதையருக்கு வழங்கியது யார்???இது விடயத்தில் கவனமாக சிந்தித்து செயலாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.சமூகத்துக்கு உரிய தெளிவை வழங்காது கண்ணியமிக்க ரமழானில் நூதனங்களை அரங்கேற்றி  வயிற்றுப்பிழைப்பு நடாத்துவோர் நரக நெருப்பை அஞ்சிக்கொள்ளட்டும்.

தராவீஹ் என்றாலே ஓய்வு எடுத்தல் எனப்பொருளாகும்.ஆனால் இன்று இரண்டு ரக்ஆத்துக்களின் வேகத்தை அவதானித்தால் இது யாருக்காகத் தொழப்படும் தொழுகை என எண்ணத்தோன்றுகிறது.அந்தத் தொழுகைக்கு வேறொரு பெயரும் அவசியப்படுகின்றது..முழுமையாக தன்னுடயை தொடர்பை ஆகுமாக்கிய உண்ணல், பருகல்,உடலிச்சை போன்றவற்றத் தவிர்ந்து அல்லாஹ்வுக்காக பொறுமை காத்த நாம் ,சகல உண்ணல்களுடனும்,குடிப்புக்களுடனும் ஏன் இரவு வணக்கத்தில் நமது தொழுகையை ஓய்வெடுத்துத் தொழுகின்ற ரம்மியமான தொழுகையாக அமைத்துக்கொள்ளக்கூடாது.எனவே எமது இராத்தொழுகைகளை உயிரோட்டமுள்ளதாக அமைத்துக்கொள்வோம்.

இது விடயத்தில் சமூகத்துக்கு  தெளிவை வழங்க வேண்டியது கண்ணியமிக்க உலமாக்களது பொறுப்பாகும்.சமூகம் கேட்கிறது. அல்லாஹ்வின் கட்டளையை,உள்ளதை உள்ளபடி,நபியவர்களின் சொல்,செயல் அங்கீகாரமான ஸுன்னாவை, நடைமுறைப்படுத்த அழகிய உபதேசங்கள் மூலம் சமூகத்துக்கு வழிகாட்டுவோம்.

6 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமையான காலத்தை கவனத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ளது,8.20 என்ற பிரச்சினை ஒரு பக்கம் இருக்க இரண்டு ரக்கஅத்தையாவது அழகாகவும் நீளமாகவும் சீராகவும் அதிகமின துஆக்களை றுக்குஉ சுஜுதுகளில் செய்து தொழுதோமா என்பதை விட சிலருக்கு எண்ணிக்கை மட்டும் அதிகம் இருக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்,பணத்துக்காக தராவீஹ் தொழுவிக்கும் சில உலமாக்கள் மக்களை வழி கெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்,முறைப்படி அல்ஹம்து ஓதப்படுவதும் இல்லை ஏனைய சூராக்கள் ஒழுங்கு முறைப்படி மக்கள் புரியும் படி அமைதியாக ஓதுவதும் இல்லை ,மக்கள் அழகாக விளங்க முடியாது என்றால் இவர் ஓதுவதில் என்ன பலன் இருக்கிறது,இனியாவது குறைந்தளவு ஓதினாலும் குறைந்தளவு தொழுதாலும் அழகாக செய்ய முயற்சி செய்வோம்,வெயிற்றுப் புளப்பு என்ற நிய்யத்தை மறந்து அல்லாஹ்வுக்காக என்ற நிய்யத்தை வைப்போம்.

    ReplyDelete
  2. ஒரு குழும பதிவில் copy

    தராவீஹ்:

    இரவில்,
    தராவீஹ் தொழுகிற ஆக்கள் தராவீஹ் தொழுங்கோ
    கியாமுல் லைல் தொழுகிற ஆக்கள் கியாமுல் லைல் தொலுங்கோ

    தராவிஹ் ரகத்:

    இருபது தொழுகிற ஆக்கள் இருபது தொழுங்கோ
    எட்டு தொழுகிற ஆக்கள் எட்டு தொழுங்கோ

    துஆ:

    சேர்ந்து கேக்கிற ஆக்கள் சேர்ந்து கேளுங்கோ
    தனியக் கேக்கிற ஆக்கள் தனியக் கேளுங்கோ

    பிறை:

    சர்வதேசம் பார்க்கின்ற ஆக்கள் சர்வதேசம் பாருங்கோ
    உள்ளூர் பார்க்கின்ற ஆக்கள் உள்ளூர் பாருங்கோ

    விரல்:

    நீட்டுற ஆக்கள் நீட்டுங்கோ
    ஆட்டுற ஆக்கள் ஆட்டுங்கோ

    தக்பீர்:

    நெஞ்சில கட்டுற ஆற்கள் நெஞ்சில கட்டுங்கோ தொப்புள்ள கட்டிற ஆட்கள் தொப்புள்ள கட்டுங்கோ

    27ம் இரவு:

    அமல் செய்ற ஆட்கள் அமல் செய்ங்கோ சும்மா இருக்கிற ஆக்கள் சும்ம இருங்கோ

    அல்லாஹ்வுக்காக நோன்புக்குள்ள சண்டை மட்டும் பிடியாதங்கோ; சமூகத்த பிரிக்காதங்கோ சில்லற பிரச்சினைகளை வைத்து சண்ட பிடிக்காதங்கோ

    சண்டை:

    தொழுகையில பள்ளிக்குள்ள சண்டை பிடிக்காதங்கோ

    முடியுமானால்

    மக்கள் மதம் மாறி குப்ர் உள்ளே போறாகோ அவர்கள காப்பாற்றுங்கோ

    சிரியாவில மவ்த்தாகிறாகோ
    மியன்மார்ல முஸ்லீம்கள் அடிப்படுகிறாகோ அவர்கள காப்பாத்துங்கோ

    மனிசன நோன்பு பிடிக்க விடுங்கோ..
    அமல் செய்ய விடுங்கோ...

    கவிதை:
    அமானத்ஸ்

    ReplyDelete
  3. Subhanallah

    ReplyDelete
  4. Subhanallah

    ReplyDelete
  5. This ignorant moulavi doesn't know that in the Time of Sahabas they used to do Dawaf around the Kaaba in every four rakaas of Tarawih, So what is the problem with reciting salawatha or thikr between every two rakaas , These Wahhabis want to destroy the good deeds in the Name of BITAA. Please Be Aware.

    ReplyDelete

Powered by Blogger.