Header Ads



ஜனாதிபதி மைத்திரியின், இனவாத முகத்தை அறிந்துகொள்ள..?

(அ.அஹமட்)
மஹியங்கனையின் சு.க அமைப்பாளர் பதவி பொது பல சேனாவின் தீவிர செயற்பாட்டாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இவர் பொது பல சேனாவை மஹியங்கனை அழைத்து வருவதிலும் முஸ்லிம்களுக்கு எதிரான சுவரொட்டிகளை ஒட்டி இனவாத செயல்களை முன்னெடுத்ததிலும் முக்கிய பணியாற்றியிருந்தார்.இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன போன்ற பல குற்றச் குற்றச் சாட்டுக்களை மகியங்கனை வாட்டறக்க விஜித தேரர் சுமத்தி வருகிறார்.அவர் இவருக்கும் பொது பல சேனாவிற்கும் இடையிலான தொடர்புகளை பல்வேறு வழிகளிலும் நிறுவியும் இருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் பொது பல சேனாவின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாத போதும் பொது பல சேனாவின் முக்கியஸ்தர்களுக்கு பதவி ரீதியான கௌரவம் வழங்கப்படவில்லை. இவ்வரசு பொது பல சேனாவின் செயற்பாடுகளை வேடிக்கை பார்ப்பதோடு மாத்திரமல்லாது அவ் அமைப்பின் தீவிர செயற்பாட்டாளர் ஒருவருக்கு சு.க அமைப்பாளர் பதவியையும் வழங்கி அழகு பார்க்கின்றது.இதனூடாக இவ்வாட்சியானது பொது பல சேனாவின் பங்களிப்புடன் உருவான ஆட்சி என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.பங்காளர்களுக்கு தானே பதவி வழங்கலாம்.

பொது பல சேனாவின் முக்கியஸ்தர் ஒருவருக்கு சு.கா அமைப்பாளர் பதவி வழங்கப்படும் போது முஸ்லிம்களுக்கு,தன் மீதான வெறுப்பு அதிகரிக்கும் என்பதை ஜனாதிபதி மைத்திரி நன்கே அறிவார்.இதனை அறிந்தும் ஜனாதிபதி மைத்திரி அவருக்கு தனது கட்சியின் அமைப்பாளர் பதவி வழங்குகிறார் என்றால் தனது அரசியலை முஸ்லிம்களை புறக்கணித்து முன்னெடுத்துச் செல்ல சிந்திக்கின்றார் என்பதே அது கூறி நிற்கும் செய்தியாகும்.இன்று முஸ்லிம்கள் செறிந்து வாழும் இறக்காமத்தில் பௌத்த மடாலயம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.ஜனாதிபதி மைத்திரி வெளிநாட்டில் வைத்து முஸ்லிம்களின் காணிகளை வனமாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியில் கையொப்பமிட்டிருந்தார்.இப்படி பலவற்றை கூறலாம்.இவற்றின் பின்னால் இவ்வாறான சிந்தனைகளும் இருக்கலாம்.

அண்மைக் காலமாக மஹியங்கனையில் வாழும் முஸ்லிம்களுக்கும் பெரும் பான்மை இன மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகின்றமை யாவரும் அறிந்ததே.இந் நிலையில் மஹியங்கனையை சேர்ந்த பொது பல சேனாவின் ஆதரவாளருக்கு சு.க அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதானது அவர்களை அதிகார ரீதியாக பலப்படுத்துவதாக அமையும்.இதன் பிறகான அவர்களின் செயற்பாடுகள் தைரியமாக முன்னெடுக்கப்படும்.மஹியங்கனையில் பொது பல சேனாவை பலப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களை அதிகரிக்கவே ஜனாதிபதி மைத்திரியினால் இவ் அதிகாரம் வழங்கப்பட்டதோ தெரியவில்லை.


முஸ்லிம்கள் ஜனாதிபதி மைத்திரியின் இனவாத முகத்தை அறிந்துகொள்ள இவைகளே போதுமான சான்றாகும்.இதன் பின்னரும் முஸ்லிம்கள் தெளிவு பெற வில்லையாயின் மிகப் பெரும் விலை கொடுக்க நேரிடலாம்.பொது பல சேனாவின் கொட்டத்தை அடக்காமையினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பூரணமாக நிராகரித்து ஜனாதிபதி மைத்திரி ஆட்சியமைக்க உதவிய முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி மைத்திரி செய்யும் கைம்மாறு இது தானோ?

1 comment:

  1. இனிமேலும் குள்ளநரி அரசியல்வாதிகளான மைத்ரி, ரணிலை நம்பி ஏமாறுவதைவிட தப்புசெய்தனக்கு மன்னிப்புக்கொடுத்து அவனை சேர்த்துவாழ்வது மேலென தோன்றுகிறது.எனவே நாம் அனைவரும் இவர்களிமிருந்து விடுபடுவதை முதலில் செய்யவேண்டிய காலத்தின் கட்டாயத்திலுள்ளோம். இவர்கள் ஒரு நேர்மையான அரசியல் தலைவர்களல்ல.

    ReplyDelete

Powered by Blogger.