May 17, 2017

ஞானசாரரை சிறையில் அடையுங்கள், இல்லையேல் முஸ்லிம்கள் வீதிக்கு வரும் விபரீதம் ஏற்படும்

பௌத்த தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் வன்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்வினவாத வன்செயல்கள் உடன் நிறுத்தப்படும் வகையில் இச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை அரசு உடனடியாக கைதி செய்ய வேண்டும். அத்தோடு இனவாத செயற்பாட்டு பிரதானியான ஞானசார தேரருக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் ஏனைய செயற்பாட்டாளர்கள் அடங்கிப்போகின்ற நிலை ஏற்பட வழிவகுக்குமென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
    
முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைக்கால இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 

இதன்போது ஞானசார தேரர் முஸ்லிம்களின் ஏக இறைவனான எல்லாம் வல்ல அல்லாஹ்வையும், புனித அல்-குர்ஆனையும் தூசித்து மிக மோசமாகப் பேசி இருக்கின்றார். இது முஸ்லிம்களை சண்டைக்கு வலிந்திளுக்கின்ற செயலாகவே இருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் இந்நல்லாட்சியை உருவாக்குவதற்கான தேர்தல் கால பிரச்சாரத்தின் போது 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதமாக செயற்படுகின்ற ஞானசார தேரரை நாயை இளுத்துச் சென்று அடைப்பதுபோன்று சிறைக்குள் தள்ளி தகுந்த நடவடிக்கை எடுப்போம்' என்று கூறி மக்களின் வாக்குப் பெற்று ஆட்சிக்கு வந்தார்கள். 

எனவே இவ்வரசிடம் நாங்கள் வேண்டுவது சந்திரிகா கூறியது போன்று நாயை கட்டி இளுத்துச் சென்று அடைப்பதுபோன்று இவரை சிறையில் அடையுங்கள், இல்லாவிட்டால் முஸ்லிம் இளைஞர்களும் மக்களும் பொறுமை இழந்து வீதிக்கு வருகின்றபோது பெரும் விபரீதம் ஏற்படும். 

முஸ்லிம்களுக்கு எதிர்வரும் காலம் புனித ரமழான் நோன்பை நோக்கும் மாதமாகையால் முஸ்லிம்கள் அதிகமாக இரவுநேர வணக்கங்களில் ஈடுபடுகின்ற காலமாக காணப்படுகின்றது. இந்நிலையில் இனவெறியர்களின் இவ்வாறான செயற்பாடு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு தம்மை தற்காத்துக் கொள்ளவேண்டிய தேவையும் உருவாக்கப்பட்டுள்ளது.
  
எனவே அரசு இவர்களின் விசமத்தனமான பிரச்சாரங்களையும் இனவாத செயற்பாட்டையும் பார்த்து ரசிக்காது அவர்களை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் நாட்டின் அமைதியை சீர்குலைத்து இனங்களுக்கிடையில் மோதல் ஏற்படுவதை தடுக்க வேண்டும். அத்தோடு முஸ்லிம்கள் எவ்வித பீதியுமின்றி புனித ரமழான் மாதத்தில் தமது இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுவதற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.    

6 கருத்துரைகள்:

do not bark as road side dog, give this statement in the parliament. are you being as a parliament member and minister for what?

சரி சீதேவி பிரதமர் சீனாவுக்கு வெள்ளை புடவை வாங்க போய் இருக்கிறார் உமது தலைவரோடு அந்த வேள்ளபுடவை வந்தவுடன் அதை ஜனாதிபதி மாளிகை கதிரையில் விரித்து இந்த பயங்கரவாதி ஞானசாராய் இருப்பாட்டி ஜனாதிபதி காலில் விழுந்து கும்பிட்டு விட்டு பேச்சுவார்த்தை நடத்துவார்.பொறுமையாக இருங்கள்.அரை அமைச்சர் அவர்களே உங்களின் தலைவரை தண்ணீர் தெழுத்து எழுப்பி விடுங்கள்.

இவரின் தலைவர் வந்தவுடன் கல்முனையில் அல்லது புத்தளத்தில் அல்லது வடக்கில் எங்காவது கொழும்பில் இருந்து தூரமான இடத்தில் மேடை போடுன்ங்கள் அறிக்கை விடுவதற்கு.

அறிக்கை விட்டு ஆனது என்ன? நக்குன்டார் நாவிழந்தார்... இதுதான் உங்களைப் போன்ற சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளின் நிலைமை...

WE ARE MUSLIMS.WE ARE NOT PRACTISE ISLAM IN OUR DAILY LIFE.ONLY ONE SUBJECT 5TIMES PRAYES.HOW MANY% WE ARE PRAYING FAJR IN OUR MAHALLA (MASJIDH)?THEN HOW ALLAH WILL HELP US?PLEASE DONT BLAME GANASARA OR OTHERS.WE OBEY ORDER OF ALLAH
THEN ALLAH WILL PROTECT US INSHA ALLAH

வீராதிவீர சூராதிசூர மாத்தாண்ட மர வீரன் ....? வந்திட்டான்டா...இல்ல வரப்போராண்டா.....?
லூசிப்பயலுகாள் நீங்க வீதிக்கு இறங்குங்கள் அல்லது கடலுக்க இறங்குங்கள். ஆனால் சமூகம் இறங்க வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை. நீங்க கூட்டத்தோட பாராளுமன்ற கதிரையிலிருந்து தியவண்ணோயா வாவிக்குள் இறங்கும் காலம் இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவிலேயே வரும்.
இச்சமூகத்தின் சாபக்கேடு உங்களைச் சும்மா விடாது.
மானங்கெட்ட பிழைப்பு நடாத்தும் உங்களுக்கு கேடுகெட்ட வாக்காளர்கள் இருக்கும் வரையும் அல்லாஹ் உங்களை விட்டு வைத்திருக்கிறான் ஆனால் நீண்டகாலம் செல்லாது.

Post a Comment